ஜனவரி 12, 2003
திண்ணைக் குறிப்பு:
திண்ணை இணையத்தில் மட்டுமே வரும் ஒரு வார இதழ். இதற்கு அச்சு இயந்திர பதிப்பு கிடையாது. அச்சு வார இதழை தங்கள் சொந்த முகவரிக்கு அனுப்ப வேண்டியும், எவ்வளவு சந்தா என்றும் கேட்டு கடிதங்கள் வருகின்றன.
திண்ணைக்கு அச்சு இயந்திர பதிப்பு கொண்டுவரும் எந்த எண்ணமும் இல்லை. திண்ணைக்கு சந்தாவும் இல்லை.
இன்னுமொரு திண்ணை குறிப்பு:
இந்தப் பக்கத்தில் திண்ணை ஆசிரியருக்கு வந்த கடிதங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். படைப்பாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் வாசகர்கள் எழுதும் கடிதங்கள் படைப்பாளிகளால் திண்ணை ஆசிரியருக்கு அனுப்பப்படுகின்றன. அவை பிரசுரிக்கப்பட மாட்டா.
***
R. Srinivasan vasanth
Dear admin and the thinnai group,
I sent a mail sometime back, but I am not sure whether it reached you , as there was a problem in the net connection I just want to thank the thinnai group, admin and everyone there for giving the space and freedom in the thinnai forums. I hope the forum will be reopened soon. Thanks!
Anbulla Rosavasanth.
rksvasanth@yahoo.com
அன்புள்ள ஆசிரியருக்கு
திண்ணை இந்த இதழில் கலாப்ரியா/விக்ரமாதித்தன் கவிதைகள் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. திண்ணையில் கவிதைகள் எழுதுபவர்கள் அவசியம் இந்தக் கவிதைகளை அவசியம் படிக்க வேண்டும். உள்வாங்கிக் கொள்ளவேண்டும். இவர்கள் போல எழுதவேண்டும் என்பது இதன் பொருளல்ல. விக்ரமாதித்தனின் காகம் பற்றிய கூட்டுக் கவிதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. கலாப்ரியாவின் கவிதைகள் ஒரு புதிய திசையில் செல்வதாய்த் தோன்றுகிறது. பிரம்மராஜனின் கவிதைகள் பழைய திண்ணை இதழில் வெளிவந்ததையும் கலாப்ரியா கவிதைகளுடன் சேர்த்துப் படிக்க வேண்டும்.
ஊடறு விமர்சனம் புத்தகத்தைப் படிக்கத் தூண்டுவதாய் இருந்தது. இது எப்படிப் பெறுவது என்று விபரங்கள் விமர்சனத்துடன் வெளியிட்டால் வாசகர்களுக்குப் பயன் உண்டு. ஹாங்காங்கில் நடந்த நாடக விமர்சனம் வியப்பை அளிக்கிறது. தமிழ் உண்மையான உலக மொழியாய்ப் பரிணமித்து வருகிறது என்பதற்கு இது உதாரணம். இது தமிழர்கள் தவிர்த்த மற்றவர்க்கும் மொழிபெயர்ப்பு அல்லது நாடகத்தின் ஊடாக உள்ளூர் மொழியில் சில விளக்கங்களுடன் கொண்டு செல்லப்பட முயற்சிகள் செய்ய வேண்டும்.
பீர் முகம்மது கிரேக்கச் சிந்தனையின் பாதிப்பு இந்திய சிந்தனையில் இருக்கிறது என்பதாய் எழுதிச் செல்வது விவாதத்திற்கு உரியது. இது பற்றி மேலும் ஆதாரங்களுடன் அவர் எழுத வேண்டும்.
விஞ்ஞானக் கட்டுரைகள் சிறப்பாய் இருந்தன. முக்கியமாக விஜயராகவன் எழுதும் குறிப்புகள் அன்றாட நிகழ்ச்சியின் விஞ்ஞானப் புரிவை அருமையாய்ச் செய்கிறது. நாடாலி ஆஞ்சியரின் கட்டுரை வியக்கத் தக்க புது விஷயங்களைச் சொல்கிறது.
பாத்ரூம் பற்றிய சீரியஸான ஒரு கட்டுரையை திண்ணை ஒன்று தான் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் சோப்பு உற்பத்தியில் 20-25 சதவீதம் தமிழ் நாட்டில் விற்பனையாகிறது என்று சொல்வார்கள். தம் உடலைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளும் மக்கள் தம் சுற்றுப்புறச் சூழல்களை ஏன் இவ்வளவு அசுத்தத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
கிரிதரனின் கதையும், விக்ரமாதித்தனின் கதையும் சிறப்பாக இருந்தன.
ஆர் ரஃபீக்
rafeeq@optonline.net
அன்புள்ள ஆசிரியருக்கு,
பாவண்ணனின் கட்டுரை தொடர் முடிந்துவிட்டதா அல்லது விடுபட்டுப் போய் விட்டதா ? நான் தொடர்ந்து படித்துவரும் அந்த கட்டுரைத் தொடர் பற்றி சிறு குறிப்பு வெளியிட்டால் நன்றியுடையவனாக இருப்பேன்.
ராமசாமி. வெ.
***
திண்ணைக் குறிப்பு:
விடுபட்டுப் போய்விட்டது. திண்ணைக்குழுவின் தவறுதான். தொடர்ந்து வெளிவரும்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
சென்றவாரம் சின்னக்கருப்பனின் ‘ இந்தவாரத்தில் ‘ அவர் தன்னை கன்சர்வேடிவ் என்று சொல்லிக்கொள்வது ஆச்சரியமானது. ஓரளவுக்கு பிஜேபி நிலைபாடுகளுக்கு ஆதரவாக அவர் எழுதுவது காரணமாக அப்படிச் சொல்லிக்கொள்கிறாரோ என்னமோ. ஆனால் அவரை கன்சர்வேடிவ் என்று சொல்வது கஷ்டம். எக்ஸ்ற்றீம் லிபரல் என்றுதான் அவரை அமெரிக்க அரசியல் படி வகைப்படுத்த முடியும். (இந்த வார்த்தைகளை அதிகம் உபயோகிக்கும் அமெரிக்க அரசியல் படி சொல்கிறேன்)
சென்றவாரக் கட்டுரைகளில் இளமுருகுவின் பாத்ரூம் பேசப்படாத விஷயத்தைப் பேசியிருக்கிறது. அவ்வப்போது அது வீட்டில் முனகிக்கொள்ளும் விஷயம்தான் என்றாலும், அது எழுதப்பட்டிருக்கும் விதம் பலரை பேச வைக்கும். விக்கிரமாதித்யனின் கவிதைகளையும், கலாப்பிரியாவின் கவிதைகளையும் பிரிண்ட் செய்து வைத்திருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின்னர் நல்ல கவிதைகள். அவை பிரபலமான கவிஞர்களின் கவிதைகள். ஆனால் மற்ற கவிதைகளும் சிறப்பாகவே இருந்தன. இந்த கவிஞர்கள், திண்ணையில் எழுதும் மற்ற கவிஞர்களைப் பற்றிய உணர்வுகளைப் பற்றி எழுதினால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். விமர்சனத்துக்கு அஞ்சுபவர்கள் இல்லை அல்லவே திண்ணை படைப்பாளிகள்.
அறிவியல் கட்டுரைகளை எல்லோரும் படிக்க வைக்கும் முயற்சியில் திண்ணை வெற்றி பெற்று வருகிறது என்றுதான் கருதுகிறேன். முக்கியமாக அடுத்த நிறுத்தம் ஆல்பா செண்டாரி போன்ற மொழிபெயர்ப்பு கட்டுரைகள்.
நரேஷ்
Dear Editor:
Could you please request the author(Nambirajan; is it vikramathithyan ?) of the poetry ‘Onpathil Guru ‘ to explain the meaning and significance of the title of that poem ?
I like it. But sounds very mystical, I could not follow…
sithakavi
***
திண்ணை:
நம்பிராஜனும் விக்கிரமாதித்யனும் ஒருவரே
அன்புள்ள ஆசிரியருக்கு,
XXX தொல்காப்பியம் என்ற ஜெயமோகன் கட்டுரையைப் படித்தேன். இல்லாத விஷயங்களை கண்டுபிடிப்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஐந்தாம் வகுப்பு பாடத்திலேயே லென்ஸை கண்டுபிடித்தவர் அவ்வையார் போன்ற விஷயங்கள் அரசாங்கம் அனுமதி அளித்தே பிள்ளைகளுக்குச் சொல்லித்தரப்படுகின்றன. புதிதாக கலைஞர் எழுதியிருக்கும் தொல்காப்பிய உரையையும் யாராவது படித்துவிட்டு அதனை திறனாய்வு செய்தால் நல்லது
கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் என்ற யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்ப்பை படித்து வியப்பை அடைந்தேன். தெருக்கூட்டுபவர் முயன்றால் தமிழ்நாட்டில் சினிமா எடுக்க முடியும். எந்த கல்வியை படித்து முடித்துவிட்டு கியூப சினிமா டைரக்டர்கள் படம் எடுக்கிறார்கள் ? அரசியல் சுதந்திரம் குறித்த மாயைகள் ஏதும் கியூபாவில் கிடையாது என்ற மொழிபெயர்ப்பை திண்ணை வெளியிடுவதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை. இந்தியாவில் இருக்கும் ஓரளவு அரசியல் சுதந்திரத்தையும் ஒழிக்க திண்ணை விரும்புகிறதா ?
மருதுகுமார்
- இனி, அவள்…
- இரண்டு கவிதைகள்
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- ஜன்னலினூடு பார்த்தல்!
- க(னவு)விதை
- அறிவியல் துளிகள்-8
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
- பொங்கல் கவிதைகள்
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்க லோ பொங்கல்!
- பொங்கல்
- பரிணாமம்
- எங்கள் ஊர் பொங்கல்!
- பொங்கல்
- கொழுத்தாடு பிடிப்பேன்
- வேர்கள்
- வாசனை
- அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு
- இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி
- கடிதங்கள்
- அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)
- எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை
- மகள்
- ஒரு சந்திப்பு
- திருப்பிக்கொடு