அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
அந்த பேட்டை முழுவதும் கருப்பான மேலங்கி நிறத்தில் காணப்பட்டது. மொத்த வேலைக்கான கூட்டத்தையும் முன்னே வரச் சொன்னார்கள். தன் சட்டையிலிருந்த எண்களை சரி செய்ய வேண்டுமென விரும்பியது சுகாவுக்கு நினைவுக்கு வந்தது. கூட்டதினுள் மெதுவாக உள்ளே நுழையத்தொடங்கினான். இரண்டு மூன்று கைதிகள் எண்களைச் சரிசெய்யும் வரைபடக்கலைஞர்களின் வரிசையில் நின்றிருந்தனர். சுகாவ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அந்த எண்களுக்கான விஷேச குணம் பிரச்சனை மட்டுமே. தனியாத் தெரிந்தாலோ கண்காணிப்பாளர் தூரத்திலிருந்தே கண்டுபிடித்திடுவார். ஆனால் எண்களை சரிசெய்யாவிட்டால் கண்டிப்பாக லாக்-அப்பில் வைத்துவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
அந்த முகாமில் மூன்று ஓவியர்கள் இருந்தனர். அதிகாரிகளுக்கு இலவசமாக ஓவியங்கள் வரைந்து கொடுப்பார்கள்.மேலும் எண்களைச் சரிசெய்து கொடுப்பதும் அவர்கள் வேலையே. இன்று வெள்ளை தாடி வைத்த வயதான ஓவியன் இருந்தான். அவன் வைத்திருந்த பிரெஷ்ஷால் தொப்பியில் எண்களை வரைந்தால், பாதிரியார் நெற்றியில் தொடும் தூய நீரென வழியும்.
அந்த கிழவன் தன் கைகவசத்தினுள் ஊதிக்கொண்டு வரைந்து தள்ளிக்கொண்டிருந்தான். அதுஒரு மெல்லிய உறையினால் தைக்கப்பட்டிருந்த கைகவசம்.அவன் கைகள் குளிரில் விரைத்துப் போயிருந்தன. அவனால் அந்த எண்களை மட்டுமே வரைய முடிந்தது.
சுகாவின் மேலங்கியில் S854 என்ற எண்களை தொட்டு வரைந்தான்.வேகவேகமாக வரைந்து முடித்ததினால் சுகாவால் தன் குழுவுடன் இணைய முடிந்தது. அப்போது தன் குழுவிலிருந்த ட்ஸார் பைப்பில் புகை பிடிக்காமல் சிகரெட்டில் புகை பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்படியானால் தன்னாலும் ஒரு இழுவை அனுபவிக்க முடியும். ஆனால் நேரடியாகக் கேட்காமல், ட்ஸாரின் பக்கத்தில் நெருக்கமாக நின்றுகொண்டு, அவனைத் தாண்டிப் பார்ப்பதுபோல் பார்த்தான்.
அவனை தாண்டிப் பார்த்தாலும், மேற்றுமையோடு ஒருந்தாலும், ஒவ்வொரு இழுவைக்குப் பிறகும் அவனைச் சுற்றிய அடர்த்தியான புகை, மெல்ல மெல்ல அந்த சிகரெட்டின் அளவை குறைந்துக்கொண்டிருந்தது.
பெட்டிக்கோவும் ட்ஸார் அருகே நின்றுகொண்டு, அவன் வாயையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சுகாவின் கடைசி துளி புகையிலையும் தீர்ந்துபோல நிலையில், அந்த மாலை நேரத்தில் புதிதாக ஏதும் வழி கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தான்.
ட்ஸாரின் கடைசி சில இழுவைக்காக , மிக மோசமான ஏக்கத்தைக் கொண்டிருந்தான் சுகாவ். ஆனாலும், பெட்டிக்கோவைப் போல் மிகக் கீழ்த்தரமாக இறங்க மாட்டான்; எந்த ஒருவிஷயத்திற்கும் இன்னொருவனின் வாயை மட்டும் பார்க்க மாட்டான்.
ட்ஸார் ஒரு கலவை நாட்டுக்காரன்; கிரேக்கம், யூதன், காட்டுவாசி- யாரென கண்டுபிடிக்க முடியாது. இன்னும் இளமையாகவே இருந்தான். சில திரைப்படங்கள் எடுத்துள்ளான். ஆனாலும் தன் முதல் படத்திற்கு, முன்பாகவே கைது செய்யப்பட்டுவிட்டான். கரிய, அடர்த்தியான மீசை வைத்திருந்தான். அதை இன்னும் மழிக்காமல் இருக்க ஒரே காரணம் தான் உள்ளது – அவன் கோப்புகளில் அவ்வண்ணமே புகைப்படம் இருந்தது.
‘ட்ஸார் மார்கோவிச்’ , முணகினான் பெட்டிகோவ் ‘எங்களுக்கும் ஒரு இழுவை குடேன்’
அவன் முகம் எதிர்ப்பார்ப்பில் வழிந்துகொண்டிருந்தது.
தன் கருவிழியை உயர்த்தி பெட்டிக்கோவைப் பார்த்தான் ட்ஸெஸார்.தான் புகைக்கும்போது எந்தவிதமான குறிக்கீடும் அவனுக்குப் பிடிக்காது. புகையிலையைக் கொடுப்பதில் அவனுக்கு ஏதும் பிரச்சனையில்லை; ஆனால் தான் புகைக்கும்போது தொந்தரவு செய்வது பிடிக்காது. அவன் மூளையை சுறுசுறுப்பாக்கவே அவன் புகைப் பிடித்துவந்தான். தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தவும் அது உதவியது.
ஆனால் தன் புகையிலையைக் கொளுத்தியவுடன் பல கண்களில் தெரிந்த கடைசி இழுவைக்கான எதிர்ப்பார்ப்பு அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.
ட்ஸெஸார் சுகாவிடம் திரும்பி –
`எடுத்துக்கொள்ளுங்கள், இவான் டெனிசோவிச் அவர்களே` என்றான்.
தான் வைத்திருந்த செப்பு உறையிலிருந்து சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான்.
என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.
மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.
இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’
சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.
அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.
தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.
‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.
அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.
‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.
வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.
‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.
முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.
மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்
(தொடரும்)
http://beyondwords.typepad.com
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- துயரம் ஒரு வரைபடம்
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அறுபடும் மரணங்கள்….
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- பாலாவை இழந்த கணங்களில்…
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- மூன்று கவிதைகள்