சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்

0 minutes, 8 seconds Read
This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ஞாநி


ஜனவரி முதல் வாரத்தில் செனையில் நடைபெற்ற 27வது புத்தகக் கண்காட்சியில் மக்கள் கவனத்தை கவர்ந்த அரங்குகளில் நம்முடையதும் ஒன்று. ஓ என்ற தலைப்பில் பல முக்கியமான தகவல்களைப் படிக்க வைத்திருந்தோம். தினசரி அதே நாளில் உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை செய்தியாக வெளியிட்டோம். வாசகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் விதத்தில் தினசரி தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டு அதற்கான பதில்களில் ஏதேனும் ஒன்றிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கோரினோம். வாக்குப்பதிவு முடிவுகள் மறு தினம் வெளியிடப்பட்டன.சராசரியாக தினசரி 500 பேருக்குக் குறையாமல் வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு படித்த நடுத்தர வகுப்பு மக்களின் சிந்தனையோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக் கருதலாம். இதே கேள்விகளுக்கு எழுத்தறிவற்ற பெரும்பான்மை மக்கள் எந்த மாதிரி வாக்களித்திருக்கக்கூடும் என்று ஊகித்துப் பார்க்க்லாம். அரங்கில் தினசரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வாசகர்கள் பலரும் உற்சாகத்துடன் அரங்கில் இருந்த தீம்தரிகிட பொறுப்பாளர்களிடம் உரையாடினர். விவாதித்தனர். சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். வாக்குப்பதிவில் பெரும்பான்மை முடிவுகள் சில தீம்தரிகிடவுக்கு மகிழ்ச்சி தருவன ( தமிழ் வழிக்கல்வி, பாலியல் கல்வி, ஆண்-பெண் உடை). சில உடன்பாடில்லாதவை (தனியார் துறையில் இட ஒதுக்கீடு). எனினும் நமது சமூகத்தின் முக்கிய அங்கமான படித்தவர்களின் மன நிலையை ஏதோ ஒரு விதத்தில் இவை பிரதிபலிப்பவை என்பதால் முக்கியமானவை.

இனி மக்கள் தீர்ப்பு தேர்தல் முடிவுகள் உங்கள் பார்வைக்கு:

1.வீரப்பன்

பிடித்தே ஆகவேண்டும் – 49 சதவிகிதம்

பொதுமன்னிப்பு வழங்கலாம் – 51 சதவிகிதம்

2.ரஜினி

புதுக் கட்சி தொடங்க வேண்டும் – 22.27 சதவிகிதம்

பழைய கட்சி எதிலேனும் சேரலாம் -8.29 சதவிகிதம்

அரசியலுக்கே வர வேண்டாம்- 69.43 சதவிகிதம்

3 ஜெயலலிதா

பிரதமர் முயற்சி தேவையற்றது – 73 சதவிகிதம்

தேவையானது – 16 சதவிகிதம்

4. கங்கை காவிரி இணைப்பு

சாத்தியம்தான் . செய்தே ஆக வேண்டும் – 77.4 சதவிகிதம்

சாத்தியமில்லை. வீண் செலவு வேண்டாம் 22.6 சதவிகிதம்

5. கலைஞர் கருணாநிதி

கட்சித்தலைமையிலிருந்து விலகி இளைய தலைமுறைக்கு வழி விடவேண்டும் – 71.3 சதவிகிதம்

முழுக்கவும் அரசியலிலிருந்து விலகிவிடலாம் – 28.6 சதவிகிதம்

6.தமிழ் ஆண்-பெண் உடை

பெண்கள் சேலை; ஆண்கள் வேட்டி – 10.66 சதவிகிதம்

ஆண்கள் பேண்ட் அணியலாம். பெண்கள் சேலைமட்டும்.- 8.66 சதவிகிதம்

பெண்கள் சுடிதார். ஆண்கள் பேண்ட் வசதிப்படிஅணியலாம் – 80.66 சதவிகிதம்

7.பயிற்றுமொழி

எல்லாப் பாடமும் தமிழில். ஆங்கிலம் மொழிப்பாடமாக மட்டும் – 65.1 சதவிகிதம்

எல்லாப் பாடமும் ஆங்கிலத்தில். தமிழ் மொழிப்பாடமாக மட்டும் – 34.7 சதவிகிதம்

8.+2 வகுப்பில் பாலியல் கல்வி

கட்டாயம் வேண்டும் – 81.5 சதவிகிதம்

நிச்சயமாககூடாது -12.5 சதவிகிதம்

9. தனியார் துறையில் இட ஒதுக்கீடு

உடனடியாக வேண்டும் – 43.8 சதவிகிதம்

கூடவே கூடாது – 48.45சதவிகிதம்

10.அடுத்த பிரதமர்- உங்கள் விருப்பம்

வாஜ்பாய் – 22.8 சதவிகிதம்

அத்வானி- 16.28 சதவிகிதம்

சோனியா- 22.8 சதவிகிதம்

நீங்கள் விரும்பும் வேறு யாரேனும் — 21.8 சதவிகிதம்

சதவிகிதங்களைக் கூட்டிப் பார்த்தால் சில நாட்களில் 100க்குக் குறைவாக வரும். காரணம் மீதி சதவிகிதம் செல்லாத வாக்குகள்.

(தீம்தரிகிட பிப்ரவரி 2003. dheemtharikida@hotmail.com)

Series Navigation

author

ஞாநி

ஞாநி

Similar Posts