K.ரவி ஸ்ரீநிவாஸ்
திராவிட இயக்கம் குறித்த கருணாநிதியின் அறிவிப்பு இடதுசாரி கட்சிகளை முன்மாதிரியாக என்று குறிப்பிட்டாலும் அதில் தெளிவில்லை. 1964ல் பொதுவுடமை இயக்கம் பிளவுபட முக்கியாமான காரணங்கள் கருத்து ரீதியானவை, நடைமுறை யுக்தி குறித்தவை. ஆனால் 1993 திமுகவிலிருந்து மதிமுக உருவான காரணங்கள் வேறானவை. மதிமுக உருவாக கொள்கை குறித்த கருத்து வேறுபாடு காரணமல்ல. இன்றும் திமுக, மதிமுக இரண்டும் கருத்து ரீதியாக வேறுபடும் அம்சங்கள் முக்கியமானவையல்ல. இரண்டு கட்சிகளும் இடதுசாரி கட்சிகளிலிருந்து கற்க வேண்டியவை பல. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இடது சாரிக் கூட்டணி பல பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் வலுவிழக்காமல் உள்ளது. 2001 ல் வலுவான கூட்டணி அமைக்கமுடியாததே திமுக வின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரே கட்சியாக தேர்தலை எதிர்கொள்ளக்கூடும்.கருத்தியல் ரீதியாக தோழமையுள்ள தேர்தல் அரசியலில் ஈடுபடாத கட்சிகள்,அமைப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய திராவிட இயக்கம் அமைப்பது குறித்து திமுக,மதிமுக யோசிக்க வேண்டும். இது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட பணிகளையாற்ற உதவும்.அப்பணிகளின் முக்கியத்துவத்தினை இரு கட்சிகளும் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.
தெரிதா-ஹேபர்மாஸ் – இன்று மிகவும் மதிக்கப்படும் இந்த இரண்டு தத்துவவாதிகளும் மே மாதம் ஐரோப்பாவின் அயலுறவு கொள்கை குறித்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். கருத்துலகில் துருவங்கள் என கருத்தப்படும் இருவரும் அமெரிக்காவின் மேலாண்மை குறித்து ஒத்த கருத்தினைக் கொண்டுள்ளனர்.
பயங்கரவாதம் குறித்து தங்கள் கருத்த்துகளை ஒரு நூலில் உரையாடல் மூலம் தெரிவித்துள்ளனர். Philosophy in a time of terror என்ற நூலில் giovanna borradori என்ற பேராசிரியருடன் தனித்னியே இருவரும் உரையாடியது பதிவாகியுள்ளது.இது தவிர இருவரின் கருத்துகள் குறித்து இரண்டு கட்டுரைகள் உள்ளன, ஒரு அறிமுகக் கட்டுரையும் உள்ளது. இதனை நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.
ஹேபர்மாஸ்-தெரிதா கூட்டறிக்கையை சுட்டிகாட்டி இந்திய அரசியலில் நவீனத்துவம்,அரசு,தலித் அரசியல், நவீனத்துவ எதிர்ப்பாளர்களின் நிலைபாடுகள் குறித்த ஒரு முக்கியமான கட்டுரை, Left-liberalism and Caste Politics,நளினி ராஜன் எழுதியது ஜுன் 14 economic&political weeklyல் வெளியாகியுள்ளது.
சூசன் சொண்டாக் என்றதும் பலருக்கு புகைப்படம் குறித்த அவரது நூல் நினைவிற்க்கு வரும். போர்க்கால புகைப்பட்டங்கள், ஊடகங்களில் போர் குறித்த புகைப்படங்கள், ஒவியத்தில் போர்/ சித்திரவதைக் காட்சிகள் குறித்து அவர் எழுதியுள்ள நூலை சமீபத்தில் படித்தேன்.பிறரின் வலியை, துயரை நாம் உணர இவை உதவுமா , தொடர்ந்து இவை ஊடகங்களில் இடம் பெறுவதால் அவை அதிர்ச்சி கூட தராமல் போய்விடுமா போன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். விரிவாக இந்நூல் எழுப்பும் கேள்விகள் குறித்து பேச வேண்டும்
Regarding the Pain of Others-Susan Sontag-New York:Farrar,Straus and Giroux-2003
1958 க்குப்பின் பிரான்சின் அரசியல் சட்டம் இப்போது மாற்றப்படுகிறது.சுற்றுச்சூழலை பாதுகாப்பது அதன் முன்னுரை(preamble)யில் இடம் பெறுகிறது.இதன் மூலம் மனித உரிமைக்குரிய முக்கியத்துவம் இதற்கு தரப்படுகிறது.பத்து ஷரத்துகள் கொண்ட இந்த பிரகடனத்தில் polluter pays principle என்பதும் இடம் பெறுகிறது.இது தவிர குடிமக்களின் உரிமைகள்,கடமைகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இதை விவாதித்த பின் இது பொது வாக்கெடுப்பு அல்லது காங்கிரஸால் ஏற்கப்பட்ட பின்னர் அரசியல் சட்டத்தில் இடம் பெறும்.இந்திய அரசியல் சட்டத்தில் குடிமக்களின் கடமைகளில் சுற்றுச்சூழலைக் காப்பதும் இடம் பெற்றுள்ளது.
***
ravisrinivas@rediffmail.com
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- பணமே உன் விலை என்ன ?
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்