ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்
Fig. 1
Socrates
“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை தான் கற்றுக் கொள்ள வேண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதில் விரும்பாமல்.”
“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை, தனக்கு முன்பே தெரியும் என்றோ, தான் ஏற்கனவே கண்டுபிடித்ததாகவோ நினைத்துக் கொண்டிருந்தால்.”
“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கோ அல்லது ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கோ ஒரு தருணம் வருகிறது அவனுக்குத் தெரியும் என்பதை அவன் அன்று நினைக்காத போது .”
“சாக்ரடிஸ் சொல்கிறார் : நீண்ட தர்க்கம் செய்து நான் ஞானத்தைத் தேடி அடைய வில்லை.”
பிளாடோவின் உரையாடல்கள்
******************************
சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -4
இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.
காலம் : கி. மு. 399
பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)
அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.
Fig. 2
Socrates Mosaic
சாக்ரடிஸ்: நான் கவிஞர் கூறும் ஒரு வாசகத்தை எதிர்க்கிறேன் ! அந்தக் கவிஞர் சொல்கிறார் : “ஜீயஸ் தெய்வந்தான் உலகில் எல்லா வினைகளையும் செய்கிறது. சகல உயிர்களையும் உலகில் வளர்க்கிறது. அச்சம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அவமானமும் உள்ளது !” நான் கவிஞர் சொல்லும் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கிறேன். காரணம் சொல்லட்டுமா ?
யூதி·பிரோ: சொல்லுங்கள் சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அச்சமுள்ள இடத்தில் அவமானமும் இருக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக நோய் நொடிகளுக்கு அஞ்சுவோர், வறுமைப் பிணிக்கு அஞ்சுவோர் தாம் அஞ்சும் அவதி, நோய் போன்ற இன்னல்கள் மீது அவமானப் படுவதாகத் தெரிய வில்லை.
யூதி·பிரோ: ஆம் அது உண்மைதான்.
சாக்ரடிஸ்: ஆனால் எங்கே அவமானம் உள்ளதோ அங்கு அச்சம் இருக்கிறது என்று நான் சொல்வேன். ஏனெனில் எவர் ஒருவர் அவமானப் பட்டு முகத்தைக் காட்ட வெட்கப் படுகிறாரோ அவர் தன் பெயர் இகழப்படும் காரணங்கள் மீது அச்சப் படுவது நியாயமில்லையா ? அவமானத்தின் ஆணிவேர் அச்சம் ! இப்படித்தான் இதையும் விளக்குவேன். எவரிடம் தேசப் பற்று உள்ளதோ அவரிடம் நியாய சிந்தனையும் இருக்கிறது. ஆனால் நியாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் தேசப் பற்று இருப்பதில்லை ! ஏனெனில் தேசப் பற்று என்பது நியாயத்தின் ஓர் அங்கம் ! இதை ஏற்றுக் கொள்வீரா ? அல்லது உமது கருத்து வேறானதா ?
யூதி·பிரோ: நீவீர் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது எனக்கு.
சாக்ரடிஸ்: மெலிடஸ் என்னைப் பற்றி புகார் செய்திருப்பதில் எது நியாயம் எது பழிசுமத்தல் என்று நீவீர் கூறமுடியுமா ? எது தெய்வ நீதி எது தெய்வ அநீதி எது தெய்வ பக்தி என்று விளக்கிச் சொல்வீரா ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! தெய்வ நீதி, தெய்வ பக்தி இரண்டுமே நியாயப் பண்பாட்டின் ஒரு பகுதியே. ஒரு பகுதி தெய்வக் கவனப் பகுதி ! மறு பகுதி மனிதக் கவனப் பகுதி !
சாக்ரடிஸ்: நீவீர் அழகாகப் பகுத்துக் கூறியது கண்டு பூரிப்படைகிறேன் ! ஆனால் நீவீர் குறிப்பிடும் கவனம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை ! குதிரைக்காரன் கவனம் குதிரை மேல் என்று சொல்வது போன்ற ஒரு பொருளைக் கொண்டதா ?
Fig. 3
Socrates Statue
யூதி·பிரோ: ஆமாம் அந்த அர்த்தத்தில்தான் கூறினேன்.
சாக்ரடிஸ்: அப்படியானால் இதை விளக்குவீர் எனக்கு ! தெய்வீகச் சக்தியில் ஞானம் உடைய நீவீர் தெய்வத்துக்குப் பணி செய்வதில் உள்ள பயன்களைக் குறிப்பிடுவீரா ? நம்மை எல்லாம் பணியாட்களாய்ப் பயன்படுத்தும் தெய்வங்கள் சாதிக்கும் சாதனைகள் என்ன ?
யூதி·பிரோ: பல்வகை உன்னதப் பயன்கள் உள்ளன சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அவ்விதம் போரில் போர்த் தளபதிகளும் சாதிக்கிறார் இல்லையா ? போரில் வெற்றி பெருவது எத்தகை இடர்கள் நிரம்பியவை தெரியுமா ?
யூதி·பிரோ: ஆம் உண்மைதான்.
சாக்ரடிஸ்: அதுபோல்தான் வேளாண்மைத் தொழிலும் ! இந்த மண்ணை நிலமாக்கி வளமாக்கிப் பயிராக்கி நமக்கெல்லாம் உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போரே ! எத்தகைய புனிதத் தொழில் வேளாண்மை ! அப்படி விளக்கமாகச் சொல்வீர் தெய்வங்களின் சாதிப்பு வினைகள் என்ன வென்று !
யூதி·பிரோ: சொல்கிறேன் ! அதற்கு ஆழ்ந்த அனுபவம் அவசியம். தெய்வத்தை வழிபடும் போதும், வாழ்க்கையில் தியாகம் செய்யும் போதும் மனிதர் சிந்தித்துக் கேட்கும் கொடைகள் முக்கியமானவை ! குடிமக்களின் இல்லங்கள், நாட்டின் பொதுப் பணிகள் ஆகியவை பாதுகாக்கப்பட ஒருவர் வழிபாடு செய்வது அவசியம். இவற்றைப் பாதுகாக்காமல் விட்டுவிடுவது தேசத் துரோகம்.
சாக்ரடிஸ்: ஒருவர் தியாகம் செய்வது தெய்வத்துக்குக் கொடை அளிப்பதுவா ? அதுபோல் ஒருவர் வழிபடுவது தெய்வத்திடம் யாசகம் கேட்பதுவா ?
யூதி·பிரோ: நிச்சயமாக சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: அதாவது வழிபாடு என்பது தெய்வதுக்கு எப்படிக் கொடுப்பது என்பதா ? அல்லது தெய்வத்திடம் நமக்கு வேண்டுவதை எப்படி யாசிப்பது என்று அர்த்தமா ? தெய்வ பக்தி என்பது மனிதருக்கும் தெய்வத்துக்கும் இடையே நிகழும் வாணிப உடன்பாடா ?
யூதி·பிரோ: வாணிப உடன்பாடு என்பது சற்று கடுமையான வாசகம் சாக்ரடிஸ் !
சாக்ரடிஸ்: சொல்வீர் எனக்கு ! நாமளிக்கும் கொடைகளால் தெய்வங்கள் பெறும் நலங்களும் பலன்களும் என்ன ? தெய்வங்கள் நமக்களித்த கொடைகளைப் பற்றி நாம் யாவரும் அறிவோம். அவற்றை நாம் அடையா விட்டால் நமக்குப் பெருத்த இன்னல்கள் விளையும் ! அதே சமயம் நாமளிக்கும் கொடைகளைத் தெய்வங்கள் அடையா விட்டால் என்ன நடக்கும் ? அல்லது இப்படிச் சொல்லலாமா ? நாம் மட்டும் தெய்வங்களின் கொடைகளைப் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு நாம் எதுவும் செய்யா விட்டால் என்ன நடக்கும் ? நாமென்ன பரிசுகளைத் தெய்வங்களுக்குத் தர முடியும் ? நாம் அளிக்கும் கொடைகளையும், தியாகத்தையும், பரிசுகளையும் தெய்வங்கள் வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கின்றனவா ? வேறென்ன எதிர்பார்க்கும் தெய்வம் நம்மிடத்தில் ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! நமது கொடைகளைத் தெய்வங்கள் நாடுவதில்லை ! வேறென்ன ? நீவீர் என்ன நினைக்கிறீர் ? நான் யூகிப்பது இவைதான் : மனித நேயம், மனித மதிப்பு, நியாயம், நேர்மை, செய்நன்றி மறவாமை !
சாக்ரடிஸ்: நல்ல பதில் ! இவைதான் தெய்வ வழிபாட்டின் அம்சம் என்று சொல்வீரா ? இப்போது எனக்குச் சொல்வீர் : உமது தந்தையாரை நீவீர் சிறை செய்ததின் உள் நோக்கம் என்ன ?
யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! உண்மையைத் தேடி அறிவது ! குற்றத்தைக் கண்டுபிடிப்பது ! குற்றவாளியைத் தண்டிப்பது ! நியாயம், நேர்மை, நீதி இவைதான் தெய்வப் பணிகள் எனக்கு !
சாக்ரடிஸ்: யூதி·பிரோ ! இன்று உம்முடன் உரையாடியதில் பற்பல புதிய கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். சிறந்த உரையாடல் !
யூதி·பிரோ: நன்றி சாக்ரடிஸ் ! நீவீர் எனது உள்ளத்தைத் தோண்டி நேர்மை நெறிகளைக் கொண்டு வந்தீர் ! நன்றி சாக்ரடிஸ் ! நான் செல்ல வேண்டும். மன்றம் துவங்கப் போகிறது ! மறுபடியும் சந்திப்போம் !
சாக்ரடிஸ்: நான் அந்த நாளுக்குக் காத்திருப்பேன். போய் வாரீர்.
(யூதி·பிரோ நீதி மன்றத்துக்குள் நுழைகிறார்.)
++++++++++++
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Plays :
(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.
(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)
(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)
++++++++++++++
ஆதாரங்கள்
1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)
2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Great Quotations Compiled By : George Seldes (1967)
8.. The Wordsworth Dictionary of Quotations (1997)
9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)
10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)
11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)
12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)
13. The Trial of Socrates By : Douglas Linder (2002)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 14, 2009)]
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்
- நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்
- கனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு
- பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள் கதை
- கல்வி தரும் சகலகலாவல்லி மாலை
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)
- சிறகுகளே சுமையானால்…
- வேத வனம் – விருட்சம் 42
- ஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு
- வதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’
- ‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’
- ஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு
- கடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா
- நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற
- மழை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி ! >>
- வழியும் மாலை நேரம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு
- பித்தனின் உடையாத இரவுகள்
- அவன்…அவன்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- புகைக்கண்ணர்களின் தேசம் -1
- புகைக்கண்ணர்களின் தேசம் – 2
- நான் ஒரு பூஜ்ஜியம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4
- விரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)
- ஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)
- சாமி படிக்க வைக்கும்
- ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.
- நர்சரி வார்த்தைகள்
- சவுக்கால் அடியுங்கள்
- நிர்வாணம்
- நீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு
- நிசிவெளி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)