தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Civil War Soldiers -1
“நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் !”
ஆப்ரஹாம் லிங்கன் (செப்டம்பர் 17, 1862)
“இந்த ஆழமான போர் வேதனை விரைவாக மறைந்துவிடப் பரிவோடு நாம் நம்பிக்கை வைக்கலாம். அல்லது மெய்வருந்திப் பிரார்த்தனை செய்யலாம். ஆயினும் 250 ஆண்டுகளாய் நாம் கடுமையாக உழைத்துச் சேமித்த சொத்துக்கள் எல்லாம் பலனற்றுச் சிதைக்கப் படவும், சவுக்கடியில் சிந்திய குருதிக்கு ஈடாக வாள் மூலம் பலிவாங்கி இந்தப் போரை நீடிக்கவும் கடவுள் விரும்பினால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல் இப்போதும் சொல்லப்பட வேண்டும்: ‘இறைவனின் நியாயத் தீர்ப்புகள் மெய்யானவை, நேர்மையானவை என்று.’
ஆப்ரஹாம் லிங்கன், இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்புரை (மார்ச் 4, 1865)
“கடவுள் சாதாரணப் பொதுமக்களைப் பெரிதும் விரும்புகிறார் ! அதனால்தான் அவர் பெருத்த எண்ணிக்கையில் அவர்களை உண்டாக்கி இருக்கிறார்.”
ஆப்ரஹாம் லிங்கன்
“அமெரிக்க எஜமானர்கள் தாமாகவே முன்வந்து தமது அடிமைகளை விடுவிக்கும் முன்பு ரஷ்யா முழுதையும் ஆளும் ஏகாதிபதி தன் கீரீடத்தைக் கீழே எறிந்துவிட்டு அதன் குடிமக்களுக்கு விடுதலையை அறிவித்திடுவார்.”
ஆப்ரஹாம் லிங்கன் (1855)
Fig. 2
Civil War Soldiers -2
(செப்டம்பர் 17, 1862)
காட்சி -4 பாகம் -4
பங்கெடுப்போர் :
ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.
இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.
இப்போதைய காட்சி:
உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. பெரு வெற்றி பெற்ற பிறகு ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. அரசாங்க உறுப்பினருடன் லிங்கன் “அடிமைகள் விடுதலை அறிவிப்பு” வெளியீடு பற்றிப் பேசுகிறார். தர்க்கம் முடிந்து அவர்கள் யாவரும் போன பிறகு பர்னெட் ஹ¥க் மட்டும் தனியே நின்று லிங்கனுடன் வாதாடி ஆத்திரப்பட்டுத் தன் பதவியை விட்டு விலகுகிறார்.
Fig. 3
Lincoln with Two Aged
Soldiers
பர்னெட் ஹ¥க்: (மனமுடைந்து) அப்படியானல் நான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன் ! நன்றி உங்கள் ஆலோசனைக்கு ! நான் போகிறேன் !
(பர்னெட் ஹ¥க் ஆவேசமாய் எழுந்து விரைவாகச் செல்கிறார்)
ஆப்ரஹாம் லிங்கன்: (பொறுமையாக) மிஸ்டர் பர்னெட் ஹ¥க் ! ஆத்திரப்பட்டு எதுவும் செய்யாதீர். உங்கள் எதிர்ப்பு வாதத்தை நான் கேட்க விரும்பினேன் ! அதைக் கேட்டு நான் வருந்த வில்லை ! நீங்கள் ஏன் பதவி விலக்கம் செய்ய வேண்டும் ? என் மீது கோபப்பட்டு உங்கள் நல்ல பதவியை விட்டுவிடுவது பொறுப்பற்றது !
பர்னெட் ஹ¥க்: நான் முன்பே செய்ய நினைத்தேன். தருணம் கிடைத்தது இப்ப்போது ! உங்கள் மீது கோபமில்லை எனக்கு !
ஆப்ரஹாம் லிங்கன்: பின் யார் மீது கோபம் ? எதற்காகச் செய்கிறீர் ?
பர்னெட் ஹ¥க்: உங்கள் மீது எனக்குக் கோபமில்லை ! உங்கள் போர்க் கொள்கை மீது கோபம் ! தென்னவரை வடபுறத்தார் தோற்கடித்து இப்போது அடிமையாக்கப் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! பழைய அடிமைகள் விடுவிக்கப்பட்டு இப்போது புது அடிமைகள் உருவாக்குகிறீர் !
ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) நல்ல விளக்கம் கொடுத்தீர் என் கொள்கைக்கு ? நான் பழைய அடிமைகளை விடுவித்துப் புது அடிமைகள் படைக்கிறேனா ?
பர்னெட் ஹ¥க்: தென்னவர் தாமாகத் தம் அடிமைகளை விடுவிக்க வேண்டும் ! அமெரிக்க ஜனாதிபதி அதை அழுத்தமாகத் திணிக்கக் கூடாது !
Fig. 4
Civil War Army Drill in the Field
ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) தென்னவரிடம் கேட்டு வந்து என்னிடம் சொல்வீரா எப்போது அவர் அடிமைகளுக்கு விடுதலை அளிப்பார் என்று ? வற்புறுத்தப் படாத எந்த உன்னத கொள்கைக்கும் விடிவு காலம் வராது ! கருணை யில்லாத மனிதர் உருமிக் கொண்டு எதிர்ப்பார். உள்நாட்டுப் போர் நிறுத்தப்படும் போது அடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி விடுதலை செய்ய அரசியல் நியதிகள் வடிக்கப்பட்டுச் சட்டங்களாய் எல்லா மாநிலங்களிலும் நிறுவப்பட வேண்டும். அது என் தலையாய கடமை ! அதைத் தடுக்க நீவீர் முயல்கிறீர்.
பர்னெட் ஹ¥க்: மிஸ்டர் பிரசிடெண்ட் ! இப்படித் தீவிரக் கொள்கை உடைய உங்கள் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது ! அதனால்தான் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன் !
ஆப்ரஹாம் லிங்கன்: சிலருடைய பேச்சில், போக்கில் துரோகம் காணப்படுகிறது.
பர்னெட் ஹ¥க்: துரோகம் செய்வோருக்கு எதிராய்ப் போரிடுகிறோம் !
ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை துரோகம் செய்வோரைத் தோற்கடிப்போம் ! நான் அவருடன் அமர்ந்து சமாதான உரையாடி அவரைத் திருத்த முயல்வேன்.
பர்னெட் ஹ¥க்: அவ்விதம் புரியும் அரசியல் தந்திரம் பலவீனமானது.
ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை அது மனித நன்னம்பிக்கையில் செய்வது. அது மனித நேயத்தில் புரிவது. உம்மைப் பல நாட்களாய் நான் கவனித்து வருகிறேன். ரிப்பபிளிக்கன் கட்சியில் எனக்குப் பின்னால் நீவீர் சதிவேலை செய்து வருவது எனக்குச் தெரியும். என்னைக் குறைகூறுவது பற்றிக் கவலை இல்லை எனக்கு ! ஆனால் உமது சதிவேலைகள் நான் இரண்டாம் முறை பிரசிடெண்டாக வரக்கூடாது என்னும் குறிக்கோளில் நடக்கின்றன. நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் ! கடவுள் எனக்கு அளித்திருக்கும் இந்த அபாயப் பணி உன்னதமானது ! எனக்கிருப்பவை இன்னும் சில நாட்களே ! எனது ஜனாதிபதிப் பதவி நாட்கள் மிகக் குறைவு ! ஆனால் நான் அதற்குள் முடிக்க வேண்டிய கடமைகள் அநேகம் ! எனக்குள்ள அதிர்ச்சிகள், மனத்துடிப்புகள் எனக்கு மட்டும் தெரியும் ! எனது தேசீயக் கண்ணோட்டம் நமது மூதாதையர் அமைத்த இந்த நாட்டைப் பிணைப்பதற்கே ! சுதந்திரமாய் வாழ விரும்பும் இந்த நாட்டு மக்களுக்கே ! அந்த மகத்தான பணியைப் போவதற்குள் நான் செய்ய வேண்டும். என்னைத் தடுக்க முயல்கிறீர் ! அந்த முறையில் நீவீர் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறீர் ! இப்போது நடுக்கட்டத்தில் பொறுப்பற்றுப் பதவியை விட்டு விலகிச் செல்கிறீர் ! உம்மைத் தடுத்து நிறுத்துவேன் என்று எண்ண வேண்டாம் ! தாராளமாய் வெளியேறலாம் ! தயங்காமல் விலகிச் செல்லலாம் ! உம்மைப் போன்ற சங்கிலித் தொடர்பு வலுவுள்ள வடத்தை பலவீனமாக்கி விடும் ! நீவீர் போகலாம் !
(பர்னெட் ஹ¥க் வேகமாய் வெளியேறுகிறார். லிங்கன் மேஜை மணியை அடிக்கிறார். பணியாள் வருகிறான்.)
Fig. 5
Federal Cavalry
ஆப்ரஹாம் லிங்கன்: மிஸ்டர் ஹேயை உள்ளே வரச் சொல் ! (பணியாள் போகிறான். மிஸ்டர் ஹே நுழைகிறார். லிங்கன் ஷேக்ஸ்பியரின் “புயல்” (Tempest) நாடகத்தைக் கையில் எடுக்கிறார்.)
மிகவும் களைத்துப் போய் உள்ளேன். நான் வாசிக்கும் அந்த வரிகள் உனக்குத் தெரியும். எங்கே அவற்றைப் படி ! மீண்டும் நான் கேட்க வேண்டும் (லிங்கன் நூலை ஹேயிடம் கொடுத்துச் சாய்வு நாற்காலில் ஓய்வாக அமர்கிறார்)
மிஸ்டர் ஹே: (புயல் நூல் பக்கத்தை எடுத்து வாசிக்கிறார்)
நம் நடிகர்களின் கூத்தாட்டம்
இப்போது ஓய்ந்தது !
நான் முன்னு ரைத்தது போல்
எல்லாமே உணர்ச்சி மயம் !
காற்றோடு கரைந்தது
மெலிந்து போய் ! அந்தக்
காட்சியின் வேரற்ற
பின்னலாய்ப் போனது !
பரம்பரைச் சொத்தாய் வந்திடும்
முகில் தொடும் கோபுரங்கள்,
மகத்தான மாளிகைகள்,
மௌன ஆலயங்கள்,
மாபெரும் பூகோளம் கூட
மறைந்து போய்விடும் (ஒருநாள்) !
இச்சிற்றுருவ
அணிவரிசை மறைந்தது போல்
எல்லாத் தளவாடமும்
இடம் பெயர வேண்டும் !
நாமதை ஒத்தவர் தாம் ! யாவும்
கனவுகள் கட்டிய
காட்சி போன்றவை !
சின்னஞ் சிறிய நம்முடை
வாழ்வினைச் சுற்றிலும்
வட்ட மிட்டுள்ளது
தூக்கம் !
ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! நாமதை ஒத்தவர்தான் ! கனவுகள் கட்டிய காட்சி மாளிகையில் நமது வாழ்வு சிறிதுதான் !
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play :
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
6 (a) The Great Quotations Compiled By : George Seldes (1967)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 10, 2009)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி !(கட்டுரை 55)
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)
- பம்பரக்கோனே !
- மூவரின் நூல்கள் வெளியீடு
- எனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது
- வெள்ளநிவாரணம்
- கருணையும் கவிதையும்
- “அநங்கம்” இதழ்
- இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு
- தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்
- சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்
- சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்
- வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்
- எச்சரிக்கை வேண்டுகோள்!
- அநங்கம் ஆய்வரங்கம்
- போர்முனை இரவுகள்
- வேறு ஒன்றும்…
- சுமந்தும் சார்ந்தும்…
- சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப
- திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி
- திருக்குறளில் ஊழியல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு
- புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை
- மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!
- பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்
- நினைவுகளின் தடத்தில் – (27)
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- தலைகீழாய் எரியும் ஜின்கள்
- நண்பர்கள்
- இருள் கவியும் முன் மாலை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>
- வேத வனம் விருட்சம் 27
- கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்
- எதேச்சதிகாரம்
- மனிதன் என்று
- நீ….!