ஜாக் கெம்ப் (எம்பவர் அமெரிக்கா என்ற நிறுவனத்தின் உதவி இயக்குனர். 1996இல் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உதவி ஜனாதிபதி நியமனர்)
நாமாக வெளியிடும் பணங்களால் உலகப் பொருளாதாரம் மெதுவாகிக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள இன்னும் எத்தனை அழிந்த நம்பிக்கைகளையும், பொய் மீட்சிகளையும் நாம் அனுபவிக்க வேண்டும் ? வட்டி விகிதம் குறைப்பதால் பொருளாதாரம் மேம்படும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும், ஃபெட் வட்டிவிகிதங்களைக் குறைத்து ஆறு மாதங்களுக்குப் பின்னரும் இன்னும் பொருளாதாரம் பலவீனமாகிக் கொண்டே வருகிறது. சமீபத்திய வரிக்குறைப்பு சட்டங்களால் மக்கள் திரும்பப் பெற்ற பணங்களால் இன்னும் பொருளாதாரம் உத்வேகம் பெறவில்லை. பொருளாதாரத்தில் மக்களின் தேவை குறைபாடு இல்லை. மக்களின் கையில் நிறையப்பணம் இருப்பதால், பொருளாதாரத்தின் கொடுக்கும் (விற்கும்) பகுதியை (supply side of the economy) உயிரூட்ட முடியவில்லை.
முன்னெப்போதும் இல்லாத பரிசோதனை
தங்க தரத்தை விட்டு விட்ட எந்த மாபெரும் தேசமும், அதற்குப் பின்னர் மாபெரும் தேசமாக இருந்ததில்லை என்று ரொனால்ட் ரீகன் ஒரு முறை சொன்னார். ஆகஸ்ட் 15, 1971இல் அமெரிக்கா மற்ற தேசங்கள் வைத்திருக்கும் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை தரும் முறையை நிறுத்தி, மேற்கண்ட ரீகனது வரியை பரிசோதனை செய்ய முனைந்தது. உலக வரலாற்றில் முதன் முதலாக, உலகத்தின் முக்கிய தேசங்களின் பணங்கள் ஒரு பொருளைச் (commodity) சார்ந்திருக்காமல் இருக்கின்றன. மில்டன் ஃபிரீட்மென் இந்த நிலையை ‘முன்னெப்போதும் இராதது ‘ என்று குறிப்பிட்டார். அவர் இந்த நிலையை ‘ நீண்ட காலத்துக்கு நிலையாக இருக்க முடியாதது ‘ என்றும் ‘உலகத்துக்கு நீண்டகால நிலையான நங்கூரம் வேண்டும் ‘ என்றும் குறிப்பிட்டார்.
குறுகியகாலத்தில், அவர் வெற்றியடைந்தார். ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவால், தங்கத்தரத்தை நிறுத்தி, தாமாக வெளியிடும் அமெரிக்க டாலரை தரமாக நிறுவியவுடன், இது உலகளாவிய பணவீக்கத்தை 1970களிலும் 1980களிலும் உருவாக்கியது.
இருந்தும் அமெரிக்கா, உலக கம்யூனிஸத்தை தோல்வியடையச்செய்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பின்மையைக் குறைத்து, சுமார் 18 வருடங்களுக்கு முன்னெப்போதும் இராத பொருளாதார பெருக்கத்தைக் கண்டது. இன்று, அமெரிக்கா அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு, மாபெரும் வளமையில் இருக்கிறது. ரீகனும், ஃப்ரீட்மென் அவர்களும் தவறா ? நான் அப்படி நினைக்கவில்லை. இன்று அமெரிக்க பொருளாதாரம் உச்சத்தில் இருப்பதற்குக் காரணம், மற்ற தேசங்களின் பொருளாதாரம் இப்படி அவர்களாக வெளியிடும் பணத்தால் நசிவடைந்ததுதான் என்று நான் கருதுகிறேன்.
அமெரிக்கா 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் தருவதை நிறுத்தியவுடன், தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 140 டாலருக்கு இருந்தது. இது டாலரின் விலை குறைவைக் காட்டுகிறது. தங்க இணைப்பை நீக்கியவுடன், நிக்ஸனின் பொருளாதார குழு ஃபெட் வழியாக பொங்கி வழியும் தேவையற்ற பணப்பெருக்கத்தின் மூலம், பொருள்களின் விலை அதிகரிப்பை (பணவீக்கத்தை) உருவாக்கியது. (அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருக்கும் யூரோடாலர் சந்தையை பெருக்கி, அங்கு வெளிநாட்டு வங்கிகளின் பணத்தையும் அதிகரித்தது). 1972இல் ராபர்ட் முன்டெல் முதன் முதலாக பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் ஏறப்போவதையும், பொது பணவீக்கம் வரப்போவதையும் முன் கூட்டியே தெரிவித்தார்.
1973இல் அரபு எண்ணெய் உற்பத்தி நாடுகள் பெட்ரோலின் விலையை நான்கு மடங்காக்கியதால்தான் பணவீக்கம் வந்தது என்று பழமைவாத பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், விற்கும்பகுதி சார்பான பொருளாதார நிபுணர்கள் (supply side economists) தங்கம் விலை நான்கு மடங்காகியதால்தான் பணவீக்கம் வந்தது என்று கூறினார்கள். வரி விகிதங்கள் அதிகரித்தன. இதனால், இந்த பரிசோதனைக்கு முன்னர் ஒருவர் சம்பாதித்த சம்பாத்யத்தை வீட்டுக்கு கொண்டுவர, பின்னர் இருவர் உழைக்க வேண்டியதாயிற்று. தங்கத்தரத்தை இழந்ததால் உருவான பிரச்னைகளை தீர்க்க மூன்று ஜனாதிபதிகள், கூலி கட்டுப்பாடுகள், விலைக்கட்டுப்பாடுகள், உயர்ந்த வரி விகிதங்கள் மூலம் முயல வேண்டியதாயிற்று.
இவ்வாறு உருவாக்கும் பணப்புழக்க கோட்பாடுகள் இரண்டு முகங்கள் கொண்டவை. முன்பு அதிகமாக இருந்த பணம் இன்று காணாமல் போய்விட்டது. 1996இல் பணஅழுத்தம் (deflation) உருவாக ஆரம்பித்தது. கிளிண்டன் அதிகப்படுத்திய வரிவிகிதத்தால் உருவான பணவீக்கத்தை மட்டுப்படுத்த ஃபெட் பணப்புழக்கத்தை இறுக்க வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியது. இவ்வாறு விலை அதிகமான டாலர், வளரும் பொருளாதாரங்களில் (இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில்) அமைக்கப்பட்ட டாலர் தரத்தினால், அவைகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இது ஆசிய, பிரேசில், ருஷ்ய பொருளாதாரங்களை காலாவதி செய்தது. இதனால், பெட்ரோல் மற்றும் இதர பொருட்களின் விலை சரிந்தது. எண்ணெய் உற்பத்தியாளர்கள் இரண்டுவருட பெட்ரோல் உருவாக்காமல் விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். இது பெட்ரோல் பற்றாக்குறையை உருவாக்கியது. மின்சாரவிலைகளை அதிகப்படுத்தியது.
மின்சார சக்தி விலைகள் அதிகரிப்பதை ஃபெட் பணவீக்கம் எனப் புரிந்துகொள்ளுகிறது. மீண்டும், மத்திய வங்கி தாமாக வெளியிடும் பணத்தால் இன்னும் உலகப்பொருளாதாரம் சிக்கலில் மாட்டும்.
ஃபெட் தனது வட்டி விகிதங்களை, இந்த வருட ஆரம்பத்திலிருந்து, 275 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருக்கிறது. ஆனால் தங்கம் விலை 1996இல் 385 டாலர் இருந்ததிலிருந்து இன்று 272 டாலராக குறைந்திருக்கிறது. நேற்று, ஃபெட் இன்னும் ஒரு 25 அடிப்படைப்புள்ளிகள் தங்கள் வட்டி விகிதத்தை குறைக்கப் போவதாகக் குறிப்பிட்ட பின்னர் மட்டும் 5 டாலர் குறைந்திருக்கிறது. பொருட்களின் விலைகள் கடந்த 15 வருடங்களில் மிகக்குறைந்த விலைகளை எட்டியிருக்கின்றன. டாலர் உலகத்தின் எல்லா பணங்களைவிடவும் மிக அதிகமான விலையில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
தங்கத்தரம் இல்லாமல், ஃபெட் நிறுவனத்தால், எவ்வளவு பணம் சந்தைகள் கேட்கின்றன என்று நிர்ணயிக்க முடியாது. அதனால் செய்ய முடிவதெல்லாம், வட்டி விகிதத்தை தாக்கி எவ்வளவு பணப்புழக்கம் இருக்கலாம் இருக்கக்கூடாது என்று குத்துமதிப்பாக முன்னம் செய்த தவறுகளை சரிக்கட்டுவதுதான். ஜப்பான் மத்தியவங்கி தனது வட்டி விகிதத்தை சைபருக்குக் கொண்டுவந்தும் இன்னும் ஜப்பானின் பணப்புழக்க பிரச்னைகள் தீரவில்லை என்பதை பார்க்காமல், ஜப்பான் மத்திய வங்கி செய்ததை காப்பியடிக்கத்தான் ஃபெட் முயல்கிறது.
பணத்தை நிர்வாகம் பண்ண சரியான முறை இதுவல்ல. பெட் செய்த தவறுகளால், உலக பொருளாதாரம் கீழிறங்கவும், உலக வியாபாரம் நசிவடையவும் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெளிவான விஷயம். மீண்டும் தங்க நங்கூரத்தை கொண்டுவந்து மீண்டும் டாலரை தங்கத்தோடு இணைத்து நமது மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை இப்போதே தடுக்க இன்றே சரியான தருணம்.
ஃபெட் தனது வட்டி விகிதக்குறைப்புகளால் ஒருவேளை அதிர்ஷ்டம் அடையலாம். (ஜப்பான் மத்திய வங்கியால் அது முடியவில்லை). ஒரே நல்ல வழி, ஃபெட் வட்டி விகிதங்களை தாக்குவதை விட்டு விட்டு, தங்கத்தை தாக்க வேண்டும். இது தங்கத்துக்கு ஒரு விலையை நிர்ணயம் பண்ணுவதாக சிலர் தவறாக நினைப்பது போல அல்லாமல், பொருளாதாரத்தில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்வதும், தங்கத்தின் விலை 325டாலராக ஏறக்குறைய இருக்கும் படிக்குப் பார்த்துக்கொள்வதும்தான்.
தங்கம் எப்படி ஒரு தரமாக இருக்க முடியும் என்பது ஒரு பெரிய மர்மம் இல்லை. பொருளாதாரத்துக்கு எவ்வளவு பணப்புழக்கம் இருக்கவேண்டும் என ஃபெட் நிர்ணயம் பண்ணாமல், அதனை சந்தை நிர்ணயம் பண்ணும்படிக்கு விட்டுவிடுவதுதான். டாலரை தங்கத்தால் நிர்ணயம் பண்ணும்படிக்கு வைப்பதும், அமெரிக்க குடிமக்கள் சுதந்திரமாக தங்கத்தை வாங்கவும் விற்கவும் வைப்பதும், வட்டி விகிதங்களை மாற்றுவதை ஃபெட் மறந்துவிட்டு, எவ்வளவு பணப்புழக்கம் வேண்டும் என்பதை தங்கத்தின் விலைகொண்டு நிர்ணயம் செய்யலாம். தங்கம் விலை குறைந்தால் அமெரிக்க பாண்டுகளை வாங்குவதும், தங்கம் விலை ஏறும்போது அமெரிக்க பாண்டுகளை விற்பதும் செய்தாலே போதுமானது. சந்தை தானாக வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து கொள்ளும்.
காகித டாலர் தங்கம் போலவே நல்லதாகவே இருக்கும். அமெரிக்க அரசாங்கம் தங்கத்தை பதுக்கி வைத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அதனை மக்களே சந்தையில் செய்து கொள்வார்கள். தங்கத்தின் விலையைக் கொண்டு சந்தையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஃபெட் தான் தோன்றித்தனமான ஃபெட் கவர்னர்களால் வட்டியைக் குறைப்பதும் கூட்டுவதும் இல்லாமல் இருக்கும். 200 வருடங்களாக இங்கிலாந்து மத்தியவங்கி இவ்வாறுதான் பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தை நிர்வகித்து வந்தது.
இது எல்லாவற்றையும் எளிதாகச் செய்துவிடலாம் என்பதுதான் நல்ல செய்தி. ஜனாதிபதி புஷ் அவர்களும், நிதி அமைச்சர் பால் ஓனெல் அவர்களும் ஆலன் கிரீன்ஸ்பானுடன் உட்கார்ந்து பேச வேண்டியதுதான். இவ்வாறு அமெரிக்கா செய்ததும், பிரிட்டனும் பின்னாலேயே வந்து தங்கத்தை பவுண்டு ஸ்டெர்லிங் தரமாக ஏற்றுக்கொண்டால், கீழிறங்கும் யூரோவும் நிலைப்படும்.
அலெக்ஸாண்டர் ஹாமில்டன் அவர்கள் சொன்னதுபோல, தங்கத்தரத்தை விட எளிமையானது வேறெதுமில்லை. அவர் முதலாம் அமெரிக்க பாராளுமன்றத்தை தங்கத்தரம் ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தார். ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவால் அதனை மாற்றியது போல, ஜனாதிபதி புஷ் அவர்களும் தன் பேனாவால் அதனை மாற்றலாம். சாதாரண மக்கள் பயன்பெறுவதால், இது மக்களிடம் ஆதரவையும் பெற்றுத்தரும். 1971இல் ஜனாதிபதி நிக்ஸன் தனது பேனாவை எடுத்து காகிதங்களில் கையெழுத்திட்டபோது சொன்னார், ‘ நன் ஏன் இதைச் செய்கிறேன் எனத்தெரியவில்லை. வில்லியம் ஜென்னிங்ஸ் பிரைய்ன் தங்கத்துக்கு எதிராக மூன்றுதடவை போட்டியிட்டு மூன்றுதடவையும் தோற்றார் ‘ என்றார்.
***
- சேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)
- முரண்கள்
- பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2
- அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்
- கோழிக்கறி சாஷ்லிக்
- தம் ஆலூ (உருளைக்கிழங்கு)
- மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்
- மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்
- பசுபதியின் கவிதை படித்து…
- பட்டினிப் படுக்கைகள்…
- சூரியனுக்கும் கிழக்கே
- நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்
- 1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்
- காிசல் காட்டு வார்த்தைகள்
- சித்த சுவாதீனம்.
- சாதி என்னும் சாபக்கேடு
- அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்
- பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2
- மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்
- காசுப்பா(ட்)டு
- குழப்பங்கள்
- பாரம்
- ஒரு தண்ணீாின் கண்ணீர்.
- கற்பக விருக்ஷம்
- நீ…நான்..நாம்…
- மூன்று குறும்பாக்கள்