ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் பிரான்சின் ஆட்சித் தளபதியானால் பாரிஸ் நகரை உலகப் பெரும் அழகிய நகராக்குவதோடு இதுவரையில் காணாத ஓர் எழில் நகராக்குவேன். கடவுள் ஆசியால் என் ஆயுள் இன்னும் இருபது ஆண்டுகள் நீடித்து நான் ஓய்வில் இருந்தால், பாரிஸ் நகரின் பழைய சிறு பகுதி ஒன்றைக் கூட நீ பார்க்க நேர்ந்திடாது.”
நெப்போலியன் (1798)
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெ·ப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
லெ·ப்டினென்ட்: (கியூஸெப்பைப் பார்த்து) போ ! குதிரை ஒன்றைக் கொண்டுவா !
கியூஸெப்: (பரபரப்புடன்) இதோ போகிறேன் லெ·ப்டினென்ட் ! (வேகமாக வெளியேறுகிறான்)
லெ·ப்டினென்ட்: அந்தக் கயவனை உங்கள் முன் இழுத்து வந்து நிறுத்துகிறேன் ஜெனரல் ! ஒரு சிறு வேண்டுகோள். (தயக்கமுடன்) இப்போது என் உடை வாளைக் காணோம் ! யார் களவாடி விட்டார் என்று தெரியவில்லை ? முதலில் என் வாளைக் கண்டுபிடிக்கிறேன் ! வாளின்றி அந்த ஆளைப் பிடிப்பது சிரமம் !
நெப்போலியன்: முட்டாள் ! நீ போர் வீரனா ? படைவீரன் என்று வெளியே சொல்ல வெட்கப் பட வேண்டும் ! கள்வன் இல்லாத இடத்திலும் உன் வாள் காணாமல் போகிறது ! இனி உன்னிடம் உள்ளவை உன் கால்களும், கைகளும்தான் ! ஒருநாள் அவையும் உன்னிடமிருந்து களவு போகும் !
ஹெலினா: (சிரித்துக் கொண்டே) இதெல்லாம் என்ன ஜெனரல் ?
நெப்போலியன்: உன் சகோதரனை இந்த மாவீரன் காணப் போவதில்லை ! குதிரை இல்லை ! வாள் இல்லை !
ஹெலினா: நிச்சயமாகக் காண மாட்டார் ! ஒற்றனைத் தேடிப் போகும் லெ·ப்டினென்ட் எப்போது திரும்பி வருவாரோ ?
நெப்போலியன்: முக்கிய அரசாங்கக் கடிதங்கள் எப்போதோ இழக்கப் பட்டன !
ஹெலினா: இல்லை ஜெனரல் ! அவை உமது பையில் உள்ளன !
நெப்போலியன்: இந்தக் கடிதக் கட்டில் எல்லாக் கடிதங்களும் இல்லை பெண்ணே ! நான் எதிர்பார்த்த கடிதமில்லை ! அந்த ரகசியக் கடிதங்கள் களவு போய் விட்டன சின்னப் பெண்ணே !
ஹெலினா: அந்த அப்பாவி லெ·ப்டினென்ட் வேலை போய்விடுமா ?
நெப்போலியன்: அவனைச் சுட்டுத் தள்ளி துப்பாக்கி மருந்தை வீணாக்குவது கூடத் தப்பு !
ஹெலினா: (அதிர்ச்சியோடு) கல் நெஞ்சம் படைத்தவர் தாங்கள் ! மனித உயிர் மேல் சிறிது கூடப் பரிவும் பாசமும் இல்லை உமக்கு. ஆணையும், பெண்ணையும் அவமதிப்பதே உமது தொழில் ! மனிதரைச் சுட்டு வேட்டையாடுவது உமது இனிய பொழுது போக்கு !
நெப்போலியன்: (சிரித்துக் கொண்டே) நம்மில் யார் அந்தப் படைவீரனை ஏமாற்றி அவமானப் பட வைத்தது ? நீயா ? நானா ? அதை நீ சிந்தித்தது உண்டா ?
ஹெலினா: நான் அப்படி எண்ணிப் பார்க்க வில்லை. அது எனது கெட்ட புத்தி ! பாவம் மனிதர் ! இப்போது அவரை அவமானத்திலிருந்து நான் எப்படிக் காப்பாற்றுவது ?
நெப்போலியன்: அவன் பெயரைக் கெடுத்தது நீ ! இப்போது அவனைக் காப்பாற்ற போவதும் நீ ! பிறரிடம் ஏமாற்றம் அடையும் ஒரு படை வீரனை நான் மதிப்பதில்லை.
(அப்போது லெ·ப்டினென்ட் முறையாக இராணுவ உடை அணிந்து வாளுடன் வேகமாக வருகிறான்.)
லெ·டினென்ட்: (முக மலர்ச்சியோடு) ஜெனரல் ! கள்வனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன். விடை பெறுகிறேன் !
நெப்போலியன்: கயவனை நான் காண வேண்டாம் ! கடிதங்களை நீ கைப்பற்றி வா !
ஹெலினா: (கவலையோடு) லெ·ப்டினென்ட் ! எந்தத் திசையில் போகிறீர் ? என்ன செய்யப் போகிறீர் என் அப்பாவிச் சகோதரனை ? கொல்லாதீர் அவனை !
லெ·டினென்ட்: கால நேரத்தை வீணாக்க முனைகிறாய் மேடம் ! போதும் அறிவுரை ! போகும் போது என்னை நிறுத்தாதே ! முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன் !
ஹெலினா: (கொல்லெனச் சிரித்து) அப்படியானால் எப்படி நீ நடக்க முடியும் ?
லெ·டினென்ட்: அயோக்கியத் தமயன் மீது இத்தனை பாசமா ? அவன் தலையை நான் சீவப் போவதில்லை ! ஆனால் தோலை உரிப்பேன் ! அல்லது முதுகு எலும்பை நொறுக்குவேன் ! மன்னிக்க வேண்டும் மேடம் ! உன் தமயனால் என் ஊதியம் போனது !
ஹெலினா: (கவலையோடு) அவனுக்குக் காயம் உண்டானால் என் கண்ணில் இரத்தம் வடியும் ! அவனை நீ விட்டுவிட வேண்டும் ! நான் சொல்வதைக் கேள் ! அவன் எங்கிருக்கிறான் என்று நான் சொல்கிறேன். அவனைப் பிடித்து உன் வசம் ஒப்படைப்பது என் பொறுப்பு. நீ அவனை ஜெனரலிடம் இழுத்து வரலாம் ! அவனைத் தாக்கப் போவதில்லை என்று நீ எனக்கு வாக்கு அளிப்பாயா ? வாள் சண்டை போடாமல் மதிப்போடு அவனை நடத்துவாயா நீ ?
லெ·டினென்ட்: அவன் என்னைத் தாக்கினால் நான் என்ன செய்வது ? எனது துப்பாக்கி அவனிடம் உள்ளது. அதை மறக்காதே நீ !
ஹெலினா: அவன் உன்னைத் தாக்கினால் நீ அவனைத் தாக்கலாம்.
லெ·டினென்ட்: என்னுடைய குதிரை அவனிடம் உள்ளதே.
ஹெலினா: உன் துப்பாக்கியும், குதிரையும் உன்னை வந்தடையும். அதற்கு நான் பொறுப்பு.
லெ·டினென்ட்: (ஆவலாக) முதலில் அவன் எங்கிருக்கிறான் என்று சொல் ?
ஹெலினா: அவன் வெகு தூரத்தில் இல்லை ! அவனுக்கு நான் சிமிக்கை செய்தால் அரை மணி நேரத்தில் இங்கு வந்து விடுவான் !
லெ·டினென்ட்: (ஆச்சரியமாக, வாளை உருவி) என்ன ? அருகிலா இருக்கிறான் அந்தக் கயவன் ?
ஹெலினா: வாளை உருவாதே ! அவனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது ! பொறு ! ஆத்திரப் படாதே !
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 4, 2010)
- சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13
- கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்
- ஆசிரியருக்கு
- எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்
- காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.
- கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்
- மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- ஆசிரியர் அவர்களுக்கு
- பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)
- வேதவனம் –விருட்சம் 84
- டோரா மற்றும் நாங்கள்
- முள்பாதை 28
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16
- சுஜாதா எழுதாத கதை
- நினைவுகளின் சுவட்டில் – (47)
- பரிச்சய முகமூடிகள்…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2
- அன்னையர் தினம்