தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
மரத்துப் போன கைகளால் சூடான தண்ணீர் வாளியை தன் காவலாளியின் அறைக்குள் எடுத்துச் சென்றான்.தன் கைகளை வாளிக்குள்விட்டுப் பார்த்தான் – இளம் சூடு அவன் கைகளில் பரவியது.
டார்டார் அங்கு இல்லை. நான்கு காவலாளிகள் ஓர் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் கிடைக்கப்போகும் கம்பு, தானியங்கள் மூட்டைகளைக் குறித்து தங்கள் விளையாட்டுகளை ஒதுக்கி வைத்து மிக தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
தங்களின் சதுரங்கம் காய்கள் கலைவதைக் கண்டு – ‘ஏய் மூளைகெட்டவனே, கதவை மூடு. சதுரங்கம் இருக்கிறது’ – என ஒரு காவலாளி கத்தினான்.
அதிகாலையில் காலணிகளை நனைத்துக்கொள்வதைவிட முட்டாள்தனமான வேலை முடியாது.தன் குடிசைக்கு அவசரமாக ஓடியிருந்தாலும் சுகாவால் மற்றொரு காலணிகளை தேடி கண்டுபிடித்திருக்க முடியாது. தன் எட்டு வருட சிறை வாசத்தில் பலவிதமான காலணிகளை பிரித்துக்கொடுக்கும் முறையை கண்டுருக்கிறான்; லெதர் காலணிகளும், தடிப்பான காலணிகளும் இல்லாமல் பல குளிர் காலங்களை கடத்தியிருக்கிறான்.டிராக்டர் சக்கரத்திலிருந்து காலணிகளை தயாரித்துள்ளான் – பெயர் ‘செட்டீஸ்’.இப்போது காலணிகள் பிரச்சனை பரவாயில்லை.கடந்த அக்டோபரில் சுகாவிற்கு ஒரு லெதர் காலணி கிடைத்தது( நன்றி பாவ்லோ; சுகாவ் அவனுடன் வேலை செய்துள்ளான்). அந்த தடிமனான காலணி இரண்டு அங்குலத்தில் லெதர் மேற்சட்டைகள் அணிவது போல் இருந்தது. தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாக , கிட்டத்தட்ட வாரம் முழுவதும், அவன் புது காலணிகளை உடுத்து உதைத்துமகிழ்ந்தான். அந்த செப்டம்பர் வந்த புது வாலென்கி காலணி வாழ்வின் வசந்தத்தையே மீட்டது இல்லையா?
ஆனால் புத்தக அறையிலுள்ள ஏதோஒரு பிசாசு தங்களிடமுள்ள காலணிகளை திருப்பி கொடுத்தாலெழிய வாலென்கி கொடுக்கக் கூடாதென, கமாண்டரின் காதுகளில் ஓதிவிட்டான்.ஒரே சமயத்தில் இரு காலணிகளை வைத்திருப்பது கைதி விதிகளுக்கு புறம்பானதாகும்.சுகாவ் முடிவெடுக்கும் தருணம் வந்தது.தன்னுடைய மட்டமான லெதர் காலணியை குளிர் காலம் முழுவதும் அணிந்து கொள்ளலாம் அல்லது அதைத் திருப்பி கொடுத்துவிட்டு வாலென்கி அணிந்து கொள்ளலாம். தன் காலணியை – அதற்கு எண்ணை தடவி லகுவாக்கி – அழகாகப் பராமரித்து வந்திருந்தான் . தன் காலணியை விடுவது மட்டுமே அவன் எட்டு ஆண்டுகளில் எடுத்த கடுமையான முடிவாகும்! அதை ஒரு பொதுவான கூட்டத்தில் எரிந்துவிட்டனர். இளவேனிற் காலத்தில் ஒரு நல்ல செருப்பு கிடைப்பது ரொம்ப கடினம்.
தான் என்ன செய்ய வேண்டுமென சுகாவிற்கு நன்றாகத் தெரிந்தது.திறமையாக வாலென்கியிலிருந்து தன் காலை விடுவித்துக் கொண்டு, அதை ஒரு மூலையில் வைத்தான்; தன் காலில் கால்சட்டையின் முடிப்பை அணிந்துகொண்டு, தண்ணீரை காவலாளியின் வாலென்கி அடியில் கொட்டினான்.
‘ஏய் இவனே, மெதுவாய் செய்’ – தன் கால்களை நாற்காலி மீது வைத்தபடி ஒரு காவலாளி கத்தினான்.
‘அரிசியா?’ என மேற்கொண்டு கூறிச் சென்ற மற்றொருவன் – ‘அரிசி வேறு வகை. அதை கம்புடன் ஒப்பீடு செய்ய முடியாது’.
‘அறிவுகெட்டவனே, எவ்வளவு தண்ணீர் உபயோகிக்கப் போகிறாய்? உலகத்தில் எந்த மடையனாவது இப்படி கழுவுவானா?’
‘என்னால் எப்போதுமே வேறுமாதிரி கழுவ முடியாதய்யா, தலைவரே. மிக கட்டியான அழுக்கு இருக்கிறது.’
‘பன்னி, பெண்கள் தரை கழுவி எப்போதாவது பார்த்திருக்கிறாயா?’
சுகாவ் எழுந்து கொண்டான்.
பக்கத்து குழிவிலிருந்த துணை குழுத் தலைவர் மெதுவாக உறுமத்தொடங்கினார்:
‘வாசிலி யோடொர்விச்,அந்த கிடங்கில் இருக்கும் எலிப்பயல்கள் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார்கள். 900 கிராமிற்கு நான்கு ரொட்டிகளுக்கு பதிலாக மூன்றுதான் தந்திருக்கிறார்கள். யாருக்கு குறைப்பது?’
என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.
மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.
இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’
சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.
அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.
தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.
‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.
அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.
‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.
வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.
‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.
முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.
மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்.
girigopalan@gmail.com
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- வேத வனம் -விருட்சம் 35
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- சைவம்
- நினைவுகளின் தடத்தில் – (31)
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- ஏற்புடையதாய்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2