உதவி

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்


ரிசெப்ஷனிஸ்ட் வசுந்தராவின் காலடிச் சத்தம் சீனியர் ஆபீஸர் சிவப்பிரசாதிற்கு அடையாளம் தெரியும்தான்.
நிமிர்ந்து பார்க்காமலேயே “சிட் டவுன்” என்றான்.
ஆனால் அவள் உட்காரவில்லை. ஆபீஸ் ரூல்ஸ்படி அப்படி உட்காரவும் கூடாது. அந்த விஷயத்தில் அவள் மட்டுமேயில்லை. அவனாலும் எதுவும் செய்ய முடியாது. ஆபீஸ் வேலைகளiல் எவ்வளவுதான் ஆழமாக மூழ்கிப்போயிருந்தாலும் அவள் முன்னிலையில் தம்மிருவருக்கும் நடுவில் உள்ள வித்தியாசத்தை நினைத்துப் பார்க்காமல் அவனால் இருக்கமுடியவில்லை.
தான் இப்படி உசத்தியான இருக்கையில் அமர்ந்திருப்பது, அவள் அப்படி நின்றுகொண்டிருப்து, இது சரியில்லை. வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் மனவலிமையைப் பொறுத்து ஹோதாவை முடிவு செய்வதாக இருந்தால் அவளை எங்கேயோ உயரத்தில் உட்கார வைத்து தன்னைக் கட்டாந்தரையில் உட்கார வைத்திருக்க வேண்டும் என்பது சிவப்பிரசாதின் உத்தேசம்.
வாழ்க்கையில் தனக்கென்ன குறை? ஆண்மகன். பெற்றோர்கள் இல்லாவிட்டால்தான் என்ன? குழந்தைகள் இல்லாத சித்தியும், சித்தப்பாவும் அன்புடன் வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்தார்கள். கல்யாணம் செய்து வைத்தார்கள். சொந்தவீடு. பெரிய கம்பெனியில் நல்ல வேலை. காரும், பங்களாவும். எதற்கும் குறையில்லாத வாழ்க்கை.
தான் அப்ரன்டீஸாக அந்த கம்பெனியில் சேர்ந்த போது வசுந்தராவின் கணவன் சுவாமிநாதன் கெமிஸ்டாக அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஞ்ஜினியரிங்கில் போஸ்ட் கிராட்யுயேஷன் முடித்திருந்ததால் வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே தனக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது. அந்த வருடம்தான் அந்த விபத்து நேர்ந்தது. கியாஸ் லீக் ஆனதில் இரண்டு சகஊழியர்களுடன் சுவாமிநாதனும் இறந்துபோனான்.
அப்பொழுது வசுந்தராவின் பெரிய மகனுக்கு நான்கு வயது, சின்னவனுக்கு இரண்டு, மடியில் மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை. கம்பெனியின் விதிகளiன்படி நஷ்டஈடு தருவார்கள். வழங்கவும் செய்தார்கள். அந்தம்மாள் எட்டாவது வரையில்தான் படித்திருந்தாள். உயிரோடு இருந்த வரையில் சுவாமிநாதன் மனைவிக்கு வெளiஉலகம் தெரியாதவாறு எல்லாம் தானே பார்த்துக் கொண்டதால் வசுந்தராவுக்கு பொது அறிவு ரொம்பக் குறைவு. படிப்பும் அதிகம் இல்லை.
சுபாவத்திலேயே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சிவபிரசாத், எதிராளiயிடம் நறுக்கென்று இரண்டு வார்த்தைகள் பேசி பழக்கமில்லாத சிவப்பிரசாத் சுவாமிநாதனின் குடும்பத்திற்காக களத்தில் இறங்கினான். பெரியவீட்டைச் சேர்ந்த பெண் என்பதால் பியூன் வேலைக்கு வசுந்தரா ஒப்புக்கொள்ள மாட்டாளோ என்று முதலில் தயங்கினான். கிளாஸ் ஃபோராக இருப்பவர்களுக்கு அந்த நாளiல் குவார்டர்ஸ் வசதி கிடையாது. கம்பெனிக்காரர்கள் வெளiயே போகச் சொல்லிவிடுவார்களோ என்னவோ, மும்பை போன்ற மாநகரத்தில் இருக்க இடமில்லாமல் குழந்தைகளுடன் திண்டாடப் போகிறாளே என்று கவலைப்பட்டான். ஆனால் நேர்மைக்கும், திறமைக்கும் மறுபெயராக இருந்த அவனுடைய வேண்டுகோளை கம்பெனி ஏற்றுக் கொண்டது. என்றும் இல்லாத விதமாக நடுநிலைமையை வகித்து, விதியால் வஞ்சிக்கப்பட்ட அந்த தாயும் குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்து விடாமல் அவன் காப்பாற்றினான்.
எந்த மனிதனுக்காக இருந்தாலும் எந்த நிலைமையிலும் இன்னொருத்தரின் உதவி என்பது ஒரு எல்லை வரையிலும்தான். சகமனிதனிடமிருந்து சாசுவதமாக உதவியை எதிர்பார்ப்பது, கண்ணுக்குத் தெரியாத கடவுளiடம் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருப்பது மனிதனின் பலவீனத்தை எடுத்துக் காட்டும். வசுந்தராவிடம் இந்த இரண்டும் பெயருக்குக்கூட தென்படாது. அதனால்தான் சிவப்பிரசாதின் பார்வையில் அவளுக்கு மிக உயர்ந்த இடம்.
கணவன் இறந்துபோன சமயத்தில் புயலில் சிக்குண்ட இளம்கன்று போலிருந்த வசுந்தரா இந்த பதினான்கு வருடங்களiல் அடுத்தவர்களுக்கு நிழல்தரும் மரம் போல் தன் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பது சிவப்பிரசாதிற்கு வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. தான் ஏதோ பெரிய உதவி செய்துவிட்டாற்போல் நினைப்பது முட்டாள்தனம். ஒரு தடவை சொந்த கால்களiல் ஊன்றிக் கொண்டபிறகு, இனி யாரிடமும் அந்தம்மாள் உதவிக்காக யாசிக்கவில்லை. மூன்று குழந்தைகளையும் பெருமைப்படும் விதமாக வளர்த்தாள். பெரிய குழந்தைகள் இருவரும் இண்டர் முதல் வகுப்பில் பாஸ் செய்தார்கள். அவர்கள் இருவரும் இப்பொழுது Aஹுதராபாத்தில் கோச்சிங்fக் சென்டரில் எம்.செட். பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இனி மூன்றாவதாகப் பிறந்த பேபியின் சுட்டித்தனத்தைப் பார்த்து ஈரக்கப்படாதவர்கள் இருக்க முடியாது. அவளுக்கு வராத மொழியில்லை. விளையாடாத விளையாட்டு இல்லை. வசுந்தரா பிரைவேட்டாக பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டைப்ரைட்டிங் Aஹுயர் பாஸ் செய்துவிட்டாள். ஹிந்தியில் விசாரதா முடித்துவிட்டாள். சீனியர் ரிசப்ஷனிஸ்டாக பதவி உயர்வு பெற்று கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். ஒருத்தரை ஒரு வாரத்தை சொல்ல மாட்டாள். அடுத்தர் ஒரு வார்த்தைச் சொன்னால் சகித்துக் கொள்ளவும் மாட்டாள். வேலைரீதியாய் எவ்வளவு டென்ஷன் ஏற்பட்டாலும் முகத்தில் அந்த முறுவலை மட்டும் இழக்கவும் மாட்டாள்.
தான் ஏதோ அவளை இந்த நிலைக்கு உயர்த்திவிட்டோம் என்று சிவப்பிரசாத் ஒருநாளும் நினைத்ததில்லை. ஆனால் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அவளுக்கு உதவி செய்யவேண்டும் என்ற பலவீனம் மட்டும் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
$இன்று இரவுக்கே ரிசர்வேஷன் கிடைத்துவிட்டது சார். நானும் பேபியும் இன்றே கிளம்பிப் போகிறோம். ஐந்து நாட்கள் லீவுக்கு அப்ளை செய்திருக்கிறேன். இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து Aஹுதராபாத்தில் இருக்கப் போகிறேன். மறுபடியும் திங்கட்கிழமை ட்யூட்டிக்கு வந்து விடுவேன். ஃபைல்களை எல்லாம் மேரியிடம் ஒப்படைத்துவிட்டேன். பெண்டிங்கில் உள்ள டைப்பிங் மேட்டரை எல்லாம் அருணாவிடம் கொடுத்துவிட்டேன். இனி நான் போய் வரட்டுமா சார்.$
வசுந்தரா வாய்விட்டு கேட்காமலேயே தான் செய்யக்கூடிய உதவி அவன் மனதில் தோன்றியது.
வசுந்தராவில் இரண்டு மகன்களும் தாய்க்குத் தொலைவாக Aஹுதராபாத்தில் படித்து வருகிறார்கள். எவ்வளவு ஓழுக்கமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களiடமிருந்து மாதா மாதம் பணம் கிடைத்துக் கொண்டிருந்தால் இந்தக் காலத்தின் ஈர்ப்புகளுக்குத் தாங்கிக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும் என்றால் எளiதாக நடக்கக் கூடிய காரியமா என்ன?
தன்னுடைய சித்தியும், சித்தப்பாவும் சமீபத்தில்தான் சொந்த வீட்டுக்கு வந்து விட்டதாக தெரியப்படுத்தியிருந்தார்கள். சித்தப்பா ரிடையராகி பத்தாண்டுகள் கழிந்துவிட்டாலும் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்போலும். இல்லாவிட்டால் தன் வீட்டிலேயே வந்ததும் வராததுமாய் மேத்ஸ் கோச்சிங் செண்டரை தொடங்கியிருப்பாரா? அதுமட்டுமே இல்லை. அவர்கள் வீட்டில் முன் போர்ஷனில் இருந்தவர்கள் காலி செய்துவிட்டதாக சித்தி எழுதியிருந்தாள். வசுந்தராவின் மகன்கள் எப்படியும் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வேறு எங்கேயோ குடியிருப்பதாக அவளே சொல்லியிருக்கிறாள். அவர்களை சித்தியின் முன் போர்ஷனில் குடியிருக்கச்செய்து சித்தப்பாவின் மேற்பார்வையில் அவர்களை தங்க வைத்தால் என்ன? ஆண் குழந்தைகள் வளர்ந்து ஆளாகிவிட்டால் இனி மகளுடைய பொறுப்பு மட்டும்தான் அவளுக்கு பாக்கியிருக்கும்.
ஒருத்தருடைய உதவி இல்லாமலேயே வசுந்தரா தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டுவிட்டாள். இதையெல்லாம் விளக்கமாகச் சொல்லி தன் வீட்டாரின் உதவியைப் பெற்றுக்கொள்ளச் சொன்னால் எப்படியும் அவள் சம்மதிக்கமாட்டாள். எல்லாவற்றையும் விவரமாக எழுதி வசுந்தராவின் கையில் கொடுத்து சிவப்பிரசாத் சொன்ன வார்த்தைகள் இவை.
$என்னை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்கள் Aஹுதராபாத்தில் இருக்கிறார்கள். இதுதான் முகவரி. எங்களுடைய நலனை தெரிவித்துவிட்டு, சித்தப்பாவிடம் இந்தக் கடிதத்தைச் சேர்பித்துவிடுங்கள்.$
சிவப்பிரசாத் கொடுத்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து, Aஹுதராபாத் சென்ற மூன்றாவது நாள் வசுந்தரா அவர்களைச் சந்தித்தாள். அவன் கொடுத்த கடிதத்தை அவர்களiடம் சேர்ப்பித்தாள்.
அந்தக் கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நபர் அவ்வளவு சுறுசுறுப்பாக, பளiச்சென்று இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போய் விட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மகன் கீழே வேலை பார்க்கும் ஊழியராகத் தவிர வேறு விதமாக பார்ப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை போலும். உள்ளே போய் இரண்டு வரிகளை எழுதிவிட்டு கவரில் வைத்து ஒட்டிக் கொடுத்தார் சித்தப்பா.
$இதோ பாரும்மா….அரிசி அரை மூட்டை எங்கள் பையனுக்காக கட்டித் தயாராக வைத்திருக்கிறோம். புதிதாக நாடாக் கட்டில் கூட பேக் செய்து வைத்திருக்கிறோம். நீ ஊருக்குப் போகும் போது இங்கே வந்து எடுத்துக் கொண்டுபோய் பையனிடம் சேர்ப்பித்துவிடு.$ நைச்சியமாக பேசிக் கொண்டே பாரத்தை அவள் மீது சுமத்தினார்கள்.
எங்கே எப்போ நிற்குமோ தெரியாத ரயில்பயணத்தில், அதிலும் இவ்வளவு தொலைவு தனியாக ஒரு பெண் இவ்வளவு பாரத்தைச் சுமப்பது சாத்தியம் இல்லை என்று வசுந்தரா அந்த நிமிடமே முடிவு செய்துவிட்டாள்.
எதையும் எடுத்துக் கொள்ளாமலேயே மும்பாய்க்கு வந்துவிட்டாள்.
$என்னால் எப்படி முடியும் சார்?$ என்று தௌiவாகவே சிவப்பிராதிடம் சொல்லிவிட்டாள்.
அந்தக் கடிதத்தில் சித்தப்பா என்ன எழதியிருந்தார் என்று சிவப்பிரசாத் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.
$எப்பவோ ஆம்படயான் செத்துப் போய், நாற்பது வயது கடந்த பொம்மனாட்டி இப்படித்தான் அன்று மலர்ந்த பூவாக இருப்பாளா? இவளுக்கா நாம் உபகாரம் செய்ய வேண்டும்? அவளுடைய மயக்கத்தில் வீழ்ந்துவிட்டாய்போல் தெரிகிறது. உன் குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்.$
சிவப்பிரசாதால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. வசுந்தரா போன்றவர்களுக்கு தன்னைப் போன்றவன் எந்த உதவியும் செய்யாமல் இருப்பதுதான் எல்லாவற்றையும் விட பெரிய உதவி.

தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ்
தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்

Series Navigation

author

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

Similar Posts