தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
சில சமயம் கைதிகளுக்கு எழுதப்படும் கடிதங்களும் தேடுதலுக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஒவ்வொரு கைதிக்கு வரும் கடிதத்தை படிக்க முற்பட்டால் இரவு வந்துவிடும்.
வோல்கோவாய் ஏதாவது தேடவேணுமென கூறிவிட்டான். அதனால் காவலாளிகள் தங்கள் கையுறையை விலக்கிவிட்டு, ஒவ்வொரு கைதிகளின் சட்டைக்குள்ளும் சோதனை நடத்துகிறார்கள்.
பிற்பாடு கைதிகளின் மேல் தங்கள் கைகளால் துழாவி, ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாட்க செய்திருக்கிறானா எனச் சோதனைவிடுவார்கள்.ஒரு சட்டையும், அதற்குள் மற்றொரு சட்டையும் உடுத்த ஒவ்வொரு கைதிக்கும் அதிகாரம் உண்டு. மற்றவை எல்லாவற்றையும் கழற்ற வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறையை வோல்கோவாய் இயற்றியுள்ளான்.
இதற்கு முன்னால் தேடப்பட்ட குழுக்களுக்கு நல்ல ராசி. அதில் சிலர் வாசலைத்தாண்டி சென்றுகொண்டிருந்தனர். மற்றவர்கள் தங்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். கூடுதல் உடுப்பு அணிந்தவர்களை, அந்த குளிரையும் பொருட்படுத்தாது, அங்கேயே ஆடைகளைக் கழட்டிக் கொண்டிருந்தனர்.
இப்படித் தொடங்கிய கூட்டத்தில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியது – வாசலுக்கு மறுமுனையிலிருந்து ‘ம்ம்..வேகமாக நகருங்கள்’ என சத்தங்கள் வரத் தொடங்கின.
எங்கள் 104ஆம் குழுவைத் தேடத்தொடங்கும்போது கொஞ்சம் கரிசனம் காட்டினர்- வோல்கோவாயின் விதிமுறைப்படி ஒன்றுக்கும் அதிகமான ஆடைகள் அணிந்தவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டனர். அவர்கள் முகாமின் லாகப்பிற்கு வந்து அதிகப்படியான ஆடை உடுத்தியதற்கான காரணத்தை தெரியப்படுத்தவேண்டும்.
சுகாவ் எப்போதும் அணியும் ஆடையையே அணிந்திருந்தான். வாங்கப்பா, எவ்வளவு முடியுமோ தேடிக்கோங்க. என் மார்பகத்தில் பரிசுத்த என் ஆத்மாவைத் தவிற வேறேதும் இல்லை. ஆனால் அதிகப்படியான ஆடை உடுத்தியதற்காக பியுனோவ்ஸ்கி, ட்ஸேஸார் இருவரையும் குறித்துக் கொண்டனர். பியுனோவ்ஸ்கி மூன்று மாதங்களே இந்த முகாமில் இருப்பதால், ஒத்துழைக்க மறுத்தான். தான் ஒரு அதிகாரியாக இருந்தோம் என்ற எண்ணத்தை அவனால் விட முடியவில்லை.
‘இந்த குளிரில் மனிதர்களின் ஆடைகளை களையச் சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை.கைதிகளின் சட்டம் எண் ஒன்பது பற்றித் தெரியுமா?’
ஆனால் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த எண் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். அய்யா,உங்களுக்குத் தான் அது தெரியவில்லை.
‘நீங்கள் ரஷ்யப் பிரஜைப்போல நடக்கவில்லை’- பியுனோவ்ஸ்கி கத்திக்கொண்டே -’நீங்கள் கம்யூனிஸ்ட் அல்ல’
கைதிகளின் எண் பற்றிக் கூறியதைக்கூட வோல்கோவாய் அனுமதிப்பான், ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல எனச் சொன்னது அவனை மேலும் ஆத்திரமடையச் செய்தது
‘இவனை பத்து நாட்கள் சிறையில் அடையுங்கள்’
தனியே காவலாளியிடம்
‘இன்று மாலையே தொடங்கட்டும்’
அவர்களுக்குக் காலையில். கைதிகளை லாகப்பில் போடப் பிடிக்காது. ஒரு நாள் முழுக்க வேலை குறைந்துவிடும். அதனால் உடம்பில் ரத்தம் வேர்வையாகச் சொட்டும் வரை வேலை வாங்கிவிட்டு,மாலையில் அவனை லாகப்பில் போடுவார்கள்.
அந்த நிலத்திலிருந்து வலதுபக்கம் திரும்பினால் லாக் அப் வரும். இரு பக்கங்களைக் கொண்ட செங்கல் இருப்பிடம். முதல் பகுதியில் இடமில்லாத்தால், கடந்த இலையுதிர் காலத்தில்தான் இரண்டாம் பகுதியைக் கட்டியிருந்தார்கள்.மொத்தம் பதினெட்டு செல்கள் இருந்தன.இந்த இடத்தைத் தவிர முகாம் முழுவதும் மரத்தாலேயே கட்டப்பட்டது.
குளிர் உடம்பினுள் ஊடுருவிக்கொண்டிருந்தது. இன்று முழுவதும் இங்கு தான் இருக்கும் போலிருக்கிறது. பலதரப்பட்ட மேல்சட்டைகளை அணிந்து வந்தும் வீணாய் போனது.
சுகாவின் முதுகு மிகவும் வலித்தது. நன்றாகப் படுத்துத் தூங்கச் தன் குடிசைக்கு செல்லவேண்டுமென மிகவும் விருப்பப்பட்டான். வேறேதும் அவனுக்குத் தேவையில்லை. நல்ல தடிமனான போர்வைக்குள் புகுந்து கொள்ள ஆசைப்பட்டான்.
கைதிகள் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். தங்கள் சட்டைகளுக்கு பொத்தான்களை அணிந்துகொண்டிருந்தனர். அதற்கு வெளியிலிருந்து காவலாளி கத்தினான் –
‘சீக்கிரம் வாங்க..’
அதற்குப் பின்னால் இருந்த காவலாளியோ மேலும் பலமாக –
‘எவ்வளவு நேரம்பா..சீக்கிரம்..’
முதல் கேட்டுக்கு பின்னால் நின்றிருந்தனர். அந்த கேட் தான் முதல் எல்லைப் பகுதி. அதற்கு அடுத்தது மற்றொரு கேட். இருபுறமும் முட்கம்பிகளால் சட்டம் கட்டியிருந்தனர்.
முகாமின் முதல் கேட் காவலாளி – ‘நில்லுங்கள்’ எனக் கத்தினான்.
மந்தை ஆடுபோல் நின்றோம்.
மெதுவாக இருட்டத் தொடங்கியது. காவலாளியின் நெருப்பு அணையத் தொடங்கியது. கைதிகளை வேலைக்கு அனுப்புமுன்னர் தாங்கள் குளிர் காய நெருப்பு மூட்டிக் கொள்வர்.அது நன்றாக கைதிகளை எண்ணவும் பயன்படும்.
ஒரு கேட்டின் காவலாளி சத்தமான குரலில் எண்ணத் தொடங்கினான் –
‘ஒண்ணு, இரண்டு,மூன்று..’
*
girigopalan@gmail.com
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- பால்டிமோர் கனவுகள்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- வேத வனம் விருட்சம்- 43
- உதிரிகள் நான்கு
- ஜாதி மல்லி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- விரியும் வலை
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- சோறு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- ஆரோக்கியத்தின் பாடல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு