இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


மெதுவாகத் தொடங்கி, ஒரு கையால் அந்த சிகரெட்டின் ஒரு முனையைப் பிடித்து, மறு கையால் அது விழாமலிருக்க கீழே வைத்துக்கொண்டான். ட்ஸாருக்கு வருத்தம் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சிகரெட்டின் ஒரு முனையைப் பற்றி இழுத்தான். சிலருக்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். அதைப் பற்றியெல்லாம் சுகாவ் கவலைப்படவில்லை. ஃபெட்டிக்கோவ்வுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப் பறித்தான்; இதுவே முக்கியமான ஒன்றாகப் பட்டது. தன் உதடுகள் சுடும்வரை இதே சிகரெட்டுகளை இழுத்துக்கொண்டிருக்க முடியும். ம்ம்ம்..புகை மெதுவான அவன் தலை, கால்களில் மென் உணர்வுகளை உருவாக்கியபடி அவன் உடம்பு முழுவதும் பயணித்தது.

இந்த அற்புதமான கணத்தில் தான் அந்த கத்தலைக் கேட்டான் –

‘நம் சட்டைகளைக் களையச் சொல்கிறார்கள்..’

இதுதான் ஒரு கைதியின் வாழ்க்கை. சுகாவிற்கு இது பழக்கமாகிவிட்டது. உங்கள் குரல்வளையைப் பிடித்து அழுத்தும்வரை சத்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஏன் சட்டைகளை கழட்டச் சொல்லவேண்டும்? முகாமின் தலைமைக் காவலாளி உத்தரவிட்டுள்ளார். ஏதோ தவறு நடந்திருக்கிறது.

இவர்களுக்கு முன் பல குழுக்கள் நின்றுகொண்டிருந்தன. அதற்குப் பிறகே தங்கள் குழுவை சோதிப்பார்கள். எங்கள் 104ஆம் குழு முழித்துக்கொண்டிருந்தது. தளபதி வோல்கோவாய் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து காவலாளிகளிடம் ஏதோ கத்திக்கொண்டிருந்தார். காவலாளிகளும் வோல்கோவாய் இல்லாதபோது மெத்தனமாக இருந்தாலும், இப்போது பதறிக்கொண்டிருந்தனர்.

‘சட்டை பொத்தான்களை கழட்டுங்கள்’ – காவலாளி கத்தினான்.

கைதிகள் மத்தியில் எவ்வளவு அவப்பேருடன் இருக்கிறானோ அதைப் போலவே காவலாளிகளிடமும் வோல்கோவாய்க்கு அவப்பேருண்டு. கடவும் சரியாகத்தான் பேர் வைத்துள்ளார் (வோல்க் என்றால் ரஷ்ய மொழியில் ஓநாய் என்று அர்த்தம்). ஓநாயைப் போலவே இருந்தான். உயரமாகவும், கனமாகவும் இருந்த அவன் வேகமாகவும் நகர்வான். சும்மா நிற்கும்போது திடீரென பின்னார் வந்து – `இங்கு என்ன நடக்கிறது` எனக் கத்துவான்.

அவனிடமிருந்து தப்பவே முடியாது. நாற்பத்து ஒன்பதுகளில் ஒரு தடியான தோலில் செய்த சவுக்குடன் அலைவான். சிறைகளில் கைதிகளை இந்த சவுக்கை வைத்தே அடித்திருக்கிறான். வேலை முடித்து சாயங்கால வேளைகளில், கைதிகள் ஓய்வாக தங்கள் குடிசைக்கு வெளியே சாய்ந்து நின்று பேசிக்கொண்டிருக்கும்போது – `ஏன் வரிசையில் நிற்கவில்லை` என பின்னாலிருந்து அடிப்பான்.

அலையைப் போல சிதறி ஓடுவோம்.

அந்த அடியில் கழுத்திலிருந்து ரத்தம் சிந்தும் கைதி, அதைத் துடைத்துக்கொண்டு சிறையைப் பற்றிய பயத்தில் தன் நாக்கை அடக்கி வைத்துக்கொள்வான்.

ஆனால் ஏனோ வோல்கோவாய் இப்போதெல்லாம் சவுக்குடன் அலைவதில்லை.
அப்போதுதான் கோய்லா அலுவலக வேலை எதுவும் செய்யவில்லை என சுகாவுக்கு புரிந்தது. ஆனால் இவனுக்கு அது தேவையில்லாதது.

‘அதாவது வந்து..எனக்கு உடம்பு சரியில்லாதது போல இருக்கு..’ அவமானகரமாக சொன்னான். ஏதோ தனக்குச் சேராத ஒன்றைப் பற்றி குறிப்பிடுவதுபோல்.

கோய்லா தன் பெரிய கரு விழிகளை காகிதத்திலிருந்து உயர்த்தினான். அவன் எண் மேல்சட்டையில் மறைந்திருந்தது.

’ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்? நேற்றிரவே ஏன் சொல்லவில்லை? காலையில் மருத்துவ நேரம் கிடையாது எனத் தெரியுமில்லையா? திட்டக் குழுவிடம் ஏற்கனவே உடம்பு சரியில்லாதவர்கள் பட்டியல் சென்றுவிட்டது.

சுகாவுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் அதே சமயம் மாலையில் அந்தப் பட்டியலில் இடம்பெறுவது கடினம் எனவும் தெரியும்.

‘ஆனால், பாருங்க கோய்லா, நேற்று வரும்படியாக … எனக்கு எதுவும் வலியில்லை’

‘இப்போ எந்த மாதிரி வலிக்கிறது?’.

‘இல்ல, அப்படி கேட்டீங்கனா எங்கேன்னு சொல்ல முடியவில்லை..உடம்பு முழுவதும்..’

சுகாவ் ஒன்றும் மருத்துமனையில் எப்போதும் தங்குபவன் கிடையாது. கோய்லாவுக்கு இது நன்றாக தெரியும். ஆனால் காலையில் இருவரை மட்டுமே வேலை செய்வதிலிருந்து விலக்கு கொடுக்க முடியும்; அதன்படி கொடுத்தும் விட்டான். அவர்கள் பெயரை தன் மேஜையின் கீழே பச்சையாக இருந்த பலகையில் எழுதி வைத்திருக்கிறான். அதற்கு கீழே கோடும் போட்டு விட்டிருந்தான்
’இதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும். கடைசி நேரத்த்தில், வேலை கொடுக்கும்போது சொன்னால் எப்படி? இந்தா இதை வாங்கிக் கொள்’

ஒரு உடம்பு வெப்பமானியை நன்றாக காய துடைத்துவிட்டு சுகாவிடம் கொடுத்தான். அதை வாங்கி சுகாவ் தன் அக்குளில் வைத்துக்கொண்டான்.

ஒரு மேஜையின் நுனியில் உட்கார்ந்ததினால் சுகாவ் அதை கவிழ்க்கப் பார்த்தான். மிக அசெளகரியமாக உட்கார்ந்து கொண்டு, தான் புதிதாக இந்த இடத்திற்கு வந்தது போலவும், ஏதோ சின்ன விஷயமாக வந்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டு பண்ணினான்.

டொவோஷ்கின் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தான்.

குளிர் காலங்களின் காலை வேளைகளில் காவலாளிகள் சற்று கரிசனத்துடனே நடந்துகொள்வார்கள்.ஆனால் மாலையில் கிடையாது.

கைதிகள் தங்கள் சட்டை பொத்தான்களை கழட்டத் தொடங்கினர். ஐந்து மார்பகங்கள் முன்னே செல்ல, ஐந்து காவலாளிகள் சோதனை செய்தனர்.அவர்களின் சட்டைப் பைகளில் கையைத் துழாவி இருப்பதை வெளியே போட்டனர். தேவையில்லாதது வரும்போது – ‘இது என்ன’ எனக் கேட்டனர்.

காலை வேளையில் ஒரு கைதியிடம் என்ன இருக்கும்?கத்தியா? ஆனால் கத்தியை முகாமின் வெளியேயிருந்து கொண்டு வர முடியாது. மூன்று கிலோ ரொட்டியுடன் வெளியெ ஓடினால் தான் அது செய்தியாகும்.ஒருவர் இருநூறு கிராம் ரொட்டியை கவனமாக எடுத்துச் செல்வதில் முன்னெல்லாம் சிலசிக்கல்கள் இருந்தன. அப்போதெல்லாம் குழுவாய் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக எடுத்துச் செல்வர்.

இந்த முட்டாள்தனத்தில் மிஞ்சியது ஒன்றுமில்லை. மக்களை இன்னும் பாதுகாப்பில்லாமல் கவலைப்பட வைக்க இது இன்னொரு வழி மட்டுமே. வேண்டுமானால் அந்த ரொட்டியை சிறிது கடித்துவிட்டு மீண்டும் குழுத் தலைவரிடம் கொடுக்கலாம். என்னதான் இருந்தாலும் இரு துண்டுகள் ஒரே மாதிரித்தான் இருக்கும்?

நடை பழகும்போது ஏதோஒன்று நிமிண்டிக்கொண்டேயிருக்கும்;நம் ரொட்டித் துண்டு காணாமல்போகுமா?என்ன செய்ய் முடியும்?

பல நல்ல நண்பர்கள் இதனால் சண்டைகூட போட்டிருக்கிறார்கள். ஒரு் நாள் மூன்று கைதிகள் தங்களால் முடிந்த அளவு ரொட்டியை எடுத்துக்கொண்டு முகாமை விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் காவலாளிகளை தன்னுணர்வுக்கு கொண்டு வந்தது;அன்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்கள்பகுதி ரொட்டியைத் தாங்களே எடுத்துச் செல்ல வேண்டுமென கூறினார்கள்.

girigopalan@gmail.com

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts