இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

தமிழில்: ரா.கிரிதரன்


நிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்கள். வருடமுழுவதும் இப்படி வேலைப் பார்த்து பல்லாயிரம் ரூபிள்களை ஈட்டத் தொடங்கினர். பழைய விரிப்பிலிருந்து ஒரு தரைவிரிப்பை செய்து வண்ணம் தீட்டினால், ஐம்பது ரூபிள் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் இந்த வேலையை முடித்து விடுவார்கள்.

சுகாவ் ஊருக்குத் திரும்பியவுடன் இந்த வேலையை எடுத்து நடத்துவானென அவன் மனைவி திடமாக நம்பினாள். தற்போதிருக்கும் ஏழ்மை நிலையிலிருந்து விலகி, பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். பழைய வீட்டை இடித்து நல்ல புதிய வீட்டைக் கட்டவும் காத்திருந்தாள். எல்லா தரைவிரிப்பு வண்ணம் பூசும் குடும்பமும் புது வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தருகே இருக்கும் வீடுகள் ஐந்தாயிரம் ரூபிளிலிருந்து இருபத்தைந்து ஆயிரம் ரூபிள் ஏறிவிட்டது.

இதுவரை வாழ்வில் ஒரு முறைக் கூட வண்ணம் தீட்டத் தெரியாத தன்னால் எப்படி திடீரென வண்ணம் தீட்ட முடியுமென சுகாவ் தன் மனைவியிடம் கேட்டான். அந்த அழகிய தரைவிரிப்புகள் எங்கிருந்து வந்தன? அதன் கலவையை எப்படி உருவாக்குவது? சுத்த முட்டாளால் மட்டுமே அந்த வடிவங்களான வண்ணத்தை அடிக்க முடியாதென அவன் மனைவி பதிலலித்தாள். சின்ன சின்ன ஓட்டைவழியே வரைந்து, அதில் வண்ணத்தை நிரப்ப வேண்டியது மட்டுமே அந்த வேலை என அவள் குறிப்பிட்டாள். அவள் எழுதிய கடிதத்தில், மொத்தம் மூன்று விதமான தரை விரிப்புகள் இருப்பதாய் விவரித்தாள்.

1. `ட்ரோய்க்கா` – சில மேலதிகாரிகள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும் படங்கள்

2. `ரியிண்டீர்` – சில மிருகங்கள், குறிப்பாக நான்கு கால் உடையவை

3. பெர்ஷியன் கம்பளங்கள் போன்ற வண்ணங்கள்.

வேறுவிதமான வடிவங்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைவரும் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருப்பதாய் அவள் தெரிவித்தாள். ஏனென்றால், நல்ல தரமான தரைவிரிப்புகள் பல ஆயிரம் ரூபிள்கள் இருக்கும்; இவை ஐம்பது ரூபிள் மட்டுமே.

அப்படிப்பட்ட தரை விரிப்புகளை எப்போது காண்போம் என் சுகாவ் இருப்பில்லாமல் தவித்தான்!!

சிறையிலும், முகாமிலும் அடுத்த நாட்களை திட்டமிடுவதைக் கூட கைவிட்டிருந்தான். அவன் குடும்ப திட்டங்களையும், அடுத்த வருட திட்டங்களையும் கூட அவன் சிந்திப்பதில்லை. அந்த முகாமின் அதிகாரிகள் அவனுக்காக அதைச் செய்கின்றனரே – மிகச் சுலபமான வழியில்லையா?

இன்னும் இரு வெயில் காலங்களும், இரு குளிர் காலங்களும் அவனுக்கு தண்டனை மிச்சமிருந்தது. ஆனாலும் அந்த தரைவிரிப்புகளே அவன் மூளையை அரித்துக்கொண்டிருந்தது….

பாருங்கள், சுலபமாகவும், வேகமாகவும் பணம் செய்ய வழியிருக்கிறதே. அவன் கிராமத்து மக்களை விட பின் தங்கிப் போய்விட்டதில் அவன் மேலேயே அவனுக்கு இரக்கம் வந்தது.. ஆனாலும், சத்தியமாக அவன் ஒரு தரைவிரிப்புகள் தயாரிப்பவனாக மாற விருப்பமில்லை. மக்களுடன் நல்லபடியாகப் பழக வேண்டும், கொஞ்சம் சோப்பு போடவேண்டும்.ஜால்ரா தட்டி வாழ வேண்டுமே.

இந்த உலகத்தில் நாற்பது ஆண்டுகள் உழண்டாலும், பாதி பற்கள் காணாமல் போயிருந்தாலும், முன் வழுக்கை விழுந்திருந்தாலும், இதுவரை லஞ்சம் வாங்கியது கிடையாது- கொடுத்ததும் கிடையாது. முகாமில் கூட இந்த நல்ல விஷயங்களை அவன் கற்றுக் கொள்ளவில்லை.

சுலபமாக சம்பாதித்த பணம் கைகளில் இருப்பதே தெரியாது; நாம் சம்பாதித்தது போல வராது. பழைய பஞ்சாங்க பழமொழி ஞாபகத்திற்கு வந்தது – குறைவு பணம் , குறைவான தேவை. நல்ல திடகாத்தமான உடலும், ஆரோக்கியமான இரு கைகளும் இருக்கிறது. வெளியே போனவுடன் தச்சு வேலையோ, பாத்திரங்களை சரி செய்யும் வேலையோ கண்டிப்பாகக் கிடைக்கும்.

அவன் ஜீவாதார உரிமையை பறித்து எங்குமே வேலை செய்ய முடியாதபடி போனாலோ அல்லது இங்கிருந்து வெளியே போக முடியாவிட்டால் மட்டுமே தரைவிரிப்புகள் வேலையை எடுத்துக் கொள்வான்.

இதற்கிடையே மின்னிலையத்திலிருந்து சுவர் ஒன்று தரையோடு பிளந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சுவர் பாதி இருக்கும்போது அதில் வேலைப் பார்த்த இருவர் அங்கிருந்து கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த கோபுரத்தை கண்காணிக்காமல் விட்டால், மின்னிலையம் யாருக்கும் தேவைப்படாமல் இருக்கும்.

தலைமைக் காவலாளி, ஒரு பெரிய துப்பாக்கியைத் தன் தோளில் சாய்த்தபடி, கண்காணிப்பு கோட்டையை நெருங்கினான். அதன் புகைக் கூண்டிலிருந்து புகை அளவுக்கதிகமாக வந்துகொண்டிருந்தது. சுகாவைப் போன்ற ஒரு கைதி கண்காணிப்பாளன் போல் இரவு முழுவதும் சிமெண்டி திருட்டைத் த்டுக்க அங்கே காவலுக்கு இருப்பான்.

தூரத்தில், பெரிய சிகப்புச் சூரியன் வேகவேகமாக மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதன் கதிர்கள் முகாமின் பல அடுக்குகளையும், கட்டிடங்களிலும் பட்டு தகதகத்துக்கொண்டிருந்தன. சுகாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அய்லோஷா சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

கண்காணிப்பு வீட்டிற்குப் பிறகே அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே வேலைச் செயலர் அலுவலகம். குழுத் தலைவர்களை உள்ளே வரச் சொன்னார்கள். டெர் கூட அங்கிருந்தான். அவன் பழைய குற்றவாளி. ஆனால் இப்போது கண்காணிப்பாளன் வேலை. அரக்கன். கைதிகளை நாயை விட கீழ்த்தரமாக நடத்துவான்.

எட்டு மணி. ஐந்து நிமிடம் கழிந்திருந்தது.கைதிகள் அங்குமிங்கும் அலைந்து பிரிந்து போய்விடுவார்களென காவலாளிகளுக்கு பயமாயிருந்தது. கைதிகளுக்கோ நிறைய சமயம் இருந்தது. கட்டடங்கள் இருக்கும் இடத்தில் நுழையும் அனைவரும் சுள்ளிகளைப் பொறுக்கத் தொடங்கினர் – நெருப்புக்கு பயன்படும்.

டியூரின் பாவ்லோவையும் தன் கூட அழைத்து அலுவலகத்தினுள் நுழைந்தான்.ட்சேசாரும் உள்ளே நுழைந்தான்.ட்சேசார் வசதி படைத்தவன். ஒரு மாதத்தில் இரண்டு பொட்டலங்கள். யார்யாரை காக்காய் பிடிக்க வேண்டுமே பிடிப்பான். இந்த அலுவலகத்திலே நல்ல நிலைமையில் வேலை செய்து வருகிறான்.

குழுவில் மற்றவர்கள் ஒதுக்குப்புரமான ஒரு இடத்தில் உட்கார்ந்தனர்.

யாருமற்ற அந்த பாலைவனத்தில் சூரியன் சிகப்பாய் எழும்பியது. ஓரிடத்தில் கத்தையான கதிர்கள் பனியை உருக்கத்தொடங்க, மற்றொரு இடத்தில் மரத்துண்டுகளைப் போட்டு நெருப்பு கொளுத்திக்கொண்டிருந்தனர். இங்கு ஒரு இரும்பு கம்பி, அங்கு தேவையில்லாத இரும்புகள் சிதறி இருந்தன. அந்த இடத்தில் பலதரப்பட்ட குழிகளும், மேடுகளும் அங்கிமிங்கும் இருந்தன. வண்டிகளை பழுது பார்க்கும் கட்டிடத்தில் கூரையை போட தயாராக இருந்தது. ஒரு மேடான இடத்தில் நின்றிருந்த மின்நிலையத்தில் இரண்டாவது மாடியை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இப்போது ஒருவரும் அருகில் இல்லை. ஆறு கண்காணிப்பாளர்கள் கோபுரங்களிலும், சிலர் அலுவலகத்தினுள் அலைந்து கொண்டும் இருந்தனர். அந்த நொடி கைதிகளுக்குறியது.

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts