தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
ரயிலை விட்டு இறங்கியதும் ரோகிணியின் வீட்டுக்குப் போக வேண்டும். ரயிலில் ஏறியது முதல் நூறாவது முறையாக நினைத்துக் கொண்டாள் வசந்தி. தான் போகும் போது ரோகிணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிட்டிருப்பாள். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே பழையக் கதைகளை பேச வேண்டும்.
பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் திருச்சிக்குப் போகிறோம் என்ற சந்தோஷம் வசந்தியின் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்தது. எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் யாராவது கூர்ந்து பார்த்தால் திடீரென்று அவள் இதழ்களில் முறுவல் தவழ்வது, கண்கள் பாதி மூடிய நிலையில் இருப்பது, கன்னங்கள் செம்மையேறுவது போன்ற லட்சணங்களைப் பார்த்தால் “இந்தப் பெண் காதல் வயப்பட்டிருப்பட்டிருப்பாளோ?” என்று வியப்படைந்திருக்கக்கூடும். வியப்பு அவள் வயதைப் பார்த்து. வசந்திக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் நாற்பது வயது நிரம்பிருந்தது.
ஆனால் உண்மையிலேயே வசந்தி இப்பொழுது காதல் வயப்பட்டிருந்தாள், திருச்சியுடன், கடந்த காலத்து நினைவுகளுடன், பழைய சிநேகிதிகளின் நினைவுகளுடன்.
எவ்வளவு வருடங்கள் கடந்துவிட்டன!
இருந்தாலும் வசந்திக்கு இன்னும் நன்றாக நினைவில் இருந்தது.
ரயிலை விட்டிறங்கி ரிக்ஷாவில் ஏறிக் கொண்டதும் தான் போகவேண்டிய பாதை கண்ணுக்கு முன்னால் தெரிந்து கொண்டுதான் இருந்தது.
அரசாங்க மருத்துவமனை வழியாக … அந்தச் சத்திரம் இன்னும் இருக்கிறதோ இல்லையோ. பாலத்தைவிட்டு இறங்கியதும் சங்கரவிலாஸ் ஹோட்டலைத் தாண்டி நேராக போக வேண்டும். வீட்டில் ரோகிணி தன் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பாள்.
பாலத்தைக் கடக்கும் முன் ஒரு நிமிஷம் ரிக்ஷாவைத் திருப்பி தாங்கள் படித்த கல்லூரியைப் பார்த்துவிட்டு வரலாமா என்று கூட தோன்றியது. ரோகிணியுடன் சேர்ந்து போகலாம் என்று மனதை மாற்றிக் கொண்டாள்.
திருச்சியை நெருங்கும் போது ஆழமாக மூச்சை எடுத்துக் கொண்டாள். என்ன இருந்தாலும் இந்த மண்ணின் காற்றே வேறுதான்.
ஆனால் வசந்தி எதிர்பார்த்தது போல் ரோகிணி இன்னும் ஆஸ்பத்திரியிருந்து வந்திருக்கவில்லை. வீடு முழுவதும் நிசப்தமாய் இருந்தது. வேலைக்காரி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
குளித்துவிட்டு வசந்தி களைப்புடன் படுக்கையில் சாய்ந்தாள். மூன்று மணி ஆகும் போது ரோகிணி வந்து வசந்தியை எழுப்பினாள்.
“பத்து வருடங்கள் கழித்துதான் சாவகாசம் கிடைத்ததா திருச்சிக்கு வருவதற்கு?” ரோகிணி கிண்டலடித்துக் கொண்டே கேட்டாள். “உன் கடிதத்தைப் பார்த்தப் போது நான் நம்பவே இல்லை. இப்படித்தான் எழுதுவாளே தவிர அவளாவது வீட்டை விட்டு நகருவதாவது என்று ஷியாமிடம் கூட சொன்னேன்” என்றாள்.
“பொறுப்புகள் எல்லாம் முடிந்து விட்டது இல்லையா. அதான் நேரம் கிடைத்தது.” வசந்தி முறுவலுடன் சொன்னாள்.
“அதற்குள் பொறுப்பு முடிந்து விட்டதா என்ன? இரண்டாவது மகளின் கல்யாணம் பாக்கியிருக்கே?” டைனிங் டேபிள் மீது தட்டுக்களையும், டம்ளர்களையும் வைத்துக் கொண்டே சொன்னாள் ரோகிணி.
“அவளுக்குக் கல்யாணமா? நான் பார்த்து பண்ணி வைக்கும் கல்யாணத்தை அவள் பண்ணிக்கொள்ள மாட்டாள். திருமணம் பண்ணிக் கொள்வாளா என்பது கூட சந்தேகம்தான்” என்றாள் வசந்தி தட்டுகளில் சாதம் பரிமாறிக் கொண்டே.
“அவ்வளவு பிடிவாதமா?”
“பிடிவாதம் கிடிவாதம் ஒன்றுமில்லை. சொல்லிச் சொல்லி என் உயிர்தான் போகிறது. அவள் வைசாக்கில் இன்ஜினியரிங் படிப்பதே எனக்கு விருப்பம் இல்லை. தந்தையும் மகளுமாய் சேர்ந்து தங்களுடைய பிடிவாதத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். பெரியவளுக்கு சீக்கிரமாகவே கல்யாணத்தைப் பண்ணிவைத்து விட்டேன் என்று அவருக்கு என் மீது கோபம். நான் என்ன செய்யட்டும் நீயே சொல்லு. பட்டப் படிப்பு முடித்த பிறகு மேற்கொண்டு படிக்கப் போவதில்லை என்று அவள் இரண்டாமாண்டு படிக்கும் போதே தீர்மானமாக சொல்லிவிட்டாள். அதனால் மூன்றாவது ஆண்டு பரீட்சைகள் முடியும் போதே அவளுக்கு வரன் பார்த்து விட்டேன். அவளுக்கும் பையனை பிடித்துவிட்டது. உடனே பண்ணிக்கொண்டு விட்டாள். நான்தான் லாவண்யாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டதாக என் கணவரும், சின்னமகள் சவிதாவும் சேர்ந்து இன்றைக்கும் என்னை வசைபாடிக் கொண்டே இருப்பார்கள்.” வசந்தி தன் கதையெல்லாம் சொன்னாள்.
“நன்றாகத்தான் இருக்கு. மகளுக்கு திருமணம் பண்ணி வைத்தால் அவளைக் குட்டிச் சுவராக்கிவிட்டதாக அர்த்தமா?” ரோகிணி விழுந்து விழுந்து சிரித்தாள்.
“அடடா! உனக்குத் தெரியாவிட்டால் எங்கள் சவிதாவிடம் கேள். சொல்லுவாள். ஒரு தொழிலிலோ, வேலையிலோ காலை ஊன்றிக் கொள்ளாமல் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். பி.ஏ. முடித்ததும் ஏன் கல்யாணம் பண்ணிக் கொண்டாய் என்று என்னுடனே சில சமயம் சண்டைக்கு வருவாள்.”
ரோகிணி சிரிப்பதைப் பார்த்து வசந்தியும் மகள் மீது இருந்த கோபத்தை மறந்து விட்டு தானும் சேர்ந்து சிரித்தாள்.
இருவரும் பரஸ்பரம் குடும்பங்களைப் பற்றிய செய்திகளை பரிமாறிக் கொண்டார்கள். ரோகிணியின் வீட்டையும், வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டத்தையும் பார்த்து வசந்தி பாராட்டு தெரிவித்தாள்.
“என் வீட்டைப் பார்த்து நான் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஆனால் நீ ஒரு பக்கம் டாக்டராக பிராக்டீஸ் செய்துகொண்டு வீட்டையும் இவ்வளவு நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றால் அதற்காக உன்னை தனியாக பாராட்டத்தான் வேண்டும்” என்றாள் வசந்தி.
உண்மையிலேயே ரோகிணி ஒரு நிமிஷம் கூட சும்மாவே இருக்க மாட்டாள். ஆஸ்பத்திரியிலிருந்து வந்தது முதல் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டே இருப்பாள். அலமாரியில் இருக்கும் பொருட்களை அடுக்கி வைப்பாள். சமையலறையை ஒழுங்குப் படுத்துவது, குழந்தைகளின் உடைகளில் தொலைந்துபோன பித்தான்களை தைப்பது, உடைகளை இஸ்திரி போடுவது … இப்படி ஏதோ ஒரு வேலை, வீட்டில் இருப்பவர்கள் மேலும் கொஞ்சம் வசதியாக இருக்கும் விதமான வேலைகளைச் செய்துகொண்டே இருப்பாள். சோம்பேறித்தனம் என்பது அவளுக்குத் தெரியாது. யாராவது சிநேகிதிகள் வந்தாலும் வேலையைச் செய்துகொண்டே பேசிக் கொண்டிருப்பாள். அப்படியும் சில சமயம் அவளால் எரிச்சலை, பொறுமையின்மையைத் தவிர்க்க முடியாது. இரவு நேரத்தில் பிரசவ கேஸ் ஏதாவது வந்துவிட்டால், சரியான தூக்கம் இல்லாமல், காலையில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் அவளால் எழுந்துகொள்ள முடியாமல் போய்விடும். அவர்கள் பிரட்டையும், ஜாமும் சாப்பிட்டு விட்டு, தங்களுக்குத் தெரிந்த வரையில் தலையை வாரிக் கொண்டு பள்ளிக்குக் கிளம்புவார்கள். மதிய நேரத்தில் பக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறவும் ரோகிணியால் முடியாது. உணவு மேஜைமீது எல்லாம் வைத்துவிட்டால் அவர்களே பரிமாறிக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். மாலையில் படிப்பு நேரத்தை ட்யூஷன் மாஸ்டர் கையில் ஒப்படைக்காமல் முடியாது. கணவருக்கு தன்னுடைய கேஸ் விஷயத்தைத் தவிர எதுவும் நினைவு இருக்காது. ஷியாம் ஓரு லாயர். ஞாயிற்றுக் கிழமை அன்று கூட கிளயிண்டுகள் அவரை விட மாட்டார்கள். ஞாயிறு அன்று சீரியஸ் கேஸ் ஏதும் வராமல் இருந்தால் ரோகிணி குழந்தைகளுடன் பொழுது போக்குவாள்.
“வசந்தி! சில சமயம் இந்த பிராக்டீஸை விட்டு விட்டால் என்ன என்று கூடத் தோன்றும். குழந்தைகளைப் பற்றித்தான் என் கவலை முழுவதும். என் மகளுக்கு பத்து வயதாகிறது. என்னை விட நேர்த்தியாக வீட்டை எடுத்து வைப்பாள். அவளுக்குக் குழந்தைத்தனம் என்பதே இல்லாமல் செய்துவிட்டேனோ என்று சில சமயம் தோன்றும். என்னுடைய பத்து வயதில் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்தேனோ யோசித்துப் பார்க்கும் போது வருத்தமாகக் கூட இருக்கும். என்னால் பிராக்டீஸையும் விட முடியாது. இந்த வாழ்க்கைத்தான் எதற்கு? திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவதற்காகத்தானா? அதற்கு டாக்டருக்கு படிப்பானேன் என்று தோன்றும். உனக்கு இந்தக் கவலைகள் எதுவும் இல்லை. நிம்மதியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி செட்டில் செய்துவிட்டாய்.”
“என்ன செட்டில் செய்தேனோ என்னவோ? சின்னவள் சவிதாவை நினைத்து எவ்வளவு கவலைப்படுகிறேனோ உனக்குத் தெரியாது. இன்ஜினியரிங் முடித்த பிறகாவது திருமணம் செய்து கொள்வாளா மாட்டாளா என்ற பயத்தில் சில சமயம் எனக்கு தூக்கம் கூட வராது தெரியுமா?”
“ஏன் பண்ணிக்கொள்ள மாட்டாள்? அது போகட்டும், சாந்தா நம்முடைய கல்லூரிக்கே பிரின்ஸிபாலாக வந்திருக்கிறாள் தெரியுமா?” ரோகிணி பேச்சை மாற்றினாள்.
“சாந்தா இங்கே இருக்கிறாளா? அவளுக்கு எத்தனை குழந்தைகள்?” பரபரப்புடன் கேட்டாள் வசந்தி.
“சாந்தா திருமணமே செய்து கொள்ளாத போது குழந்தைகள் எத்தனை என்று விசாரிக்கிறாயே? பட்டப்படிப்பு முடிந்த பிறகு சாந்தாவைப் பற்றி நீ தெரிந்துகொள்ளவே இல்லை.” குற்றம் சாட்டினாள் ரோகிணி.
“திருமணம் ஆகவில்லையா? அடப் பாவமே! ஏனாம்?”
சாந்தாவைப் பற்றிய நினைவுகள் வசந்தியை சூழ்ந்துகொண்டன. ஒன்றாவது வகுப்பு முதல் பி.ஏ. வரையிலும் சாந்தாவும், வசந்தியும் ஒன்றாகத்தான் படித்தார்கள். பட்டப் படிப்பு முடிந்த பிறகு வசந்தி திருமணமாகி சென்னைக்குப் போனாள். சாந்தா எம்.ஏ. படிப்பதற்காக வெளியூருக்குப் போனாள். அதற்குப் பிறகு அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக் கொண்டாலும் ஒரு காலக்கட்டத்தில் கடிதப் போக்குவரத்து நின்றுபோய் விட்டது. எப்பொழுதாவது மற்ற சிநேகிதிகளின் செய்திகள் காதில் விழுந்துக் கொண்டிருந்தாலும் சாந்தாவைப் பற்றி யாருமே சொன்னதில்லை. ஆனால் சாந்தாவின் நட்பின் நினைவுகள் மட்டும் வசந்தியின் மனதில் அகல்விளக்காய் எரிந்துகொண்டே இருந்தது.
பத்து வயது முதல் பதினைந்து வயது வரையிலும் இருவரும் நடிகை சாவித்திரியின் பைத்தியமாக இருந்தார்கள். சாவித்திரி நடித்த சினிமாக்களை இரண்டு தடவையாவது பார்ப்பார்கள். பத்திரிகைகளில் வரும் சாவித்திரியின் போட்டோக்களை கத்தரித்து வெள்ளை பேப்பரில் ஒட்டி, புத்தகமாக தைத்து வைத்தார்கள். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் ஒரு மாணவி, நடிகை ஜமுனாவுக்காக ஒரு கட்சியைத் தயார் செய்தாள். சாவித்திரியின் கட்சிக்கும், ஜமுனாவின் கட்சிக்கும் இடையே நடக்கும் வாக்வாதத்தில் சாந்தா இயன்ற அளவுக்கு போராடி எப்படியாவது தங்களுடைய கட்சிக்கு வெற்றியை வாங்கித் தந்துவிடுவாள்.
அதற்குப் பிறகு நாவல்கள் படிக்கும் பழக்கும் பிடித்துக் கொண்டுவிட்டது. விடாமல் படிக்கத் தொடங்கினார்கள். ரங்கநாயகம்மாவின் நாவல்களில் வரும் கணவன் போல் தங்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்வார்கள். சுலோசனாராணியின் நாவல் செகரெட்ரியின் ஹீரோ ராஜசேகரனைப் போன்றவன் தங்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறான் என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள். தினமும் ஸ்கூலுக்கு வந்ததும் அரைமணி நேரமாவது ஏதாவது பேசிவிட்டு பிறகுதான் வகுப்புக்குள்ளேயே நுழைவார்கள்.
“வேடிக்கைதான். திருமணமான பிறகு சாந்தாவை மறந்தே போய்விட்டேன்.” எண்ணங்கள் முடிவடைவதற்குள் இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
மறுநாள் காலையில் ரோகிணி ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. இருவரும் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். மாலை நேரத்தில் இனி தவிர்க்க முடியாமல் ரோகிணி ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினாள்.
“நீ ஆஸ்பத்திரியிலிருந்து வரும் வரையில் சும்மா இருப்பானேன்? சாந்தாவைப் பார்த்து விட்டு வருகிறேன்” என்றாள் வசந்தி.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- தும்பைப்பூ மேனியன்
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- மீ ட் சி
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- மெழுகுவர்த்தி
- கவிதை
- வெளிச்சம்
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- கறுப்பு தேசம்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- வராண்டா பையன்