தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
எத்தகை வேலைப் படைப்பு இந்த மனிதன் !
எத்தனை உன்னதம் ஏனென்று ஆய்வதில் !
முடிவிலா வினைத்திறம் எப்படி நீள்வது !
வடிவிலும், நடையிலும் எத்தகை மகத்துவம் !
சேவை புரிவதில் எத்தகை தேவதை !
அறிவைப் புரிவதில் எத்தகை இறைவன் !
அழகு மயமே இந்த உலகு !
விலங்குகள் ஈன்றன இந்த மேனிலை !
ஆயினும் மாதிரித் தூசிபோல் கருதும்
மனிதன் எனக்கு மகிழ்ச்சி அளித்திலான் !
மாதரும் அளிப்பவ ரில்லை
குறுநகை புரிந்துநீ அவ்விதம் கூறினும் !
வில்லியம் ஷேக்ஸ்பியர் (1564-1616)
ஐந்து மெய்நெறிகளை உன் நடைமுறைக்கு மேற்கொள்ள முடிந்து, அவற்றை உன் வாழ்வுக்கும், பண்பாட்டுக்கும் வழிகாட்டியாகப் பின்பற்றினால், ஒரு நூலகத்தை மனப்பாடம் செய்தவனைக் காட்டிலும் உன்னதமாக உன் கல்வி கருதப்படும். உன் கல்வி, தகவல் மட்டும் (Informatiuon) போதித்தால் நூலகத்தை உலகக் குருவாகவும் நூற் களஞ்சியங்களை (Encyclopaedias) வேத முனிவராகவும் கொண்டாடலாம் ! ஆகவே நமது தனித்துவப் பண்புக்கல்வி என்பது நமது முழுத் தேசத்தைப் பற்றி அறிவதோடு, ஆன்மீகமும் தனிப்பாடும் கொண்டதாக (Whole Education of our Country, Spiritual & Secular) நமது கட்டுப்பாடுக்குள் அமைய வேண்டும். நம்மால் இயன்றவரை தேசம் பூராவும் தேசீய முறைகளில் கற்பிக்கப்பட வேண்டும்.
கர்மயோகி விவேகானந்தா (1863-1902)
. . . . நாகரீகம் (Civilization): நாகரீகம் என்பது கேடு கெட்ட சாதனங்களைக் கொண்டு கட்டுமானச் சமூகங்களால் பழக்கத்துக்குக் கொண்டுவரும் ஒருவகைப் பிணி !
. . . . நவீன நாகரீகம் (Modern Civilization) (1901-1903): நவீன நாகரீகத்தைப் பாராட்டுபவர் பொதுவாக நீராவி எஞ்சினையும், மின்சாரத் தொலைத்தந்தித் தொடர்பையும் (Steam Engin & Electric Telegraph) குறிப்பிடுவார். அவை இரண்டையும் ஆழமாய் அறிந்த நிபுணர்கள் அவற்றை விடச்
சிறந்தவற்றைப் படைக்க முயல்வார்கள்.
. . . . தற்போதுள்ள லண்டனைப் போல் அடுத்தொரு நகரை உண்டாக்கும் ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளியையும், அதைச் சுய ஆதாயத்துக்காக அழிக்க விரும்புபவனையும் கற்பனையாலும் சிந்தித்துப் பார்க்க முடியாது !
. . . . சூதாட்டம் (Gambling): சூதாட்ட ஆழி விளையாட்டு மேஜையில் (Roulette Game Table)
சொத்துக்களைப் பங்கிடுவதே பலரும் விரும்பும் முறைப்பாடு !
. . . . சூதாட்ட ஆழியைச் சுற்றுபவன் தனக்கே வைத்துக் கொள்வதைத் தவிர வேறு யாருக்கும் பணத்தைத் தருவதில்லை ! அப்படி இழப்பு இருந்தாலும் சூதாட்ட விளையாட்டில் இச்சை பொதுவாகப் பலருக்கும் இருந்து வருகிறது ! சூதாட்ட மேஜையில் பலரும் விளையாட அனுமதி அளித்துள்ளவர் இச்சையை அறிய முடியாது !
. . . . (Social Question): தீராச் சமூகப் பிரச்சனைகளில் ஈடுபட்டு உன் காலத்தை வீணாக்காதே ! வறியவரின் தீராப் பிரச்சனை ஏழ்மை ! செல்வந்தரின் தீராப் பிரச்சனை பயனில்லாப் போராட்டம் !
பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)
****************
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 3 பாகம் : 5
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 3 பாகம் : 4)
(சுருக்கப் பட்டது)
கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)
(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.
தாஞ் சுவான்: பெண்ணே ! சொர்க்க புரியில் மாந்தர் பணி புரிந்து சொகுசாக வாழ்வார் என்பது என் யூகம். விளையாடி வேடம் போட்டுக் கொண்டு பொழுதை வீணாக்குபவர் அங்கே இல்லை என்பது என் எண்ணம். உள்ளது உள்ளபடியே இருக்கும் மெய் நிகழ்ச்சிகளை எதிர்கொள்வாய் ! மேல் பூச்சு நடிப்பை அங்கே காண்பது அரிது. வைராக்கியமும், இடரும் உனக்கு வெகுமதியாக வரும் கீர்த்தி. வெறும் மோகத்தை நாடிப் போனது போதும் ! மெய்யான பணிகள் செய்து சொர்க்க புரியில் இன்பம் பெற விழைகிறேன்.
வயோதிகர்: அழகையும், மோகத்தையும் நாடிப் போகும் உனக்கு ஞானம் பிறந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. உனது பாழான உள்ளம் இப்போது உன்னதம் தேடிப் போவது உன் மனவளர்ச்சியைக் காட்டுகிறது. வாழ்வுச் சக்தி (Life Force) மனிதனை உயர்ச்சி நிலைக்குப் போகத் தூண்டுவதை நான் வரவேற்கிறேன். மண்புழுவாக இருந்த மனிதன் தவழ்ந்து இரு காலில் நடக்கப் பழகி இப்போது பறக்கிறான் என்பதை அறியும் போது இறுமாப்படைகிறேன். நமக்குள்ள உன்னத மூளை ஏன் உருவானது என்று தெரியுமா ? வெறும் கை கால்களை மட்டும் அசைக்கவா ? இல்லவே இல்லை ! அரை மூளை உடைய ஓர் எலி கூடத்தான் கால்களில் நகர்கிறது ! என்ன செய்ய வேண்டும் ? எப்படிச் செய்ய வேண்டும் ? ஏன் செய்ய வேண்டும் ? என்ன செய்யக் கூடாது ? எப்படிச் செய்வது நியாயமானது ? இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பதில் தரும் கணிப்புக் கருவி அல்லவா நமது மூளை ? அப்படிச் சிந்திக்கத் தெரியாத மனிதன் காட்டு விலங்குதான் !
சாத்தான்: இது ஏட்டுச் சுரைக்காய் நீதி போல எனக்குத் தொனிக்கிறது ! அப்படிச் சிந்திக்கத் தெரியாதவர் எல்லாம் மிருகம் என்றா சொல்கிறீர் ? சிறிய மூளையுடைய ஒரு தூக்கணங்குருவியால் எப்படிக் கூடு கட்ட முடிகிறது ? வட்ட வட்டமாய் நார்களைப் பின்னி ஓர் அழகியக் கூட்டைக் கட்ட முடிகிறதே !
வயோதிகர்: ஆக்கவினை புரியும் குருவி மூளை மீதுதான் விரிந்து மனித மூளையும் மேம்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் மனிதனின் பழைய மிருகக் குணம் இன்னும் மாறவில்லை !
தாஞ் சுவான்: நான் சொர்க்கத்தில் தேடும் இன்பம் வேறு. ஆனால் மனித வளர்ச்சிக்கும் வாழ்க்கை உயர்வுக்கும் மெய்வருந்தி உழைக்கும் பணிகள் உள்ளன. அது அறியாமையிலும், குருட்டுத்தனத்திலும் எப்படி வீணாய்ச் சிதறிப் போகிறது என்று சிந்தித்துப்பார் ! அதற்கொரு தனித்துவ மூளை தேவை ! தகர்க்க முடியாத அந்த வாழ்வுச் சக்தி தேவை ! அது அறியாமையை எதிர்த்தடிக்கப் புடைத்தெழ வேண்டும் ! “எத்தகைய வேலைப் படைப்பு இந்த மனிதன்” என்று பாராட்டுகிறான் கவிஞன் ! ஆனால் எத்தகைய தவறுகளைச் செய்கிறான் மனிதன் ! எத்தகைய இழிவான மூளை உடையவன் மனிதன் ! கடும் உழைப்பாலும், பிணியாலும், வறுமையாலும் எப்படிக் கடூரமான மூடனாக மாறி விட்டான் மனிதன் !
சாத்தான்: மனிதனின் ஆராய்ச்சி அறிவெல்லாம் என்ன சாதித்துள்ளது ? மனிதனை மீண்டும் கொடூர விலங்காக்கி யுள்ளது ! திடகாத்திரமுள்ள ஓருடல்தான் மனிதனுக்குத் தேவை ! செறிக்காத வயிற்றைக் கொண்ட வேதாந்தச் சிந்தனையாளர் நூறு பேரை விடத் தகுதியுள்ளது !
தாஞ் சுவான்: மூளையற்ற வெறும் தோற்ற அழகு மட்டும் உடைய திடகாத்திர மனிதரைப் பற்றி அறிந்திருக்கிறோம் ! அவரது மூளைகள் முதலில் உண்டாகிப் பிறகு செத்து விட்டன. உலக நெறிகள் மனிதனின் முழுத் தோற்றத்தை விடப் பெரியவை. மூளை குறுகிய டைனசாரஸ் எல்லாம் இப்போது எங்கே கிடக்கின்றன ? புதை பொருள் காட்சிச்சாலையில் ! அவற்றின் பெரிய உடல் எலும்புகள் விலை மதிப்பில் உயர்ந்து போயுள்ளன ! அந்த பூத உயினங்கள் யாவும் பூமியில் வாழத்தான் விரும்பின ! ஆனால் மூளையில்லாது போனதால் வாழ முடியாது தம்மைத் தாமே அழித்துக் கொண்டு விட்டன !
சாத்தான்: பெரிய மூளை இருப்பதாய்ப் பீற்றிக் கொள்ளும் மனிதன் எந்த விதத்தில் தானே தன் இனத்தை அழிக்காமல் வாழ்ந்து வருகிறான் ? சமீபத்தில் பூமியிலே சற்று நடமாடி வந்தீரா ? நான் போய் வந்தேன் ! மனிதர் ஒருவரை ஒருவர் காட்டுமிராண்டி போல் வேட்டையாடி அழித்தவண்ணம் இருக்கிறார் ! நடுத் தெருவில் நிறுத்திப் பலர் வேடிக்கை பார்க்க குற்றவாளியின் தலையை வாளால் துண்டாக்குகிறார் ! கை ஓங்கிய இனம் கால் பிடிக்கும் வர்க்கத்தை அழிக்கிறது ! பணம் பெருத்த நாடு பணியும் நாட்டை நசுக்கப் போராயுதங்களை ஏந்திச் செல்கிறது ! அங்கிங்கெனாதபடி எங்கும் கொலை ! கொலை ! கொலைகள்தான் ! மனித இனமே மனித இனத்தைத் துணிந்து, தொடர்ந்து அழித்து வருகிறது !
தாஞ் சுவான்: ஒற்றைக்கண் நோட்டத்தில் உலகைப் பார்க்கிறீர் ! இரு கண்களையும் திறந்து பாருங்கள் ! நாள் தோறும் பரவும் விஞ்ஞான முன்னேற்றதைப் பற்றி என்ன சொல்வீரோ ?
வயோதிகர்: அதை நான் சொல்கிறேன் ! உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் ! அங்கிங்கெனாதபடி எங்கும் போர் ! போர் ! போர்கள்தான் ! ஏசு நாதர் போராயுதங்களை ஏர் முனையாக்கு என்று போதித்தார் ! அமைதியே போருக்கு விதை ஊன்றுகிறது ! போருக்குப் பின் அமைதி ! அமைதிக்குப் பிறகு போர் ! இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது ! அமைதி ஏனோ தொடர்வதில்லை ! மேலும் தற்காலப் போர் என்பது அழிவியல் விஞ்ஞானம் ! போர் வருதோ இல்லையோ அமைதி நாடுகளில் போராயுதங்கள் கூர்மை ஆக்கப் படுகின்றன ! போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன ! புதிய ஆயுதங்கள் தயாரான பிறகு யார் மீது போட்டுச் சோதிக்கலாம் என்று பணவீக்க நாடுகளுக்கு அரிப்பு உண்டாகி விடுகிறது !
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 30, 2008)]
- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- நூல் வெளியீட்டு விழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- நாசமத்துப் போ !
- பெயரிலி!
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
- FILCA Film festival schedule
- “Aalumai Valarchi” book release function
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- பிறந்த நாள்
- பெயர் முக்கியம்!
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- காதலும் காமமும்
- நாய்கள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- பெயர்வு: புலமும்! புலனும்?
- Last Kilo byt – 13 : ஆடை..
- நம் பையில் சில ஓட்டைகள்
- ஒப்பனை உறவுகள்
- ’புத்தகங்கள்’
- கவிதைகள்
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)