தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
கிரேக்க தேசத்தின் காலநிலை அமைப்பு மிதமாக மனிதருக்குச் சாகதமாக இருப்பதால் அவர் வெளித்துறைக் கலைகளையும், வெளித்தள விடுதலையையும் (External Arts & Outward Liberty) விருத்தி செய்தனர். இந்தியக் காலநிலைச் சூழ்வெளி சூடாக இருந்ததால் ஆரியரின் சிந்தனை உட்புற ஆய்வு (Introspective) விரிந்து மதத்தை விருத்தி செய்தது. கிரேக்கர் அரசியல் விடுதலை (Political Liberty) நாடித் தேடிய போது, இந்தியா ஆன்மீக விடுதலை (Spiritual Liberty) நோக்கிச் சென்றது. ஆயினும் அவை இரண்டுமே ஒற்றைப் பாதை நோக்கிச் செல்பவைதான் ! இந்தியனுக்குத் தேசப் பாதுகாப்புப் பற்றிப் போதுமான கவலை இல்லை ! இந்தியனுக்குத் தேசப்பற்று கிடையாது ! அவன் மதம் ஒன்றுக்காக மட்டும்தான் எதிர்த்துப் போராடுவான் ! ஆனால் கிரேக்கருக்கும், ஐரோப்பியருக்கும் தேசமே முதன்மையானது ! ஆன்மீக விடுதலைக்கு மட்டும் கவனம் செலுத்தி சமூக விடுதலையைப் புறக்கணிப்பது தவறாகும். ஆனால் அதற்கு எதிர்மாறானது (சமூக விடுதலையைப் பேணி ஆன்மீக விடுதலையைக் கைவிடுவது) முன்னதை விடப் பெரும் தவறாகும் ! ஆத்மா, உடல் இரண்டிற்கும் ஒருங்கே விடுதலை தேடுவதே சாலச் சிறந்தது. மதத்தைப் பூரணமாகப் பின்பற்றுவது என்றால் தூயவராகவும், சுயநலம் இல்லாதவராகவும் ஒருவர் இருக்க முயல்வதே ஆகும்.
கர்மயோகி விவேகானந்தா (1863-1902)
உபரி மொழிகள் (Stray Sayings):
. . . . (யூதரின்) ஜெஹோவா கடவுள் உலகைப் படைத்த போது, எல்லாம் இனியதாக இருக்கக் கண்டதாக நமக்குச் சொல்லப்படுகிறது. இப்போது என்ன சொல்லும் அந்தக் கடவுள் ?
. . . . காட்டுமிராண்டிகளைக் கிறித்துவராக மாற்றி விடுவது கிறித்துவரைக் காட்டுமிராண்டிகளாய் மாற்றுவதாகும் !
. . . . தானே எத்தகைய அரசியல் அடிப்படைவாதியாகத் (Extremists) தோன்றுவது என்று தன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்துச் சொல்வதில் எவனுக்கும் மன உறுதி கிடையாது.
. . . . பூரண நலமுடைய உடம்பு பூரணப் பண்பாட்டு உள்ளத்தால் உண்டாவது.
. . . . ஒழுங்கீனச் சிதைவுகள் சமூக முன்னேற்றம் என்னும் முகமூடியை மட்டும் அணிந்து கொள்ளும் போது அவற்றின் தொண்டரைக் கண்டுபிடிக்கும் !
. . . . முன்னேறிச் செல்லும் போது ஆதரவாக எல்லம் அமைந்து விடுவதால் உன்னத மாந்தர் வெற்றி பெறுவார் ! ஒழுங்கீனச் சிதைவின் போது, அடிப்படை வாதிகள் அதே காரணத்தால் வெற்றி பெறுவர். உலகில் சம காலத்தினர் வெற்றி மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது !
. . . . உலகம் சீருடன் உள்ளதாகக் கருதாத சீர்திருத்தவாதி உலகத்தோடு செம்மையாக இல்லாத நபருடன் நெருங்கிப் பழகி வருகிறார் !
. . . . எல்லாரும் மன்னித்து:ள்ள வாலிபர் தாம் எதையும் மன்னிப்பதில்லை ! ஒவ்வொன்றையும் மன்னிக்கும் வயோதிகரை மற்ற எவரும் மன்னிப்பதில்லை !
. . . . ஆங்கிலேயர் கோமான்களாக (Masters) ஒருபோதும் ஆக மாட்டார் என்று பறைசாற்றும் போது அடிமைத்தனத்துக்கு நாம் முடிவு கட்டுகிறோம் !
பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)
****************
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 3 பாகம் : 6
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 3 பாகம் : 6)
(சுருக்கப் பட்டது)
கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)
(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.
வயோதிகர்: உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் ! முடிவில் ஏமாந்தேன் ! வாழ்வுக் கலைக்காக மனிதன் எதுவும் கண்டுபிடிக்க வில்லை ! வருந்துகிறேன் அதற்கு ! மரணக் கலைக்காகக் கண்டுபிடித்திருக்கிறான், மனிதன் இயற்கையை விட ! படைக்கும் புது யந்திரங்கள் எதற்கு ? மனிதரைக் கொல்வதற்கு ! ஆக்கும் ரசாயன வாயுக்கள் வெடிகள் எதற்கு ? மனிதரைக் கொல்வதற்கு ! அங்கிங்கெனாதபடி எங்கும் போர் ! போர் ! போர்தான் ! ஏசு நாதர் போராயுதங்களை ஏர் முனையாக்கு என்று போதித்தார் ! போருக்கு அமைதியே புதுப் பாதை காட்டுகிறது ! போருக்குப் பின் அமைதி உண்மைதான் ! ஆனால் அமைதிக்குப் பிறகு போர் ! இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது ! அமைதி ஏனோ தொடர்வதில்லை ! மேலும் தற்காலப் போர் என்பது அழிவியல் விஞ்ஞானமே ! போர் புகுந்த நாட்டில் பாதுகாப்புக்கும் போரிட்ட நாட்டில் அடுத்த போருக்கும் ஆயுதங்கள் தீட்டப் படுகின்றன ! போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன ! ஆயுதங்களின் அசுரச்சக்தி மென்மேலும் அதிகமாகி வருகிறது ! புதிய ஆயுதங்கள் தயாரான பிறகு யார் மீது போட்டுச் சோதிக்கலாம் என்று பணவீக்க நாடுகளுக்கு அரிப்பு உண்டாகி விடுகிறது !
சாத்தான்: சமாதானக் கலை அமைப்பில் மனிதன் குழம்பிப் போகிறான் ! போராயுதங்கள் கைவசம் இருந்தால் அமைதி நிலவும் என்று கனவு காண்கிறான் ! இப்போது ஆழ்கடல் போர்க் கப்பல்களும் அடிக்கடல் தாக்குச் சாதனங்களும் பெருகிவிட்டன ! மனிதனின் பேராசைக்கு அளவில்லை ! மனிதனின் ஆதிக்க வெறிக்கு எல்லையில்லை ! மனிதனின் இதயம் போர் யந்திர உற்பத்திக் கூடமாக மாறிவிட்டது ! நீ பீற்றிக் கொள்ளும் வாழ்வுச் சக்தி வலுத்த மரணச் சக்திக்கு வழி வகுக்குகிறது ! மனிதன் கைப்பலத்தைக் காட்டித் தன்னைப் போற்றிக் கொள்கிறான் ! போர் அழிவைக் காட்டிப் புத்திமதியும் கூறி வருகிறான் ! மனிதனின் மதக் கொள்கை என்ன ? மற்றவரை அழிப்பது ! அடுத்த மதத்தவரை எள்ளி நகையாடுவது ! எதிர்ப்பது ! அழிக்க முற்படுவது ! பிற மதத்தினரை மதிக்காதவன் தன் மதத்தை மதிக்காதவன் ஆகிறான் !
தாஞ் சுவான்: நீ மதச் சரணாளியா ? அல்லது மதப் பகையாளியா ? சாத்தான் நீ மதச் சார்பாளியைத் தூண்டி விடுபவன் ! மதப் பகையாளி கையில் வாளைக் கொடுப்பவன் நீ ! நரக மாந்தர் கூட உன்னை வெறுக்கிறார் !
சாத்தான்: நான் மதச் சார்பாளியும் அல்லன் ! மதப் பகையாளியும் அல்லன் ! நரக உலகத்தை நான் வெறுப்பவனில்லை ! இத்தாலியன் ஒருவன் நரகத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா ? அது புழுதி பூமி ! பனித்தளம் ! நாற்றமடிப்பது ! தீப்பற்றுவது ! நச்சுப் பாம்புகள் நிரம்பியது ! ஆங்கிலேயன் என்னைப் பற்றி எப்படிச் சொல்லி யிருக்கிறான் தெரியுமா ? சொர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப் பட்டவன் என்று என்னைப் பற்றிக் கத்தோலிக்க மதாதிபதிகள் கடிந்து கூறியிருக்கிறார். நாட்டு இலக்கியத்தைப் பற்றிச் சொல்கிறேன். உன்னத நாடக இலக்கியம் ஒரு துன்பியல் நாடகம். அந்த நாடகத்தில் முக்கிய நபர் யாவரும் இறுதியில் மாண்டு போகிறார் ! மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல் ! என்ன படைத்திருக்கிறதான் ? உள்ளே வைத்திருப்பவை : கழுவேற்றும் முனை ! கம்பத்தில் கட்டி எரிப்பது ! தூக்கு மேடை ! மின்னதிர்ச்சி நாற்காலி ! நச்சு வாயு ! ஆனால் வெளியே காது குளிர முழக்குவது : கடமை ! நீதி நெறி ! தேசப்பற்று ! அத்தனையும் வேடம் !
தாஞ் சுவான்: அவை அத்தனையும் பழங்கதை ! சாத்தான் ! பழங் கூழைக் குடித்தும், பிறருக்கு அளித்தும் பசியாற்ற முடியாது ! புதிய உலகைப் பற்றிப் பேச வா ! பூமியை மையமாக வைத்து பரிதியும் எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன ! ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாய் இப்படிச் சொன்னவர் கத்தோலிக்க மதாதிபதிகள் ! இது பழங்காலப் பாட்டி கதை ! பரிதியை மையமாகக் கொண்டு பூமியும் பிறக் கோள்களும் சுற்றி வருவதாகச் சொல்வது புதுக்கதை ! மெய்க்கதை ! பொய்க்கதைகளைச் சொல்லிச் சொல்லி மெய்க்கதையாய் ஆக்கியவர் மதாதிபதிகள் ! ஒரு பொய்யை அழுத்தமாக ஆயிரம் தடவை சொன்னால் அது மெய்யாக மாறி விடுகிறது ! ஆனால் மெய்யிக்கு வாய் ஊமை ! பொய்யின் வாய் எரிமலை போன்றது ! குப்பென எழுந்து விரைவாகப் பரவும் ! உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் ஒருமுறை உலகைச் சுற்றி விடுகிறது !
சாத்தான்: ஓகோ ! நீவீர் ஓர் உண்மை விளம்பியா ? மெச்சுகிறேன் உன்னை ! உண்மைக்கு ஒரு கால் ! அதுவும் நொண்டி ! பொய்யிக்கு நாலுகால் ! குதிரைபோல் பாய்ந்து செல்வது !
தாஞ் சுவான்: மனிதன் ஒரு கோழை ! துணிந்து எதிர்க்காத எத்தன் ! உள்ளொன்று வைத்து புறமொன்று உரைப்பவன் ! அவன் நாக்கு சொல்வது ஒன்று ! அவன் உடம்பு சொல்வது வேறொன்று ! மனிதனுக்கு நெஞ்சழுத்தம் இல்லை ! நேர்கொண்ட பார்வை இல்லை ! அவனை ஏதேச்சைவாதி என்று சொல் ! கொலையாளி என்று சொல் ! புளுகன் என்று சொல் ! திருடன் என்று திட்டு ! மனிதனின் நடத்தை வெறுப்பை எனக்குத் தருவது ! மனிதன் வீழ்ச்சிக்கு மனிதனே பொறுப்பு ! மனிதன் கோழை ஆனதால் பொறுப்பேற்க மாட்டான் !
வயோதிகர்: மனிதன் கோழை என்பது வெளிப்படை ! நான் இராணுவத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மனிதக் கோழைத்தனம் என்பது கப்பல் பயணிகளின் கடல்நோய் போல் உலகளாவியது ! போரைத் தூண்டுவதற்கும், போரில் பங்கெடுக்க முனைவதற்கும் கனல் நெஞ்சு கொண்டவர் தேவை ! தோற்பவனை விட வெல்பவனே அனுதாபத்துக்கு உரியவன் !
தாஞ் சுவான்: அதனால்தான் யுத்தங்களால் பயனில்லை என்று சொல்கிறேன் ! மனிதர் அச்சத்தை நீக்க முடிவதில்லை ! அச்சம் இல்லாதவனும், ஆதிக்கவாதியும் உள்ள வரைப் போர்கள் நடக்கும் ! போர்கள் தொடரும் ! மனிதர் ஆயிரக் கணக்கில் மடிவார் ! மனிதத்துவம் நசுங்கிப் போன மானிடர் மரணப் போர்களில் மகிழ்ச்சி அடைகிறார் ! அவரது பூர்வீக மிருகத்தனம் மேலோங்கி வெளியே மீண்டும் மீண்டும் வருகிறது !
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 6, 2008)]
- வார்த்தை மே-2008 இதழில்
- முன்னாள் தெய்வம்
- திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து
- காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !
- ‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்
- பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா
- பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்
- பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 28)
- எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்
- மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்
- நிழலா..?நிஜமா..?
- வரைமுறைப் படிமங்கள்
- உ.வே.சா வின் நினைவில்
- தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
- உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.
- கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்
- “அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி
- “தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு
- பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?
- மைன் நதியில்..
- தடுப்பூசி மரணங்கள்!!
- கண்ணாடி மனிதர்கள்
- அறை எண் 786ல் கடவுள்!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- காலத்தைச் செலவு செய்தல்
- சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்
- சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
- கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்
- ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்
- Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4
- கல்வியும் வேலை வாய்ப்பும்
- “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்
- தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !
- பேற்றேனே துன்பம் பெரிது!
- காதலின் உச்சி
- “பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”
- தீபச்செல்வன் கவிதைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10