இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்



———————————————————————————————————————————————
.

தினப்படி வேலைகளை கொடுக்கும் அதிகாரிகளிடம் அந்த நாளின் ரிப்போர்ட்டை கொடுக்க மட்டும் என நினைக்கவேண்டாம். அன்று காலை தன் விதி தொங்களில் விடப்பட்டது என சுகாவிற்கு நினைவிற்கு வந்தது ; 104வது குடிசை முகாமை கடைகளிருக்கும் கட்டிடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றுகிறார்கள் – பெயர்: ‘பொது உடமைவாதிகளின் வாழ்வுமுறை’ .அந்த புது இடம் பனிஉறைந்த வழியில் தனியாக இருக்கிறது.அந்த இடத்தில் எதுவும் செய்வதற்குமுன் பள்ளம் தோண்டி, கம்பு நட்டு, இரும்பு கம்பிகளால் சுற்றி வளைக்கவேண்டும். ஓடாமலிருக்க, தங்களை உள்ளேவைத்து வளைக்கவேண்டும். அதற்குப்பிறகே அவர்கள் கட்டிடத்தை கட்ட ஆரம்பிக்கமுடியும்.

ஒரு முழு மாதத்திற்கு கதகதப்பான மூலை இருக்கபோவதில்லை.நாய்க்கூண்டு கூட இருக்காது. நெருப்பை பற்றிய கேள்விக்கே இடமில்லை.தீயிலிட மரங்களுக்கு எங்கே போவதாம்? வேலை செய்துதான் சூடேற்ற வேண்டும்; அதுதான் ஒரே கதி !

குழுத்தலைவன் முகத்தில் இருந்த கவலை எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. அவருக்கு இருக்கும் பல பொறுப்புகளில் புதுவாக சிலவும் சேர்ந்துகொண்டு விட்டதே! 104இல் வேலை செய்வோரைத் தவிர இந்த வேலைக்காக புது குழுவோடு இணையவேண்டும், உருப்படாத சில தடியர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். யாருமில்லாமல் போனாலோ அவரின் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சில பல தடியர்களை கூட்டிக்கொண்டு போயாகவேண்டும்; வேறு வழியில்லை.

முயற்சி திருவினையாக்கும்; அவனுக்கு உடம்பு சரியில்லையென வியாதி-அறைக்கு சென்று விண்ணப்பித்து, சில நாட்கள் விடுப்பு வாங்கக் கூடாது? உண்மையிலேயே, ஒவ்வொரு பாகமும் தன் மூட்டைவிட்டு கழன்றுவிழுமோ எனத் தோன்றியது.

அதற்காகத்தான் சுகாவ் அன்று முகாமின் காவலாளியாரென யோசிக்கத் தொடங்கினான். ‘ஒன்றரை’ இவானின் முறை என ஞாபகம் வந்தது.ஒல்லியாக, கருவிழிகள் உடைய காவலாளி. முதல் முறை சந்திக்கும் எல்லோரும் அவனை மிரட்சியுடனே பார்ப்பார்கள்; நன்றாக பழகிய பிறகே காவலாளிகளில் மிக நல்ல குணமுடையவன் எனத் தெரியும்.

உங்களை லாக் அப்பில் போட மாட்டான்; அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லவும் மாட்டான்.அதனால் சுகாவ் தன் குடிசையில் இன்னும் சில நேரம் படுத்துக்கொள்ளலாமென முடிவுசெய்தான்.சாப்பாட்டு அறையில் 9வது குடிசை இருக்கும் வரையிலாவது தன் படுக்கையிலே இருக்கவேண்டும்.

நான்கு தளத்தைக் கொண்ட அவன் படுக்கைச் சட்டம் ஆடி, அசையத் தொடங்கியது. இரு படுக்கையின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் எழுந்துகொண்டனர்.சுகாவின் மேல்தள படுக்கையிலிருந்து பாதிரியார் அய்லோஷா மற்றும் புய்நோஸ்கி – பழைய கப்பல் படைத் தலைவன் – கீழிறங்கினர்.

இந்த இரு வேலையாட்களும் மண் பீப்பாய்களை தூக்கிக்கொண்டு சூடான தண்ணீருக்காக சண்டையிட தொடங்கினார்கள். கிழவிகளைப்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘ஏய் பட்டாசு மாதிரி வெடிக்காதீங்கப்பா’ – என 20ஆம் குழுவில் இருந்த மின்சார நிபுணர் கூறி ‘சும்மாயிருங்க’ என ஒரு காலணியை அவர்கள் மேல் வீசினார்.

காலணி ‘தட்’ என கம்பத்தின் மேல் விழுந்தது. வாக்குவாத சத்தமும் நின்றது.

பக்கத்து குழிவிலிருந்த துணை குழுத் தலைவர் மெதுவாக உறுமத்தொடங்கினார்:

‘வாசிலி யோடொர்விச்,அந்த கிடங்கில் இருக்கும் எலிப்பயல்கள் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார்கள். 900 கிராமிற்கு நான்கு ரொட்டிகளுக்கு பதிலாக மூன்றுதான் தந்திருக்கிறார்கள். யாருக்கு குறைப்பது?’

என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.

இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’

சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.

அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.

தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.

‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.

அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.

‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.

வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.

‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.

முடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.

மெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்.

1 – காம்ரேட் என்ற வார்த்தையை கைதிகள் உபயோகப்படுத்தமுடியாது.

Series Navigation

author

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்

Similar Posts