கடிதங்கள்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

ஏப்ரல் 13, 2003



ராமபக்தர் ஆர்..ரஃபீக் என்பவர் நான் ராமரைப் பற்றி ரசாபாசமாக எழுதியிருப்பதாகப் பொத்தாம் போக்கில் சொல்கிறார். ராமரைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை என்பது எல்.கே.ஜி படிக்கிற ரஃபீக்குகளுக்குக் கூட தெரியும். அயோத்தியில் ராமர் குளித்த இடம் இது, சீதா தேவி சமைத்த இடம் இது என்று சொல்லுகிற பக்தி டூரிஸ்ட் கைடுகள் சொல்வதுதான் ரசாபாசம். அதை சுட்டிக்காட்டத்தான் குழந்தை ராமர் கட்டிய தங்கக்கோவனம் அகழ்வாராய்ச்சியில் கிட்டுமா, ராமர் பயன்படுத்திய கக்கூசின் ( குளிக்கிறவர், சாப்பிடுகிறவர் கக்கூசுக்கும் போய்தானே ஆகவேண்டும் ) இடிபாடுகள் அகழ்வாராய்ச்சியில் கிட்டுமா என்று கேட்டிருக்கிறேன். ரசாபாசம் செய்கிறவர்கள் பக்தர்கள் வேடங்கட்டி வருகிற ரஃபீக்குகள்தானே தவிர நான் அல்ல. அரவிந்தனின் கட்டுரைக்கு ந ‘ன் கண்டனம் தெரிவித்ததை சமன் செய்வதற்காக என்னை திட்டும் கடிதம் போட்டு சமன் செய்ய திண்ணை ஆசிரியர் குழு முயலவேண்டாம். இது அல்பமான ஜர்னலிசம்.

ஞாநி

dheemtharikida@hotmail.com


ஆசிரியருக்கு

திண்ணையின் முகப்புச்சித்திரம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது . என் அபிமான எழுத்தாளர். நன்றி .சென்ற சில இதழ்களுக்கு முன்னர் ஒருவர் ஜெயமோகன் திண்ணையை சுயவிளம்பரத்துக்கு பயன்படுத்துவதை திண்ணை தடுக்கவேண்டுமென எழுதியிருந்தமைக்கு திண்ணையின் பதில்போல அமைந்திருந்தது .அப்போதே எழுத எண்ணினேன் என்றாலும் எதற்கெல்லாம்தான் எழுதுவது என்ற சலிப்பு ஏற்பட்டுக்கொண்டது

ஜெயமோகனைப்போன்ற ஒர் எழுத்தாளருக்கு எதற்கு திண்ணையி ல் சுயவிளம்பரம் ?அவருக்கே இணைய இதழ் இருக்கிறது. சிற்றிதழ் இருக்கிறது. இன்று தமிழில் அவர் எதை எழுதி அனுப்பினாலும் போடத்தயாரகவே எந்தப் பிரபல இதழும் உள்ளன என்றுதான் சொன்னார்கள் . அவர் எழுதிய அனைத்துமே கவனத்துக்கு வருகின்றன. ஒரு தலைமுறைக்கு முன்பு ஜெயகாந்தனுக்கு இருந்த முக்கியத்துவம் இது. அவரை நிராகரிப்பவர்கள் கூட இன்று அவரே மிக அதிகமாக கவனிக்கப்படும் எழுத்தாளர் என்பதை மறுக்க மாட்டார்கள் .

திண்ணையை எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் ஜெயமோகன் அதிகமாக எழுதும் இதழ் என்பதே அதன் விளம்பரமும் முக்கியத்துவமும் ஆகும்.பலர் இங்கு படிப்பதே அதற்குத்தான். சமீபத்தில்கூட ஓர் எழுத்தாளர் மேடையில் ஜெயமோகன் எழுதும் ‘ஒரு ‘ இணைய இதழ் என்றே அதைப்பற்றிச் சொன்னார். அது இயல்புதான் . எந்த இதழும் அதில் எழுதுபவர்கள் மூலமே அறியப்படும். குறிபீட்ட வாசகர் ஒருவகை காழ்ப்பின் மூலமோ அல்லது சுயவிளம்பர ஆசையினாலோதான் அப்படி எழுதியிருக்கவேண்டும் .தன்னுடைய சிறுமையை மட்டுமே அவர் அதன்மூலம் காட்டிக் கொண்டிருக்கிறார் . எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டிருக்கும்.

மாடன் மோட்சம் கதை பலவகையான நினைவுகளை எழுபியது .நான் சென்னைக்கு வந்தபோது அழைத்து சோறுபோட்ட அற்புதமான மனுஷர் பொன் விஜயன் .அவரது புதிய நம்பிக்கை சஞ்சிகையில் இந்தக் கதை வந்திருந்தது. அழுக்குத்தாள் சஞ்சிகை அது . நூற்றைம்பது காப்பிகளே அச்சிட்டதாக சொன்னார் . அன்று எனக்கு இதன் வட்டார வழக்கு ஏறவில்லை .நல்லாக இருக்கிறது என்று சொன்னாலும் படிக்க முடியவில்லை . பிறகு இதேகதை பலமுறை பல இடங்களில் மறுபிரசுரமாநதைக் கண்டேன். நுட்பமான நகைச்சுவை உள்ள கதை.சரித்திரத்திலுள்ள நகைச்சுவையை காட்டுகிற கதை. ஒரு சாதனை.

ஆனால் எனக்கு இதன் கரு உடன்பாடாக இல்லை . மாடன் பெருந்தெய்வ முறையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் என்ன தப்பு ?அப்படித்தான் இன்றுவரை இந்து மரபில் நடந்து வருகிறது .உலகம் முழுக்க மைய ஓட்டத்தில் விளிம்புகள் சேர்வது நடக்கிறது. என் சாமியும் உன்சாமியும் ஒன்று என்பது உயர்வான விசயம்தானே ? சமூகம் ஒன்றாக ஆவது இப்படித்தானே ? மாடனுக்கு வேதம் ஓதுகிறார்கள் என்றால் வேதம் இறங்கி வருகிற்து என்பதுதானே அர்த்தம் ? அப்பியை துரத்திவிடுவது கொடுமைதான். பிராமண பூஜைகள் அவசியமில்லைதான்.ஆனால் இணைப்பே தப்பு என்ற தொனி இதில் இருப்பது அவசியமில்லை . நேற்றுவரை சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள் என்பதே புகார். இன்றைக்கு சேர்க்க முயல்கிறார்கள் என்று புகாரா ?

இராக் சண்டையைப்பற்றி சின்னக்கருப்பன் எழுதியது நல்லாக இருந்தது .ஆனால் ஏன் இலங்கையை விட்டுவிட்டார்

அவர் ?

சிவம் கந்தராஜா


Dear Editor:

I read Alarmel Mangai ‘s story, ‘Rasikan ‘. A very well written story. I have been reading Thinnai for a while and I have read some of Alarmel Mangai ‘s stories. He/she writes around a mulititude of subjects. I dont know if the author is male or female. As the name suggests, if the autor is female, then I am happy that she does not confine her writing to a narrow feminism. If the author is male, then again I applaud him for also capturing the female psyche in some of his stories. Keep up the good work Alarmel Mangai!

Visu Balan


Dear Editor,

I am writing this to convey my pure joy on reading Jeyamohans short story ‘Maadan Motcham ‘. I has been a long time since I have read such a gripping and satisfying short story .

Real characters, flowing narration and honest and objective story telling. This will be among one of my all time favourites.

Thanks to Jeyamohan for this one

Regards

Karthikvelu


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஈராக் போரினால் இந்திய விளைவுகள் பற்றிய என் கட்டுரையைப் படித்துவிட்டு பலர் எனக்கு எழுதிய கடிதங்களில் இருக்கும் ஒரு பொது விஷயம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஆசியாவின் ஒரே சுதந்திர ஜனநாயக நாடு என்று இந்தியாவை குறிப்பிட்டதைப் பற்றியே அது. இந்த நாடு இல்லையா, அது இல்லையா, ஜப்பான் இல்லையா என்று கேடிருந்தார்கள். ஒரு முறை என் நண்பர் ஆசியாவில் ஒன்னரை ஜனநாயக நாடுகள் என்று குறிப்பிட்டார். (அரை பங்கு இலங்கையாம்). ஜப்பான், தென் கொரியா நாடுகள் ராணுவம் வைத்துக்கொள்வது அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது கூட பலருக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியம். நம் வெகு ஜன ஊடகங்கள் பற்றிய என் தாழ்ந்த அபிப்ராயம் இன்னும் தாழ்ந்து கொண்டே போகிறது.

நேற்று ஆதவன் தொலைக்காட்சியில் ஈராக் பற்றி பேசிய ஒரு முன்னாள் எம்பி, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் போன்றோர், ஈராக் ஒரு ஜனநாயக நாடு என்று குறிப்பிட்டார்கள். ஆச்சரியம்தான்.

சின்னக்கருப்பன்.


திண்ணைக்கு கல்லடி விழுவது புதிதில்லை என்றாலும், அவைகளுக்கெல்லாம் திண்ணை பதில் சொல்வதில்லை என்றாலும், ஞாநி என்ற மதிப்புக்குரிய பத்திரிக்கை ஆசிரியர் இந்த விமர்சனத்தை வைப்பதால் பதில் எழுத வேண்டும் என்றே இந்த குறிப்பு:

நாங்கள் தொழில்முறை ‘ஜர்னலிஸ்டுகள் ‘ அல்லோம். அதனால் எது ‘அல்ப ‘ ஜர்னலிசம் , எது ‘அல்பமில்லாத ‘ ஜர்னலிசம் என்று எமக்குத் தெரியாது. ரபீக் இதற்கு பதில் எழுதினால் அதனையும் திண்ணை பிரசுரிக்கும். சமன்செய்தது போல் தோன்றுமே என்பதற்காக எதிர்வினையை பிரசுரிக்காமல் இருக்கும் காரியத்தையும் திண்ணை செய்ய இயலாது.

அரவிந்தன் கட்டுரைகளில் இருக்கும் உண்மைகளுக்கும் கருத்துக்களுக்கும் திண்ணை பொறுப்பாளி அல்ல. திண்ணையில் எழுதும் யாருடைய கட்டுரைகளையும் வரிவிடாமல் படித்து அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் புத்தகங்களைத் தேடி அதன் உண்மையை உணர திண்ணை குழுவுக்கு நேரம் இல்லை. ஆனால், எவை உண்மைகள் (facts), எவை கருத்துக்கள் (opinion) என்று தரம்பிரிக்க திண்ணைக்குழுவுக்குத் தெரியும் என்றே கருதுகிறோம். ஞாநி, ஸ்ரீநிவாஸ் இருவருமே அரவிந்தனின் கருத்துக்களை உண்மைகள் என எடுத்துக்கொண்டு வாதிடுகிறார்கள். (ஞாநி 6 அடி உயரமானவர் என்று சொன்னால் அது உண்மை. பலராலும் பரிசோதிக்கப்படக்கூடியது. ஞாநிக்கு இந்தியாவின் ஞானவழி மீது மரியாதை கிடையாது என்று சொன்னால் அது கருத்து. ஞாநியே மறுத்தாலும் கூட அது கருத்துதான். ஏனென்றால் மரியாதை என்ற அகவயமான ஒரு புரிவு பலரால் பல விதமாய் புரிந்து கொள்ளப் படலாம். அது ஒரு விவாதப்பொருள். இருந்தாலும் இப்படி கருத்து சொல்லும்போதும் இந்தக் கருத்து எந்த ஆதாரங்களினால் பெறப்பட்டது என்று இன்னமும் தெளிவாக எல்லோருக்கும் சென்றடையும்படி சொல்ல வேண்டும் என்பது கட்டுரையாளர்களுக்குப் பாலபாடமாய் இருக்க வேண்டும். )

அரவிந்தனின் கட்டுரைகள் ஞாநி சொன்னதற்காக திண்ணையிலிருந்து நீக்கப்படாது. ஞாநியின் கட்டுரையும் ரபீக் சொன்னதற்காக நீக்கப்படாது. யாருடைய கருத்துக்களையும் விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ரபீக் சொல்வது மக்களின் மத உணர்வுகளை மதிப்பது என்ற உணர்வில் எழுந்த ஒன்று. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கோரலாமே தவிர அந்தக் கோரிக்கையை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது.

திண்ணைக்குழு

***

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts