ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது.”
“புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப வேண்டும். மாபெரும் மகத்தான மாளிகைகள் நிரம்பிய ஓர் எழில் களத்தை (பாரிசில்) உருவாக்க, முன்பிருந்தவற்றை எல்லாம் நீக்க வேண்டும்.”
நெப்போலியன் (1812)
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ•ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ•ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ•ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ•ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெ•ப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
லெ•ப்டினென்ட்: கியூஸெப் ! மாபெரும் தவறு அது ! பிரென்ச் ஜெனரல் அப்படிக் கீழான ஒரு வேலையை இராணுவத்தில் செய்யக் கூடாது. அது அவருக்கு அவமதிப்பே !
நெப்போலியன்: (கண்களில் கனல் பொறிகள் பறக்கின்றன. கியூஸெப் நடுங்குகிறான்) (அதட்டிக் கொண்டு) லெ•ப்டினென்ட் ! என்ன சொன்னாய் ?
லெ•ப்டினென்ட்: மன்னிக்க வேண்டும் என்னை ஜெனரல் ! ஆஸ்டிரியப் படைகள் மீது குறிவைத்து நீங்கள் பீரங்கி வெடிகளால் அவரை வீழ்த்தினீர் ! அப்போது ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்து ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போய் உங்களுக்கு வழி அமைத்தவர் நாங்கள் ! ஆற்றின் அந்த ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்தவரே லோதி யுத்தத்தில் வெற்றிக்கு அடிகோலியவர். சொல்லுங்கள் யார் அதைக் கண்டுபிடித்தது ? நான்தான் முதலில் நடந்து சென்றவன் ! நான்தான் நதியைக் கடந்து பிறருக்குப் பாதை காட்டியவன் ! எனது குதிரைதான் அந்த வழியைக் கண்டது. அந்தக் குதிரைதான் ஆஸ்டிரியரை வென்ற மெய்யான வெற்றிக் குதிரை !
நெப்போலியன்: முட்டாள் ! நீ அந்தக் குதிரையைத்தான் இப்போது பறிகொடுத்து விட்டாயே ! அத்தோடு கடிதங்களை இழந்ததற்கும் உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். உன் தவறுகள் உனக்கு இன்னும் தெரியவில்லை !
(அப்போது ஒரு பிரென்ச் அதிகாரி கையில் வாளேந்தி யாரும் பாராதபடி உள்ளே நுழைகிறான்.)
லெ•ப்டினென்ட்: (சட்டென) நானந்தக் கயவனை உங்கள் முன்னிழுத்து வருகிறேன்.
நெப்போலியன்: அப்படி ஒரு கயவன் இப்போதில்லை லெ•ப்டினென்ட் !
பிரென்ச் அதிகாரி: (லெ•ப்டினென்ட் முன்புறம் வந்து வணங்கி) லெ•ப்டினென்ட் ! (வாளைச் சமர்ப்பித்து) நான் உனது கைதி ! என்னை நீ சிறைப் படுத்தலாம். (பேச்சில் பெண்குரல் ஒலிக்கிறது.) நான் செய்தது தவறு.
நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைகிறான்.) யார் நீ ? ஓ நீயா ?
லெ•ப்டினென்ட்: (கோபத்துடன்) வாடா அயோக்கியப் பயலே ! எங்கே ஒளிந்து கொண்டிருந்தாய் ? எங்கே என் குதிரை ?
அதிகாரி: பாதுகாப்பாக உள்ளது போர்கெட்டோவில் (Borghetto) ! காத்துக் கொண்டிருக்கிறது உனக்காக !
நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து) எங்கே என் அரசாங்கக் கடிதங்கள் ?
அதிகாரி: அவை இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கின்றன ! நீங்கள் யாராவது என் சகோதரியைச் சந்தித்தீரா ?
லெ•ப்டினென்ட்: ஆம் சந்தித்தோம், நளின நாடகி ! உன்னைப் போலவே இருக்கிறாள். ஆனால் உன்னை விட ஒப்பனையாக இருக்கிறாள்.
அதிகாரி: (ஆர்வமுடன்) அவளைத் தெரியுமா உங்களுக்கு ! அவள் ஒரு மந்திரக்காரி !
கியூஸெப்: (நடுங்கிக் கொண்டு) ஐயோ வேண்டாம் ! அவள் கால்பட்ட இடத்தில் என் கால் தடம் விழக் கூடாது. தெரியாமல் உன் சகோதரிக்கு என் விடுதியில் இடம் கொடுத்து விட்டேன் ! இப்போதே அவளை வெளியே தள்ளுகிறேன்.
லெ•ப்டினென்ட்: அவளை நீ விரட்டி விடு ! அவள் சகோதரனை நான் கைது செய்கிறேன். எனக்கு இந்த மந்திரம், மாயத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இதற்கெல்லாம் நீ மிரள வேண்டாம்.
அதிகாரி: கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டதே ! மந்திர சக்தியால் என் சகோதரி ஜெனரலை மயக்கி விட்டாள். (கியூஸெப்பும், லெ•ப்டினென்ட்டும் சட்டென நெப்போலியனை விலகிச் சற்று தள்ளி நிற்கிறார்.) கடிதங்கள் உங்கள் கோட்டுப் பையில்தான் உள்ளன. (நெப்போலியன் கோட்டுப் பையில் கையை விட்டுக் கடிதங்களைத் தடவிப் பார்க்கிறான்.) ஈதோ உள்ளன கடிதங்கள் ! நான் எடுத்துத் தரலாமா ?
நெப்போலியன்: (கோபத்துடன்) உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் உன் திருட்டுக் கையை என் பையில் விட்டு உளவிப் பார்ப்பாய் ? (கடிதக் கட்டை மெதுவாக எடுக்கிறான்)
அதிகாரி: கியூஸெப் ! அதோ கடிதங்கள் !
கியூஸெப்: (பயந்து கொண்டு) கடவுளே ! அந்தக் கடிதங்களும் மந்திர சக்தியால் சாபம் அடைந்தவை !
நெப்போலியன்: முட்டாள்தானமாக எதுவும் பேசாதே ! மந்திரமும் இல்லை ! சாபமும் இல்லை !
கியூஸெப்: ஜெனரல் ! சாபக் கடிதங்களைத் தொடாமல் தீயிட்டுப் பொசுக்குங்கள்.
நெப்போலியன்: வாயை மூடு ! தீயிட்டு ஏன் கொளுத்த வேண்டும் ?
அதிகாரி: (நெப்போலியனைப் பார்த்து) அவை உங்கள் அரசாங்கக் கடிதங்கள் ! அதுவும் இரகசியக் கடிதங்கள் ! படித்த பிறகு அடுப்பில் போட்டு விடுங்கள் !
நெப்போலியன்: கியூஸெப் ! (கடிதங்களை வீசி எறிந்து) ஈதோ கடிதங்களைத் தீயில் பொசுக்கு !
அதிகாரி: ஜெனரல் ! கடிதங்களை நீங்கள் படிக்க வில்லையா ? படிக்க வேண்டும் என்னும் துடிப்பில்லையா ?
நெப்போலியன்: அந்தக் கடிதங்களைப் படிக்க எனக்குத் துடிக்க வில்லை மேடம் ! அவை பலரால் படிக்கப்பட்டு அவற்றின் ரகசியங்கள் காற்றிலே பரவிப் போயின ! உன்னுடைய கடமை நிறைவேறியது ! ஒற்றர் குழுவுக்கு நல்ல வேட்டை ! இப்போது ஆசைத் தீப் பற்றி எழுகிறது உனக்கு ! வேண்டுமானால் நீ படித்துக் கொள் !
அதிகாரி: ஓ ! மிக்க நன்றி ஜெனரல் ! நான் முன்பே அவற்றை எல்லாம் படித்து விட்டேன் !
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 26, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- நள்ளிரவின் பாடல்
- மழைகள்
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- முதல் சம்பளம்
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- அஜ்னபி கவிதைகள்
- நிராகரிப்பு
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- முள்பாதை 31
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- தெரிக்கும் உவமைகள்…
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- வேத வனம் விருட்சம்- 87