06 ஏப்ரல், 2003
ஆசிரியருக்கு,
இவ்வார திண்ணையில் வாசிக்க நிறைய விஷயம் இருந்தது. சில இதழ்களில் ஒன்றுமே இல்லாதது போல ஆகிவிடுகிறது.
புஷ்.ன் மத மனநிலை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. ஜனநாயகத்தில் ஆழமான நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படி பாசாங்கு செய்வது சர்வாதிகாரத்தை விட அபாயகரமானது .அதை எதிர்ப்பது கடினம்.
போரின் நியாயங்கள் எப்போதுமே உலகம் முழுக்க ஒன்றுதான். அமெரிக்கா இராக்கை தாக்குவது ஒரு அக்கிரமம் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் காஷ்மீர் பண்டிதர்களை குழந்தை குட்டியுடன் தீவிரவாதிகள் கொல்லும்போது உலக இஸ்லாமிய நாடுகளில் அனேகமாக அனைத்துமே அதை சாதாரணமாக ஏற்றுக்கொள்கின்றன. சவூதி அரேபியா ,சிரியா, சூடான் , எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதற்கு நிதி உதவி செய்கின்றன. இந்த நிதி உலகம் முழுக்கவே வன்முறையை கிளப்பி அன்றாட வாழ்வை பாதித்து , வளர்ச்சிச் செயல்பாடுகளை தடுத்து, வறுமையையும் அறியாமையையும் பரப்புகிறது என்பதும் ஓர் உண்மை. அமெரிக்கத் தாக்குதல் இந்தப்பிரச்சினையை சிறியதாக்கிவிடாது ஒரு சந்தர்ப்பம் சார்ந்து உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையின் மற்ற தளங்களை காண மறுப்பது நம் வழக்கமாகிவிட்டது.
இரு அழிவுசக்திகள் தங்களுக்குள் போராடி அழிகின்றன என்ற எண்ணமே என் மனதில் ஏற்படுகிறது .
**
வரும் ஜூன் மாதம் நான் சிங்கப்பூர் ,குலா லம்பூர் வரும் திட்டத்துடன் இருக்கிறேன். சிங்கப்பூர் தேசிய நூலகம் சார்பில் அழைக்கப்பட்டிருக்கிறேன்.சிங்கப்பூர் பல்கலையில் ஒரு சிறுகதை பயிலரங்கு நிீகழ்த்தவும் அழைப்பு உண்டு.
பல நண்பர்கள் என்னை சந்திப்பது பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளனர். நேரடியாக கடிதம் போட்டால் அது ஒரு கட்டாயமாக அவர்களுக்கு ஆகிவிடக்கூடாதென்பதனால் இக்கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்
ஜெயமோகன்
அன்புள்ள திண்ணை ஆசிரியர்க்கு,
சென்ற சில திண்ணை தழ்களை ப்போது தான் நான் படித்தேன்.
ஞாநி எழுதிய கட்டுரை மிகவு தரக் குறைவானதாகவும், பிரசுரிக்கத் தகாததாகவும் ருந்தது. தயவு செய்து து போன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்காதீர்கள். ராமர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்களைத் திட்டுவது அவர் உரிமை. ஆனால் ராமர் கோடிக்கணக்கான மக்களால் தொழப்படுகிற நிலையில் ப்படி ரசாபாசமாக எழுதுவது சரியல்ல. ஞாநியின் கட்டுரை திண்ணை ணையப் பக்கத்திலிருந்து நீக்கப் படவேண்டும். ஞாநி ந்துக்கள் மனதைப் புண்படுத்தும் படி எழுதியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். ந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க நேர்ந்ததற்கு திண்ணையும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கோபப்படலாம் ஆனால் கோபத்திலும் ஒரு வரைமுறை வேண்டும். நாகரிகம் வேண்டும். சொற்களின் வன்முறையே செயலிலும் வன்முறையாய் மாறவல்லது.
ஆர் ரஃபீக்
மாட்டுச்சாணம் பற்றிய தன் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயரில் தொடர்ந்து இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் என் மீது ஒரு அவதூறை எந்த ஆதாரமும் இன்றி தெரிவித்திருக்கிறார். ‘ பாரத மண்ணுக்கே உரிய அறிவைக் கொச்சைப்படுத்தும் ஞாநி.. ‘ என்று எழுதுகிறார். இதற்கு என்ன ஆதாரம் ?
பாரத மண்ணுக்குரிய அறிவைக் கொச்சைப்படுத்துவது உண்மையில் அரவிந்தனின் அன்புக்குரிய ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட்டுகள்தான். தங்கள் அராஜகங்களை மறைத்துவிட்டு பிறர் மீது குறிப்பாக மதச்சார்பின்மையை வலியுறுத்தும் ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள்மீது அவர்கள் செய்யததை- சொல்லாததைசெய்ததாக சொல்லியதாக கெப்பல்ஸ் பிரசாரம் செய்வதும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் பின்பற்றிவரும் உத்தி. அதே உத்தியைத்தான் அரவிந்தனும் பின்பற்றுகிறார்.
‘அயோத்தி அகழ்வாராய்ச்சி, அமெரிக்கா, இராக், மற்றும் சில கக்கூஸ்கள் ‘ என்ற என் கட்டுரையில் ‘அகழ்வாராய்ச்சித்துறை இருப்பது ஆர்.எஸ்.எஸ்.பண்டிதர் முரளி மனோகர் ஜோஷியின் அமைச்சகத்தின் கீழ். ஜோஷியின் அறிவியல் பார்வை எப்படிப்பட்டது ? இந்திய தேசிய விஞ்ஞான அகாதமி கூட்டத்தில் சென்ற ஆண்டு அவர் முழங்கினார் : மாட்டு மூத்திரத்தை நேரடியாக மாட்டிடமிருந்தே மக்கள் குடிப்பதை நான் இளமையில் பார்த்திருக்கிறேன். அப்போது அது எனக்கு அசிங்கமாகத்தான் பட்டது. ஆனால் அதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு என்று இப்போது உணர்ந்திருக்கிறேன். அமைச்சரின் சங்கப்பரிவாரியான விஸ்வ ஹிந்து பரீஷத் மாட்டு மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிகிச்சைப் பொருட்களை விற்பனை செய்கிறது. பரமானந்த் மிட்டல் என்பவர் இரு பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கும் இன்னொரு அறிவியல் உண்மை – நில நடுக்கம் ,பூகம்பத்துக்கெல்லாம் காரணமே பசு வதைதான். இதைக் காணப் பொறுக்காத பூமாதேவி வலியால் அரற்றித் துடிப்பதுதான் பூகம்பம். ‘ என்ற பகுதிதான் அரவிந்தனின் ஆற்றாமைக்குக் காரணம். பாரத மண்ணுக்குரிய அறிவைக் கொச்சைப்படுத்துவது பரமானந்த மிட்டல் கும்பலா ? நாங்களா ? என் கட்டுரை விவசாயப் பொருளாதாரத்தில் மாட்டின் பங்கையோ, மாட்டுச் சாணத்தின் எரிவாயு பயன், கிருமி நாசினிப் பண்பையோ எங்கே மறுக்கிறது ? என் கட்டுரை அவற்றைப் பற்றியே அல்லவே.
விவசாயப் பொருளாதாரத்தில் மாட்டின் பங்கு, எரிவாயு பற்றியெல்லாம் அரவிந்தன் கும்பல் பேசுவதுமாட்டுக்கறி சாப்பிடுவதைத்தடுக்க வேண்டுமென்பதற்காகத்தானே. ஆனால் இதுவரைமாட்டுக்கறி உண்பது விவசாயப் பொருளாதாரத்தை பாதித்ததாக ஒரு ஆதாரமும் கிடையாது. ஆனால் மாட்டுக்கறி உண்ணும் தலித்- முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தை உருவாக்குவதற்காக, பசுவின் மேன்மை, விவசாயத்தில் அதன் பங்கு, எரிவாயு விஷயங்கள் எல்லாம் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்லப்படுகின்றன. காந்தியைக் கொன்ற கும்பல் காந்தியப் பொருளாதரத்தை வியந்தோதுகிறது. ஜே.சி.குமரப்பா பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இயற்கை விவசாயம், வலங்குன்றா விவசாய முயற்சிகள், இயற்கை உரம்-பூச்சிக் கொல்லிகள், உயிரியல் கிராம் முயற்சிகள், ஆதிவாசிகள் மரபாக விதைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள், பிஜேபி அரசு ஆதரிக்கிற சேது சமுத்திர திட்டத்தால் பாதிக்கப்படப் போகும் மன்னார் வளைகுடா பவளபாறைகள்- மீனவர் வாழ்க்கை இவற்றைப் பற்றி எல்லாம் கடந்த எட்டாண்டுகளில் செய்திப்படங்கள் உருவாக்கியுள்ள என்னை பாரத மண்ணின் அறிவைக் கொச்சைப்படுத்துபவனாக அரவிந்த நீலகண்டன் எழுதுவது வேண்டுமென்று செய்யப்படும் விஷமப் பிரசாரம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 1990ல் வீடியோ எடுத்தோம். கடலோர கிராமங்களில் பிரசாரம் செய்தோம். இதையெல்லாம் மறைத்துவிட்டு, அவரும் அவரது கும்பலும்தான் ஒரு பக்கம் அணு குண்டுப் பெருக்கத்தையும் மற்யுபக்கம் அயோத்தி மத வெறியாட்டத்தையும் ஊக்குவித்துக் கொண்டு தேசத்தை சீரழித்து வருகின்றன. இதை மறைக்க சுற்றுச்சூழல் அக்கறையாளர் வேஷமும் கிராமப் பொருளாதார ஆர்வலர் வேஷமும் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
சிங்கலும், தொகாடியாவும், வினய் கட்டியாரும், அன்பும் கருணையும் உருவான சாது அறிவியல் எழுத்தாளர் வேடத்தில் அரவிந்தன் என்ற பெயரில் வந்தாலும் அதை அடையாளம் காண எங்களால் முடியும் . அதை அம்பலப்படுத்துவதுதான் எங்கள் வேலை.
நான் சொல்லததை செய்யாததை நான் சொன்னதாக செய்ததாக எழுதிய விஷமத்தனத்துக்காக, அரவிந்தன் நீலகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும். இனி இத்தகைய அற்பத்தனங்களில் ஈடுபட மாட்டேன் என்று திண்ணை வாசகர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். பொய்யின் அடிப்படையிலான அரவிந்தனின் அவதூறை வெளியிட நேர்ந்ததற்காக திண்ணை ஆசிரியர் குழு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
ஞாநி
dheemtharikida@hotmail.com
அன்புள்ள ஆசிரியருக்கு,
சென்றவாரம் அதற்கு முந்திய வார படைப்புகள் எங்கு இருக்கின்றன ? பழைய கட்டுரைகள் கதைகளை எங்கு பார்ப்பது ?
மாதவன்
திண்ணைகுழு
–
திண்ணை முகப்பு பக்கத்தில் இருக்கும் ‘அரசியலும் சமூகமும் ‘, ‘சிறுகதைகள் ‘, ‘கவிதைகள் ‘ போன்ற தலைப்புகளை கிளிக் செய்தால், அவை சென்றவாரம் அதற்கு முந்தைய வார படைப்புகளின் இணைப்புகளுக்கு இட்டுச் செல்லும்.
- ர்ர்.. கீச்..கீச்…
- சுகம்
- நினைவுகள்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- வழி மாறிய தென்றல்
- விந்தைதான்
- மீளத்துடிக்கும் மனம்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- தேடுதல்
- வேதம்
- அறிவியல் துளிகள்-21
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- உணவு அருந்தும் நாகரிகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- மாடன் மோட்சம்
- ரசிகன்
- சைக்கிள் முனி
- சைக்கிள்-
- கு ை க ர யி ல்
- அலைவரிசை
- கடிதங்கள்
- மானசரோவர் டாட்காம்
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- Tamil children song cassettes
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003