இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் தமிழாக்கம் – ரா.கிரிதரன்.


சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட் மட்டுமே கிடைக்கும்.இந்த வருடம் முட்டைக்கோசும் கிடைக்கக்கூடும். மிகவும் நன்றாக விளைச்சல் மாதம் கடந்த ஜூன் தான். அதற்க்குப் பிறகு எல்லா காய்கறிகளும் தீர்ந்துப் போய், வெறும் இலை தழைகளே கிடைத்து வருகிறது. மிகவும் மோசமான மாதம் ஜூலை தான். அப்போது சில தழைகளை மட்டுமே அடுப்பில் போட்டார்கள்.

அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அன்று சுகாவ் மிகக் குறைவாகவே சாப்பிட்டான். தன் குடிசைக்குத் திரும்பாததால், அவன் சிற்றுண்டியை ரொட்டியில்லாமலேயே தின்று முடித்தான். ரொட்டியை பிறகு சாப்பிடுவான். அதுவே சரியாக இருக்கக்கூடும்.

சூப்பிற்குப் பிறகு கம்பங்கூழ் முடிக்க வேண்டும். அதுவும் ஆறிப் போய் இறுகியிருந்தது. சுகாவ் அதை சின்னச் சின்னதாய் உடைத்தான். சூடாக இருக்கும்போதும் சுவை இல்லாமல் இருக்கும் அது, வயிற்றை கொஞ்சம் கூட நிரப்பாது. மஞ்ச நிற புல் போல இருந்தது. சீனர்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது. சூடு செய்யும் போது கொஞ்சம் கனமாக இருந்தாலும், கூழ் அனைத்தும் வற்றிவிடும்.

ஸ்பூனை நக்கிவிட்டு தன் காலணிக்குள் நுழைத்தபடியே சுகாவ் தொப்பி அணிந்தபடி தன் மருத்துவ அறையை நோக்கி நடக்கலானான்.

வானம் இருண்டிருந்தது. முகாமின் விளக்குகள் நட்சத்திரங்களைத் துரத்தியிருந்தது. இரண்டு பெரிய தேடுவிளக்குகள் இன்னும் முகாம் முழுவதும் பெருக்கிக் கொண்டிருந்தது. சண்டைக்குப் பிறகு மீதமிருந்த பல வண்ண எரிதழல்களை இந்த விசேசமான முகாமில் மின் தடை ஏற்படும்போது யுத்தகளம் போல பற்ற வைப்பார்கள். பின்னர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். பணத்தை மிச்சம் செய்வதற்க்காக இருக்கலாம்.

கும்மிருட்டென இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் வேலை செய்ய கட்டளை அறிவிக்கப்படுமென அனுபவசாலிகளுக்குத் தெரியும்.குரமோயின் வேலையாள் ஆறாம் எண் குடிசைக்கு சிற்றுண்டியுடன் சென்றுவிட்டான். இந்த முகாமை விட்டு விலகாத காவலாளி் அவன். வயதான தாடிவைத்த ஓவியன். C.E.D என்ற கழகத்தில் கைதிகளின் உடையில் எண்களை வரைபவன். அங்கே மறுபடியும் டார்டார் வந்துவிட்டான். பொதுவாகவே கம்மியான ஆட்களே இருந்தனர். எல்லோரும் ஏதாவதொரு மூலைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது குளிருக்கு கதகதப்பாக எங்காவது ஒதுங்கிருக்கவேண்டும்.

பொதிமூட்டை பின்னால் தந்திரமாக ஒழிந்துகொண்ட சுகாவ் டார்டாரிடம் தப்பித்துக்கொண்டான்.

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts