தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
. . . . மனிதன் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்.
. . . . கூர்மையான ஓர் வினாவை கேட்பதுவே ஒருவனுக்குப் பாதி ஞானத்தைக் காட்டுகிறது !
. . . . ஞானி ஒருவன் கிடைப்பதை விட மிகுதியான வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்கிறான்.
. . . . அழகு மட்டுமே முடிவற்ற நெடித்துவத்தின் உணர்வுக் காட்சியாய் (Sensible Image of the Infinite ) உள்ளது !
. . . . இந்த மானிட நாடக அரங்கிலே காண்பதற்கென இடம் ஓதுக்கப்பட்டிருப்பது கடவுளுக்கும் தேவதைகளுக்கும் மட்டுமே என்பதை மனிதர் அறிந்து கொள்ள வேண்டும்.
. . . . நண்பர்கள் உன் நேரத்தைக் களவு செய்பவர் !
. . . . கடவுள் கனமான பளுவை மெலிதான கம்பியில் தொங்க விடுகிறார் !
. . . . கடவுள் படைத்த முதல் சக்தி : ஒளிக்கனல் !
. . . . உயர்ந்த புகழ் என்பது நெருப்பைப் போன்றது ! தூண்டி விட்டால் நீடித்து நிலைப்பது ! அணைத்து விட்டால் மீண்டும் தூண்டுவது சிரமமானது !
பிரான்சிஸ் பேகன் ஆங்கில மேதை (1561-1626)
அழகு, மகிழ்ச்சி, கலை & நிதிவளம்
. . . . மகிழ்ச்சியும், அழகும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டாக்கும் உபரி விளைவு (By-Product)
. . . . மகிழ்ச்சி அல்லது அழகை நேராகக் கைப்பற்றச் செல்லும் போது விளைகிறது மூடத்தனம் !
. . . . மகிழ்ச்சி அல்லது அழகை உற்பத்தி செய்ய முற்படும் போது நிதியும், கலையும் கைகளில் போலியாகக் கிடைக்கின்றன !
. . . . அழகிய நங்கையுடன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியோடு வாழ விரும்புகிறவன் வாய் முழுதும் எப்போதும் நிரப்பிக் கொண்டு ஒயினைச் சுவைக்க விழைபவன் !
. . . . சுகம் மிகுந்த இன்பத்தை நீடிக்க முற்படும் போது பொறுக்க முடியாத வலி உண்டாகிறது !
. . . . பல்வலிக்காரன் நல்ல பற்களைக் கொண்ட ஒவ்வொருவனும் உற்சாகமாக இருப்பதாக நினைக்கிறான் ! ஏழையும் செல்வந்தரைப் பற்றி அவ்விதம் எண்ணி அதே தவறைச் செய்கிறான் !
. . . . தேவைக்கு மேல் பேரளவில் வைத்திருக்கும் ஒருவன் பெரும் கவலைப்படுபவனாக இருக்கிறான் !
. . . . அழகற்ற உற்சாக மில்லாத உலகில் செல்வந்தருக்கு அவலட்சணமும் துயருமேதான் வாங்கக் கிடைக்கின்றன !
. . . . பத்தொன்பதாம் நூற்றாண்டு நுண்கலைகளில் நமக்கு நம்பிக்கை ஊட்டிய காலம் ! அவை நம் கண்ணெதிரே காட்சி அளித்து நமக்கு நிரூபிக்கின்றன !
பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)
****************
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 3 பாகம் : 1
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 3 பாகம் : 1)
(சுருக்கப் பட்டது)
கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு முதிய மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனை உலகம்)
(காட்சி அமைப்பு): வயதான மாதொருத்தி இங்குமங்கும் அலைமோதிய வண்ணம் இருக்கிறாள். அப்போது காதல் மன்னன் தாஞ் சுவான் அவள் முன் வருகிறான்.
முதிய மாது: யார் அங்கே ? நான் தனியாய் இருப்பதாக நினைக்கும் போது யாரோ வருவது தெரிகிறது. (தாஞ் சுவானைப் பார்த்து) யார் நீ ? தனிமையில் தவிக்கிறேன் நான் ! இந்த பூமி பயங்கரமானது ! பாலைவனத்தை விடக் கடுமையானது !
தாஞ் சுவான்: நான்தான் தாஞ் சுவான் ! பெண்களின் தனிமையைப் போக்குபவன் ! இது மனிதர் வாழும் பூமி யில்லை ! அதை விடத் தீய லோகம் ! நரக லோகம் ! நானும் தனிமையில் வாடுகிறேன் உன்னைப் போல் இங்கே !
முதிய மாது: பெண்களின் தனிமையை போக்குபவன் என்று சொல்கிறாயே. உன் தனிமையைப் போக்கப் பல பெண்கள் இருப்பதாகத் தெரிகிறதே ! நான் தேடிச் செல்வது ஒருவனை நோக்கி ! என்னையே வேண்டி என்னையே சுற்றிவரும் ஒருவன் ! பல பெண்களை விரும்பிப் போகும் காதல் மன்னன் எனக்கு வேண்டாம் ! . . . இது நரகமா ? நான் நரகத்திலா இருக்கிறேன் ? நீ நரகத்திலா இப்போது உன் காதலிகளைத் தேடுகிறாய் ?
தாஞ் சுவான்: ஏன் ? நரகத்திலும் நல்ல பெண்டிர் உள்ளார் ! அழகுப் பெண்டிரை இங்குதான் சந்திக்கலாம் ! சொர்க்க புரியில் அழகிய பெண்களைக் காண முடியாது !
முதிய மாது: (மகிழ்ச்சியுடன்) அப்படியானல் நான் ஓர் அழகி என்று சொல்கிறாயா ? எனக்கு அப்படித் தோன்றவில்லை !
தாஞ் சுவான்: அழகு நோக்குபவன் கண்களில் உள்ளது ! உன் அழகு உன் விழிகளுக்கு தெரியாது ! உன் அழகை விவரிக்க உனக்கொரு காதலன் தேவை !
முதிய மாது: நான் ஆலயம் தவறாமல் சென்று அனுதினமும் கடவுளை வழிபடும் மாது. ஏன் நரகத்தில் நான் தள்ளப் பட்டேன் ? நான் பூரணம் அடையாதவள் ! யார்தான் பூரணமானவர் ? நீ பொய் சொல்கிறாய் இதை நரக லோகமென்று !
தாஞ் சுவான்: பூரணமானவர் சொர்க்கத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை ! உன்னத மனிதர் யாரென்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை காண முடியவில்லை ! ஆனால் தனிமையில் தவிப்பவருக்குத் துணைவர் இங்கு கிடைப்பார் ! நீ மதத்தைக் கடைப்பிடிக்கும் மாது என்பது எனக்குத் தெரிகிறது !
முதிய மாது: நான் பாதிரியாரிடம் பாப மன்னிப்புக் கோரிப் பலமுறை மன்றாடி யிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்கு வருந்தித் தனியறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
தாஞ் சுவான்: (வியப்புடன்) எத்தனை தவறுகள் புரிந்துள்ளாய் ?
முதிய மாது: வழிப்போக்கரிடம் என் தவறுகளைச் சொல்ல நான் விரும்பவில்லை. எத்தனை என்று எண்ண முடியாது !
தாஞ் சுவான்: அத்தனை தவறுகளா ? பெண்ணுக்கு அழகு பெருகக் பெருக தவறுகளும் மிகுதியாகும் என்பது என் யூகம் !
முதிய மாது: (மகிழ்ச்சிடன்) அப்போது பேரழகி என்று என்னைச் சொல்கிறாயா நீ ? நான் செய்த நல்ல பணிகள் எல்லாம் பயனற்றுப் போய் விட்டன ! அது பெரும் அநியாயம் !
தாஞ் சுவான்: வாலிபத்தில் நீ பேரழகியாக இருந்திருக்க வேண்டும் ! அதன் நிழல் முகத்தில் தெரிகிறது முது வயதிலே ! நல்ல பணிகள் தலைவாசலைத் தாண்டுவதற்கு முன் தீய செயல்கள் ஊரை நான்கு முறை சுற்றி வந்துவிடும் ! தீய செயல் தூய பணியை விழுங்கி விடும் ! தீய செயல்களுக்குத் தண்டிக்கப்பட்டுதான் நீ நரகத்தில் தள்ளப் பட்டிருக்கிறாய் !
முதிய மாது: நீ ஒரு நல்ல மனிதனா ? நீ ஏன் இங்கு தள்ளப் பட்டிருக்கிறாய் ?
தாஞ் சுவான்: (கவலையுடன்) இல்லை நானொரு கொலையாளி !
முதிய மாது: (அதிர்ச்சியுடன்) அடப் பாவிகளா ? கொலைகாரர் நடமாடும் தளத்திலா என்னைச் சேர்த்து விட்டார் ? நான் அத்தகைய பாபம் செய்ய வில்லை ! நான் நல்ல பெண் ! சிற்சில தவறுகள் செய்தாலும் அவற்றைத் திருத்திக் கொள்ளலாம் !
தாஞ் சுவான்: இந்த நரகா புரியில் தவறுகளைத் திருத்த முடியாது ! பொதுவாகத் தவறு செய்தவர் யாரும் தவறு செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார் !
முதிய மாது: ஆனால் நான் யாரிடம் கேட்பது ? தவறுகளைத் திருத்திக் கொள்ள விருப்பம் உள்ளது எனக்கு !
தாஞ் சுவான்: சாத்தானிடம் கேட்டால் சொல்வான் ! நரகத்தில் அவனை நாம் நம்பலாம் ! நான் அவனிடம்தான் கேட்பேன். நீ பேசுகிறாயா ?
முதிய மாது: (கோபமுடன்) என்ன ? போயும் போயும் கெட்டுப் போன சாத்தானிடமா நான் பேச வேண்டும் ? நான் அவனுடன் பேசப் போவதில்லை !
தாஞ் சுவான்: சாத்தான் நரகத்தின் தளபதி ! நரகத்தில் வாழும் உயர் சமூகத்தின் தலைவன் !
முதிய மாது: நான் மீண்டும் சொல்கிறேன் நான் நரகத்தில் இல்லை !
தாஞ் சுவான்: ஏனப்படிச் சொல்கிறாய் ?
முதிய மாது: எனக்கு வலி உணர்வு தோன்ற வில்லை இங்கே !
தாஞ் சுவான்: அப்படியானால் நான் நினைத்தது தப்பில்லை ! நீ இந்த நரகத்தில் தள்ளப்பட வேண்டியவளே !
முதிய மாது: ஏனப்படிச் சொல்கிறாய் ?
தாஞ் சுவான்: சீமாட்டியே ! இந்த நரக லோகமே தீயவருக்காக அமைக்கப் பட்டது ! தீயவர் இங்கு சுமுகமாக வாழ முடிகிறது. அவருக்காக உண்டாக்கப் பட்டது ! உனக்கு வலி உணர்வில்லை என்று சொல்கிறாய். எவருக்காகப் படைக்கப் பட்டதோ அவர்களில் நீயும் ஒருத்தி என்னும் என் முடிவு உறுதியாகிறது.
முதிய மாது: உனக்கு வலி உணர்வு தெரிகிறதா ?
தாஞ் சுவான்: நான் தீமை புரிபவரில் ஒருவனில்லை ! நன்மை செய்யா விட்டாலும், நான்
தீமை புரிவதில்லை !
முதிய மாது: அதெப்படி உன் வாதம் ? நீ கொலைகாரன் என்று சொன்னாயே !
தாஞ் சுவான்: ஆமாம் அந்தக் கொலை இருவர் வாள் போரில் நேர்ந்தது ! முதிய வயதினன் ஒருவன் வயிற்றில் வாளைப் புகுத்தினேன், அவன் என் நெஞ்சில் வாளை நுழைக்க வந்த போது !
முதிய மாது: நீ நாகரீக நபரானதால் அது கொலை இல்லை அல்லவா ?
தாஞ் சுவான்: வயோதிகர் கொலை என்றுதான் கூக்குரலிட்டார் ! ஏனெனில் அவர் தன் குமரிப் பெண் மானத்தைக் காக்கச் சண்டைக்கு வந்தார் ! நான் மூடத்தனமாய் அவரது பெண்ணைக் காதலித்ததாக அவர் கோபப் பட்டார் ! அந்தப் பெண் அதைக் கேட்டு அலறினாள் ! பொறுக்க மாட்டாமல் கிழவர் வாள் போருக்கு என்னை வாவென்று அழைத்தார் ! முடிவில் உயிரிழந்தார் !
முதிய மாது: அந்தப் பெண்ணை நீ அநாதை ஆக்கினாய் ! தந்தையைக் கொன்ற பாபத்துக்கு நீ காதலித்த அந்தப் பெண்ணை மணந்திருக்கலாம் அல்லவா ?
தாஞ் சுவான்: நான் தயாராக இருந்தேன் ! ஆனால் கொலைகாரனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள அவள் விரும்பவில்லை ! என் மூஞ்சில் விழிக்க மாட்டேன் என்று ஓடிவிட்டாள் !
முதிய மாது: ஆடவர் அத்தனை பேரும் ஒரே களிமண்ணில் ஆக்கப் பட்டவர் ! என் தந்தையும் உன்னைப் போன்ற ஒரு மூர்க்கனால்தான் வாட்போரில் கொல்லப் பட்டார் ! என் மானத்தைக் காப்பாற்ற தந்தை தன்னுயிரைக் கொடுத்தார் ! ஈதோ நான் நரகத்தில் இருக்கிறேன், கொலையாளி உன்னுடன் ! இதுதான் நீதியா ? நியாயம் சொர்க்கத்தில் வழங்கப்படுகிறதா ? அல்லது நரகத்தில் கொடுக்கப்படுகிறதா ? சொர்க்கமும், நரகமும் ஒரே இடத்தில் உள்ளதா ? அல்லது வெவ்வேறு இடங்களில் உள்ளனவா ? துருவங்கள் எதிர்ப்புறங்களில் இருப்பது போல் சொர்க்கமும் நரகமும் எதிர் எதிரே அருகில் இருக்கின்றனவா ?
***************************
(தொடரும்)
*********
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 2, 2008)]
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1