இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்


சுகாவ் தன் ரொட்டியைப் பிடித்துக்கொண்டு, காலணியிலிருந்து விடுவித்துக்கொண்டான். அதனுள்ளேயே தன் கரண்டியை வைத்துவிட்டு தன் படுக்கையை நோக்கி தவழ்ந்தபடி போய்ச் சேர்ந்தான். படுக்கையிலிருந்து ஓட்டையை பெரிதாக்கி தன் ரொட்டியை அதனுள் திணித்து வைத்தான்.

தன் தொப்பியைக் கழட்டி அதனுள்ளிருந்து ஒரு ஊசி நூலை எடுத்தான். கைகளால் தை, தை, தை என அந்த ஓட்டையை தைத்து முடித்தான். அதற்குள்ளாக அவன் வாயிலிருந்த சர்க்கரை கரைந்துவிட்டிருந்தது. ஒவ்வொறு நரம்புகளும் அறந்து போவதுபோல் இருந்தது. எந்த நேரத்திலும் கண்காணிப்பாளர் அறையின் முன் வந்த கத்தத் தொடங்குவான்.

சுகாவின் கைகள் மிக வேகமாக வேலை செய்யத் தொடங்கினாலும், அவன் மூளை அதைவிட வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது.ு

பாதிரியான அல்யோஷா புது ஏற்பாட்டை மிக சத்தமாக படித்துக் கொண்டிருந்தான் ( சுகாவிற்காக இருக்கும் – இந்த பயல்கள் புது வரவுகளை கவர விருப்பப்படுகிறவர்கள்)

`கொலை, திருட்டு, ஏமாற்றுதல், மற்றவர் உரிமை மீறுதல் போன்றவற்றிற்காக நீங்கள் துன்பப்படக்கூடாது கிறுஸ்துவராக யாராவது துன்பப்ப்ட்டால், அதற்காக வெட்கப்படக் . கூடாது. ஆனால் கடவுளின் பேரால் மன்னிப்பு கோர வேண்டும்.`

அய்லோஷோ மிக உஷாராணவன். சுவற்றில் சிறிது ஓட்டைப்போட்டு அதில் ஒழித்து வைத்திருந்தான். ஒவ்வொரு தேடுதலிலும் தப்பி விடுகிறது.

முன்னைப் போன்ற அதே மின்னல் வேகச் சுறுசுறுப்புடன், சுகாவ் தன் மேலங்கியை குறுக்காக வெட்டப்பட்டிருந்த கம்பியில் மாட்டி, தன் படுக்கைக்கு அடியிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டான் – ஒரு காலுறை, பழைய துணி இரண்டு, சிறு கயிறு, அதன் முனையில் கம்பி.கட்டிலின் மேலிருந்த மண்ணைத் தள்ளிவிட்டான், தலையணையச் சரிசெய்துகொண்டு அதை தன் காலுக்கடியில் தள்ளிவிட்டான். அப்போது டியூரின் எழுந்து நின்று குரைத்தான் –

‘தூக்கம் முடிந்துவிட்டது. நூத்தி நான்கு. வெளியே வா’

அந்த நேரத்தில் தூக்கம் வந்தாலும் சரி, மொத்த குழுவும் எழுந்துகொண்டு அறைக்கதவை நோக்கி நடந்தது. டியூரின் பத்தொன்பது வருடமாக இங்கேயே இருப்பவன். ஒரு நிமிடம் கூட அதிக நேரத்தில் தன் குழுவை வெளியே எழுப்ப மாட்டான்.அவன் ‘வெளியே வா’ என்னும்போது அடிபணிவதே சிறப்பு.

கனமாக காலடி சத்தத்தையும், கெட்டியாக வாயை மூடியபடி நடந்த மக்கள், ஒவ்வொருவராக மேடையில் ஏறினர். இருபதாம் குழுவின் தலைவன், டியூரினைப் போல் – ‘வெளியே வா’ எனத் தொடர்ச்சியாகக் கத்தினான். தன் காலை சுற்றிய துணியின் மேல் காலணியை அணிந்துகொண்டான் சுகாவ். தன் மேலங்கியை அணிந்து கொண்டு, இடுப்பில் அந்த கயிறால் இருகினான்.

இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு அவன் குழுவின் கடைசி ஆள் குடிசையை விட்டு மறைவதற்குள் சென்று சேர்ந்துகொண்டான். இயல்பு நிலையை விட்டு சற்றே தடிமனாக இருந்த அந்த குழு, யாரையும் முந்தாமல் தங்கள் திடலில் சென்று நின்றுகொண்டனர். பனியில் நொருங்கிய அவர்களது காலணி சத்தம் மட்டுமே கேட்டது.

கிழக்கில் பச்சை நிறத்தில் வானம் மினுக்கத் தொடங்கினாலும், இன்னும் இருட்டாகவே இருந்தது. காலைக் கதிரவனிடமிருந்து திடீர் குளிர் காற்று அடித்தது.

காலையில் நடந்து வெளியே செல்வது போன்ற கொடுமையானது எதுவும் கிடையாது. இருட்டாய், குளிரில், மிகுந்த பசியுடன் நாள் முழுவதும் வேலை செய்வது. நாக்கை இழந்து விடுவீர்கள். எவருடனும் பேசும் எண்ணமே ஏற்படாது.

அந்தத் திடலில் ஓர் இளம் காவலாளி நின்று கொண்டிருந்தான்.

‘என்ன டியூரின் ? எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது? திரும்பவும் தாமதமாக வந்துள்ளாய்?’

சுகாவிற்கு வேண்டுமானால் பயம் ஏற்படலாம், டியூரினுக்குக் பயமே கிடையாது. இந்த குளிரிலும் அவனுக்காக ஒரு சுவாசத்தைக் கூட வீணாக்க மாட்டான். சத்தம் போடாமல் நின்றுகொண்டிருந்தான்.

அதற்குப் பிறகு அந்த குளிரிலும், பனியிலும் குழு அவனைத் தொடரத் தொடங்கியது. கர கர, ம்ருக்,ம்ருக்..

டியூரின் இந்த நூற்றி நான்காவது குழுவ நன்றாக வளர்த்துவிட்டிருக்கவேண்டும், பன்றிக் கரியெல்லாம் கொடுத்து. பழைய இடத்திற்கே இந்தக் குழுவும் சென்று விட்டது. மகா முட்டாளான குழுக்கள் மட்டுமே – சமூக மேம்பாட்டு வாழ்க்கை வழி என்ற இந்த பகுதிக்கு வரும்.

ஐய்யோ.. இன்று மகா மோசமான தினம் ! இருபத்து ஏழு பாகைப் பனி, அதிகப்படியான காற்று, ஒதுங்க இடமும் கிடையாது. நெருப்பும் கிடையாது.

ஒரு குழுத் தலைவனுக்கு நிறைய பன்றிக் கறி தேவைப்படும். திட்டங்களை வகுக்கும் குழுவிற்கும், தனக்கும் தேவைப்படுமே. பார்சல் எதுவும் கிடைக்காவிட்டாலும், அவனுக்கு கறி குறைவாகக் கிடைக்கவில்லை. அவன் குழுவிலிருந்தவர்கள் ஏதேனும் வாங்கிச் செல்வார்கள்.

இல்லையென்றால் இந்தக் குழுவில் பிழைக்க முடியாது.

அங்கிருந்த சின்னப் கரும்பலகையைப் பார்த்து , வயதான கண்காணிப்பாளர் –

`உடம்பு சரியில்லாமல் ஒருவன் மட்டுமே இன்று விடுப்பு, டியூரின். மற்ற இருபத்து மூன்று நபர்களும் வந்திருக்கிறார்களா?`

`இருபத்து மூன்று` – தலையாட்டியபடி டியூரின் கூறினான்.

யாரின்று வரவில்லை. பாண்டலேவேவ் அங்கில்லை. ஆனால் அவனுக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லையே.

அதே நேரம் அந்தக் குழுவினுள் சலசலப்பு ஏற்பட்டது. பாண்டலேவேவ் , நாய்க்குப் பிறந்தவன், இன்றும் பின் தங்கிவிட்டான். இல்லவே இல்லை, அவனுக்கு உடம்பு சரியாகத் தான் உள்ளது. கண்காணிப்பு கூடத்தில் அவனை கூட்டிச் சென்றிருப்பார்கள். யாரையாவது காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பான்.

அவனை இரண்டு, மூன்று மணிநேரம் வைத்திருப்பார்கள். யாருக்கும் கேட்காது. யாருக்கும் தெரியாது.

அவனை அடித்த பின்னர், மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் சொல்லி எல்லாவற்றையும் சரி செய்துவிடுவார்கள்.


Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts