நெருடல்கள்

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

ஸ்ரீரஞ்சனி


“Look at your beautiful son”| என்று கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி தாதி என் கையில் தந்த என் மகனை இனம் புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில் வைக்கிறேன். பஞ்சிலும் மிருதுவான அந்தக் கால்கள் என் கைகளில் பட்டபோது என் மனதில் பல வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன.

இவன் என் மகன், எனக்குச் சொந்தமானவன், என் அன்பில் நனைந்து பதிலுக்குத் தன் அன்பில் என்னை முழுக வைக்கப் போகிறவன் என்ற நினைப்பே இனித்தது. அவன் நெற்றியை என் உதட்டருகே எடுத்து மெல்ல முத்தமிட்டேன்.

இவனை உருவாக்குவதில் நானும் ஒரு பங்கு வகித்திருக்கிறேன். என் ஒரு பகுதி இவனில் வாழ்கிறது என்பது நம்ப முடியாத அதிசயமாக மனதில் படபடப்பையம் நிறைவையும் தந்ததில் மிகவும் சிலிர்த்துப் போகிறேன்.

அரைத் தூக்கத்திலிருந்து விழித்த என் மனைவி சர்மி, என்னைப் பார்த்து மிகுந்த காதலுடன் புன்னகைக்கிறாள். களைப்பாகவும் மருந்து மயக்கத்தில் ஆயாசமாகவும் இருந்தாலும் கூட, அவள் முகத்தில் தாய்மையின் ஜோதி தெரிந்தது. மகனுடன் அவளருகே போன நான் மகனை அவளருகே வளர்த்தி விட்டு, அவள் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுக்கிறேன்.

“சர்மி, என்ன அமைதியாக, எவ்வளவு நிறைவாக என் மகன் நித்திரை கொள்கிறான் பாரேன். என்னால் இவனுக்கு ஒரு நல்ல அப்பாவாக, இவன் வாழ்வுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, இவனின் நிம்மதிக்கு இடைஞ்சல் இல்லாத உறவாக வாழமுடியுமா?|| சொல்லும் போது என் நாக்கு தளுதளுக்க கண்கள் பனிக்கின்றன.

“சும்மா இருங்கோ…., நிச்சயமாக நீங்கள் நல்ல அப்பாவாக மட்டுமன்றி உற்ற தோழனாகவும் இருப்பீர்கள்.|| என் முதுiகை இதமாகத் தடவிக் கொடுக்கிறாள் சர்மி. குனிந்து அவள் உதட்டில் நன்றிப் பெருக்குடன் முத்தமிட்ட போது அவளின் இறுக்கமான அணைப்பு எனக்கு மிகவும் தேவையாக இருந்தது.

எத்தனை பெரிய பொறுப்பொன்று என் கையில், நிபந்தனையற்ற அன்பைக் கொடுத்து, சுயமதிப்பை வளர்த்து, விழும் போது கை கொடுத்து, கலங்கும் பெழுதுகளில் தோள் கொடுத்து, சுற்றுப்புறப் பொறிகளிலிருந்து பாதுகாத்து, எது சரி எது பிழை என விழுமியங்களைக் கற்பித்து……. அவனை நல்ல முறையில் வளர்த்தெடுக்க என்னால் முடியுமா?……………எண்ணக்கோர்வைகளின் இடையில் என் அப்பாவின் முகம் எட்டிப் பார்த்தது. நான் பிறந்தபோது அவர் மனதில் என்ன எண்ணங்கள் இருந்திருக்கும் —–?

“ Annath sweetie, your dad loves you. He wants to be part of your life “ மிக அமைதியான, இங்கிதமான குரலில் சொல்கிறார் மிசிஸ் ஜோன்.— கோட்டினால் எனக்கென என் நல்வாழ்வை உறுதிப்படு;த்த நியமிக்கப்பட்ட சேவையாளர்.

“ No, no!” திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

“You need him to have a healthy life” என்கிறார் மிசிஸ் ஜோன்.—

“He doesn’t love me|| ”

அப்பா எனக்கு என்ன செய்திருக்கிறார். அவர் என்ரை கவலைகளைக் காது கொடுத்து கேட்டிருக்கிறாரா? அல்லது என் விருப்பு வெறுப்புக்களில் அக்கறை கொண்டிருக்கிறாரா? இல்லை எனது பள்ளிக்கூடப் பாடங்களில் உதவி செய்திருக்கிறாரா? அவரை எனக்கு என்னத்துக்கு தேவை? நான் செய்வது பிடிக்காவிட்டால் கத்துவார். கையில் அகப்பட்டதால் அடிப்பார்.

“ He really hates me, I am scared of him. I don’t have a dad, I don’t want him”;.|| என பலத்து அழுகிறேன்.

மிசிஸ் ஜோன் எவ்வளவோ தன்மையாக, பல காரணங்கள் காட்டியும் நான் என் முடிவில் உறுதியாக நின்றது இன்னும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. என் பிடிவாதத்தில் நான் உறுதியாக இருப்பதை உணர்ந்த அந்தப் பெண், மேற்பார்வை உள்ள விசிற்ரேசனுக்கு சிபாரிசு செய்ய ஆத்திரம் கொண்ட அப்பா ஏதோ வர வேண்டும் என்பதற்காக ஒரு சில தடவைகள் வந்தார். பின் நான் ஒட்டிக் கொள்ளாமல் விட்டதாலோ இல்லை தன் கர்வம் பாதிக்கப்பட்டதாலோ அல்லது அம்மாவுக்கு முழுமையான கஸ்ரடி கிடைத்த கோவத்திலே என்னவோ அலுத்துப் போய் நிற்பாட்டி விட்டார்.

மகனை அணைத்த வண்ணம், “சாரங்கள் என்று பெயர் வைப்போமா?|| என்கிறாள் சர்மி. சூழ்நிலை அழுத்தத்தை மாற்றலாம் எனப் போலும்….

உள்ளத்தில் உவகை பொங்க அவன் தலையை வருடிபடி “சாரங்கன்|| என்று நான் அழைத்த சத்தம் கேட்டுப் போலும் என் மகன் கண்விழித்து என்னைப் பார்க்கிறான். அவன் பார்வை “உன்னை நம்பித்தான் நான் இவ்வுலகிற்கு வந்துள்ளேன்|| என்று சொல்வது போலிருந்தது.

கதவில் மெல்ல தட்டும் சத்தம் கேட்டு “உழஅந in|| என்கிறேன். நண்பன் சுரேன், மனைவியுடனும் மகளுடனும் வந்திருந்தான்.

“உங்கள் மூவருக்கும் பயன்படக்கூடிய ஒரு அன்பளிப்பு இது|| என பெற்றோர்த்துவம் பற்றி ஒரு புத்தகமும் கசற்றும்| தருகிறான்.

அது பழைய நினைவு ஒன்றை மீட்ட வைக்கிறது.
“ஒரு குட் நீயூஸ் மச்சான் நான் அப்பாவாகப் போகிறேன்|| ஒரு வெள்ளிக் கிழமை வேலை முடிந்து ஒன்றாகப் போகும் போது நண்பன் சுரேனுக்கு சொல்கிறேன், “வாழ்த்துக்கள் மச்சான்!, ஒரு பிள்ளைக்கு அப்பாவாகவோ இல்லை அம்மாவாகவோ ஆவதில் கிடைக்கும் சந்தோசம் எதிலும் கிடையாது.|| என்கிறான்.

“எங்கள் பெற்றோரின் வளர்ப்புமுறை எப்படியோ எங்கள் பிள்ளை வளர்ப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற உண்மை மனதில் பீதியை ஏற்படுத்துகிறது.||….. இது நான்
இந்த உரையாடலை நினைவு வைத்திருப்பான் போலும்….

அன்று அப்பா ஓடிப்போன போது மனதில் வந்த அமைதிக்கு ஈடு இணை எதுவுமில்லை. கோடை கால விடுமுறைக்கு முன் நடந்த பாடசாலை விழாவில் என் பங்கு நிறைவாக அமைந்த மகிழ்ச்சியில் பக்கத்துக் கடையில் வாங்கிய ஐஸ்கிறீம் சாப்பிட்டுக் கொண்டு அம்மாவுடன் போய் வீட்டைத் திறந்த போது அது அதிசயமா? இல்லை அதிர்ச்சியா? ; என நம்ப முடியவில்லை. அப்பா வீட்டை விட்டு வெளியேறி விட்டார் எனப் புரியும் வகையில் பொருட்கள் அப்புறப் படுத்தப்பட்டிருந்தன.

தன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் போனதில் அவருக்கும் மகிழ்ச்சி, தினமும் அழுது அழுது தனக்குள் வெந்து போன அம்மாவுக்கும் விடுதலை, பயந்து பயந்து செத்துக் கொண்டிருந்த எனக்கும் நிம்மதி, என்று ஆயாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

அம்மாவுக்கு புருசனைக்குள் கைக்குள் வைத்திருக்கத் தெரியாது. அம்மா சரியாக இருந்தால், வீட்டுச் சாப்பாடு சரியாயிருந்தால் ஏன் வெளியில் அவர் போகிறார். என்றெல்லாம் தமது நாக்கை விரும்பிய விதமெல்ல்hம் வளைத்து ஆக்கள் பல கதைகள் கதைத்து முடிய பல வருடமானது. அவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருக்குது என்று தெரிந்தாலும் இப்படி ஓடிப் போவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அம்மாவை எப்ப டிவோஸ் பண்ணி எங்கள் வாழ்வுக்கு விமோசனம் தருவார் எனக் காத்திருந்த எனக்கோ வார்த்தையில் வடிக்க முடியாத ஆறுதல் கிடைத்தது.

பாத்திரங்கள் உடையும் ஒலியும், பலத்த சத்தத்தில் அப்பாவின் உறுமலும் கேட்டு நித்திரையில் இருந்த நான் எத்தனை நாள் திடுக்கிட்டு எழும்பி, எழும்பிய வேகத்தில் குசினிக்குள் ஓடியிருக்கிறேன். உதட்டிலோ, முரசிலோ இரத்தம் வழிய அழுது கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்;து இரத்தக்கண்ணீர் வடித்திருக்கின்றேன் என்றெல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்போதும் என்மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக என்னைக் கண்டதும் எதுவும் நடக்காதது மாதிரி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, “ஆனந் முகத்தைக் கழுவிக் கொண்டு வா சாப்பிட, அம்மாவுக்கு வேலைக்கு நேரம் போகுது|| என்பார். வழமை போல் நான் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவேன். எனக்கு அப்பாவில் மிகுந்த ஆவேசம் வரும். உடம்பெல்லாம் என்னையறியாமல் நடுங்கும். என்ன செய்வது எனத் தெரியாது அசையாது நிற்பேன். 911க்கு அழைக்க வேண்டும் போல வேகம் வரும்.

“உன்ரை அம்மா ஒரு வேசி|| என்று என்னவெல்லாமே சொல்லி அப்ப கத்துவார். நான் அம்மாவின் பக்கம் நிற்கிறேன் என்ற கோவத்தில், அந்த ஆற்றாமையில், பொறாமையில் பின் என்னிலும் ஒரு பிழை கண்டு பிடித்து எனக்கும் அடிக்க வருவார். அம்மாவைக் தப்பான ஆளாக எனக்குக் காட்டுவதன் மூலம் தான் என்னத்தைத் தான் சாதிக்க நினைக்கிறாரோ என பல தடவைகள் நான் சலித்துக் கொண்டதுண்டு.

அவர் சொன்னது போல் வேலைக்குப் போக முன் குளியலறையைச் சுத்தம் செய்ய நேரமில்லை என்று அம்மா சொன்னதோ, இல்லை அவர் சொன்ன ஏதோ ஒன்றுக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததோ இப்படி ஒரு பூகம்பத்தில் வந்து முடிந்திருக்கிறது எனப் பின் அறி;வேன்.

இப்படிப் பல நிகழ்வுகள். ‘வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்| என்ற மாதிரித்தான்.

“வா கடைக்குப் போவோம், உனக்கு வழல வாங்கித் தருகிறேன்|| என்று எப்போதாவது அப்பா அன்பாகக் கேட்டாலும் கூட, அங்கு நான் ஏதாவது பிழை செய்து அவர் கோபத்துக்குக் காரணமாகி விட்டால் என்ன நடக்குமோ என மனதில் பீதி வரும். மிகக் கடுமையாக மறுப்பேன். அழுவேன். அதற்கும் அவர் அம்மாவைத்தான் வசை பாடுவார். “உன்ரை அம்மா ஒரு கிறேசி வுமன், அவள் தான் உனக்குத் தேவையில்லாத கதை சொல்லி உன்னை என்னிடம் இருந்து பிரிக்கிறாள்|| என்பார்.
எந்த மனித மனமும் தன்னுடன் ஒத்திசையக்கூடிய பிறழ்வு இல்லாமல் செயல்படக்கூடிய, இயல்பாக, போராட்டமின்றி வரும் அன்பைத் தானே நாடும். தன் செய்கைகளைக் கூட விளங்காத ஆளைப் பார்த்து நான் என்றுமே பரிதாபப்பட்டதே கிடையாது. சுpல வேளைகளில் வீட்டுக்கு வரவே பிடிக்காது. ஆனால் அம்மாவுக்காக வரவேண்டியிருக்கும்.

என் மகனை மடியில் வைத்துக் கொண்டு எப்படி அவள் பிறந்தாள் என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த சுரேனிடமிருந்து தான் பிள்ளையை வாங்க அடம்பிடித்த, அவன் மகளின் அழுகைச் சத்தம் என்னை என் நினைவிலிருந்து மீட்டது.

“உமாக்குட்டி உன்ரை மடி சின்னனம்மா. குட்டிக் கையாலை பேபியைப் பிடிக்க இயலாதெல்லோ. இந்தா பார். உமாக்குட்டி பேபியிலை அழுத மாதிரி இப்ப அப்பா அழப் போறாராம்.|| அவனின் விளக்கத்திலும் திசைதிருப்பலிலும் உமா தன்னை மறந்து சிரித்தாள். அதைச் சாக்காக்கி அவர்கள் வெளியேறினர்.

உமா என் பிள்ளைப் பருவத்தில் நான் அடம் பிடித்தவொரு சம்பவம் ஒன்றை நினைவுட்ட “லழர உசயணல உhடைனஇ அழஎந யறயல|| என்ற அப்பாவின் கரகரப்பான குரல் என் காதுகளில். அவர் கை என் முதுகில். பியர் வாடை என் நாசியில் வந்து போனது..

எந்த நேரமும் சிகரட் மணமும் பியர் வாடையும் அடிக்க வலம் வரும் அப்பா, எப்போதும் என்னைத் தாழ்வாகப் பேசும் அப்பா, அம்மாவில் பிழை காணும் அப்பா, தான் மட்டும் தான் சரி என எல்லாத்துக்கும் உச்சஸ்தாயிக் குரலில் கத்தும் அப்பா, வெருட்டி பயப்படுவதன் மூலம் தன் வழியில் தான் நினைப்பதைச் சாதிக்க நிற்கும் அப்பா. காலையில் எழுப்பப் பிந்தினால் என் முதுகில் பளார் என அறைவதன் மூலம் அலறலுடன் எழும்ப வைக்கும் அப்பா. ஒருநாள் அம்மா வநய போட்டுத் தரவில்லை என பிரளயம் நடத்தி என்னைப் பள்ளிக்கூடம் கூட்டிப் போக மறுத்த அப்பா. என் பள்ளிக்கூட வேலையில் உதவுவது தன் வேலையல்ல அது ரீச்சர்மாருடைய வேலை என நியாயம் சொல்லும் அப்பா——- இதுவே என் நினைவில் நிற்கும் அப்பா.

அவருடன் இருக்கும் பொழுதுகளில் எப்பவும், எந்தச் செய்கை, என்ன சொல் அவரைக் கோவப்படுத்துமோ என்று ரென்சன் இருக்கும். சூழவுள்ள சிறுவர்கள் தங்கள் அப்பாமாருடன் கொஞ்சிக் குலாவுவதை நான் ஏக்கத்துடன் பார்த்த பொழுதுகள் எண்ணிலடங்காதவை. அவரை என்னால் என்றுமே மன்னிக்க முடிந்ததில்லை. சில வேளைகளில் அம்மா எனக்கு அவரில் உள்ள சில நல்ல இயல்புகளை சொல்லி எப்படியும் உன் அப்பா அல்லவா என வக்காலத்து வாங்க முயற்சிக்கும் பொழுதுகளில் எனக்கு அம்மாவில் கூட எரிச்சல் வரும்.

அப்பா எங்களுடன் இருந்த போது என் பிறந்த நாளை பலருடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடி மகிழ்வது தான் தன் கடமை என நம்பினார். பெரியப்பா, மாமா, மாமி, சொந்தம், பந்தம் எனப் பலரும் வந்து பெரிதாக அன்பைச் சொரிவது போல் கட்டிப் பிடித்து, படங்களுக்கு ‘போஸ்| கொடுத்து பல அன்பளிப்புக்கள் தந்தனர். பின் அப்பாவும் போக உறவுகளும் போய் விட்டன. சில மானம் போனதாக ஒதுங்கிக் கொள்ள, வேறு சில அம்மாவில் பிழை கண்டு விலக்கிக் கொண்டன.

எனக்கென ஒரு உறவும் இருக்கவில்லை. எல்லாம் போலி என்ற உண்மை புரிந்தபோது, அந்த நிதர்சனம் உறைந்த போது என் கண்ணீரும் வற்றிக் கொண்டது. நடந்து முடிந்த வாழ்வின் அவலங்களை நினைத்து கலங்கிக் கலங்கி முடிவில் அத்தனையும் மறந்து யஅநௌயை நோயில் ஒரு பொய் வாழ்வு வாழும் நிலைக்கு அம்மா வந்ததில், ஒடிந்து போன என் உள்ளத்துக்கு, என் வாழ்க்கு, ஒத்தடம் தர வந்த தென்றல் தான் சர்மி.

‘;உடம்புக்கு வருத்தம் வந்தால் டொக்டரிட்டை போற மாதிரி இதையும் நினைத்தால் தயக்கமிருக்காது. மனதில் உள்ள புண்களை ஆற்றினால் தான் வேதனையில்லாமல் வாழலாம். சூழவுள்ளவர்களையும் வாழ விடலாம்.|| என்று கவுன்சிலிங் பற்றி வீட்டுக்கு போகும் போது வானொலியில கேட்டவை என்னையும் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல அப்பாவாக இருக்க என் மனதில் ஆழமாக பதிந்திருக்கும கோவத்தை, வெறுப்பை வெளியில் எடுப்பது அவசியம் என உணர்கிறேன்.

“வாழ்த்துக்கள் ஆனந் , உன் வாழ்க்கையில் இனி எத்தனை மாற்றங்கள் பாரேன்!, எந்தவித முன் அனுபவமும் கேட்காமல் 24/7 வேலை கிடைத்திருக்கிறது, அதற்கு நீ தயாரா?|| என்றான் சிரிப்புடன் தொலைபேசியில் நண்பன் கதிர்.

“சின்ன வயதில் ஏற்படும் மனப் பாதிப்புக்கள் வயதானதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது அல்லது வாழ்விலிருந்து ஒதுங்க வைக்கிறது, பயங்களும் மனப்பாதிப்பும் குறைய ‘கவுன்சிலர்| யாருடனுமாவது கதைத்துப் பாரேன் ஆனந்.|| மிகவும் நிதானமான வாழ்க்கை பற்றி ஆழமான கருத்துக்கள் கொண்ட, அமைதியான சுபாவமுள்ள நண்பன் கதிர், இப்படிப் பலமுறை சொல்லியிருப்பான்.

பாடசாலையில் குடும்ப வரலாறு படிக்கும் போது, பிள்ளைகளின் வளர்ச்சியில் சூழ்நிலைகளின் தாக்கம், பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் பற்றிக் கலந்துரையாடும் போது மனதில் வெறுமையும், விரக்தியும் பலமுறைகள் வெடித்திருக்கின்றன.

நான் பூரணமான மனிதனாக உருவாக எனது அப்பா என்ற பாத்திரத்தைப் பற்றி ஒரு அறிவும் விளக்கமும் தேவையே எனக் குழம்பிய போது, ஓடிப் போன பொம்பிளையுடன் பலாத்காரமில்லாமல் வாழ்கிறாரா என விடுப்பு அறியும் உந்துதல் வந்த போது, எங்களுடன் ஏன் அப்படியான ஒரு வாழ்வு வாழந்தார். அதன் பின்னணி என்ன என்று ஆராய முனைப்பு உருவான போது, இலங்கைக்குப் பயணம் போனவிடத்தில் சாலை விபத்தில் அவர் காலமான செய்திதான் கிடைத்தது.

‘ரீவி|யை திருகிவிட்டு ‘ரீ| போட தண்ணீர் சுட வைக்கிறேன்.
‘பிள்ளை வளர்ப்புக் கலை பிறப்பில் வருவதல்ல, அது ஒரு கற்றறிய வேண்டிய திறன்.|| என்ற முத்தாய்ப்புடன் ரோக் சோ ஆரம்பமானது.

ஒரு நல்ல ஆண்மாதிரி இ;ல்லாமல் வளர்ந்த நான் என் மகனுக்கு ஒரு மாதிரி மனிதனாக அமைய எனக்கு ‘கவுன்சிலிங்| மட்டுமல்ல, பிள்ளை வளர்ப்பு முறை வகுப்புக்களும் கூட மிக முக்கியம் என்பது மிகத்; துல்லியமாகப் புரிகிறது. என் சுவடுகள் என் மகனின் மனதில் காயத்தை ஏற்படுத்தாமல் பார்ப்பது என் தார்மீகக் கடமை. அதைச் சரிவரச் செய்ய அத்தனை உதவிகளையும் பெற்றுக் கொள்வேன் என எனக்கு நானே உறுதி செய்து கொள்கிறேன். அதனால் மனம் சற்று இலேசாக, ‘ரோக் சோ|வைச் செவிமடுத்தபடி, சுரேன் தந்த பெற்றோர்த்துவம் புத்தகத்துடன் சோபாவில் சாய்ந்து கொள்கிறேன்.

sri.vije@gmail.com

Series Navigation

author

ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி

Similar Posts