எஸ்ஸார்சி.
ஹாஸ்பெட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதைபோட்டு முளைத்த மரம். அங்கு அவனின் சித்தி குடும்பம் இருந்தது. துங்கபத்ரா அ.ணையில் தண்ணீர் தேக்கும் நிர்வாக ஐன சமுகத்தில் சித்தியின் கணவருக்கு லஸ்கர் உத்தியோகம் . கோடை விடுமுறையில் அ.வனின் தருமங்குடி கிராமத்திற்கு அவர்கள் வரும்போதெல்லாம் வீடு ஏக அ.மர்க்களப்படும். சித்தி வீட்டில் நான்கும் அவனது வீட்டில் ஏழும் ஆக பதினொரு உருப்படிகள் . பெரியவர்கள் அ.ப்படி இப்படி கூட்டினால் நிச்சயம் பதினைந்து தாண்டிவிடும். இந்தப்படிக்கு குடும்பத்தில் ஒருமாத்ததைக் கூட தள்ளிவிடுவது என்பது சர்வசாதாரணம. இப்போதெல்லாம் அதனை விளங்கிக்; கொள்வது; முடியாத காரியம். விடுமுறை முடிந்து அவரவர் பிரிகின்ற போது கண்கள் குளமாகிநிற்கும். ம.னம் நேராகி சீர்பட நாட்கள் சிலபிடிக்கும்.
அவனின் வீட்டுத்தோட்டத்தில் ஒரு தொண்டி இருந்தது. தொண்டி என்பதனை விளக்கி விடுவது நல்லதுதான். வீட்டுத் தோட்டத்து விஸ்தீரணம் வாயில் வரைக்கும் வந்து ஒரு துண்டுபோல தெருவுக்கு காட்சித்தரும். தொண்டியின் இலக்கணம் அது. ஆதனில்தான் அந்த ஹாஸ்பெட் முருங்கைமரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் கீரைகளுக்கு அலாதி ருசி. வருடங்கள் பலாகியும் மரம் காய்ப்பு பிடிக்காமல் காலம் கடத்திக் கொண்டிருந்தது. அதனில் அரை பழசில் விளக்கமாறும் பிய்ந்த செருப்பும் கட்டித் தொங்கவிட்டும் பார்த்தாயிற்று.. மரத்திற்கு மனம் இரங்காமலே காய்ப்பேனா பார். ஏன்று அடம் பிடித்தது.
வெறும் கீரைக்கு மாத்திரமேனும் அந்த ஹாஸ்பெட் மரம் இருந்து போட்டும் என முடிவாகி தெருவில் வசி;பபோர் ஊரில் அங்கும் இங்கும் கீரை என்றுஅலைவோர் அய்யா வீட்டு ஹாஸ்பெட் மரத்துக்கு வந்து கீரை ஒடித்துபோவார்கள் அவனின் அப்பாதான் அய்யா என்பது.
சில சமயங்க.ளில் மரத்தின் பட்டைகளில் முருங்கை க்கோந்து.கலர் கலராக ஓழுகிக்கொண்டு நிற்கும். எப்போதேனும் இலைகளை க் கபளீகரம் செய்ய .கம்பளிப்பூச்சிகள் மரத்தை முற்றுகையிடும்.
.மரம் உற்பத்தியானதிலிருந்து ஒரு பதினைந்து ஆண்டுகள் முடிந்து போயின. காய்ப்பு எபபோதுதான் என்று அவனின் தாயும் தந்தையும் யோகனையிலிருந்தபோதுதான் முருங்கை மரம் பூத்துக் குலுங்கியது;. .அந்தப்படிக்கு மரம் இதுவரை அலட்டிக் .கொண்டதில்லை. ஆக வீட்டில் எல்லோருக்கும் மகிழச்சி. .தருமங்குடிகாரர்கள் முருங்கை மரத்தின் கீரையை விட்டுவிட்டு இப்போது காய்க்கு படை எடுத்தார்கள் .முங்கிலால் ஆன ஒரு நெட்டை சுரடு வைத்து அவன் வீட்டில் காய்களை பறிப்பார்கள். .ஆங்கில சுருக்கெழுத்து. வி உருவத்தில் இருக்கும். அந்த சுரடு மூங்கில் கொம்போடு சண்டை பிடித்து கழட்டிக் கொண்டுவிடும். .அந்தப்படிக்கு அது எங்கோ மரத்தின் உச்சிக்கிளையில் பலமாக தொற்றிக்கொண்டது.
.வளவபுரி தருமங்குடிக்கு அண்டையூர். அங்கு பிரசித்தி பெற்ற வேதநாராயணர் கோயில் இருந்தது. வைகாசி வசந்த உற்சவத்தில் ஏழாவது நாளன்று வேதநாராயணர் வெண்ணைத்தாழியை அணைத்துக்கொண்டு அருள் பாலிப்பார். .அதுமுடிந்தகையோடு மறுநாள் காலை புறப்பட்ட உபயதாரர் சீத்தாராம செட்டியாரின் திருச்செல்வன் தருமங்குடி. அவன் வீட்டைதாண்டிச்,சென்று கொண்டிருந்தான். ஹாஸ்பெட் முருங்கை மரம் திருச்செல்வனை ஈர்த்துவிட காய்கள் சிலது வேண்டுமென்று .அவனின் வீட்டின் வாயிலில் நின்றபடி குரல் கொடுத்தான்.
என்ன திருச்செல்வம் என்ன சேதி. ஏன்றார் அவனின் அப்பா.
நாலுமுருங்கைக்காய் வேணும் சாமி.
பதில் சொன்னார் அப்பா.
.காய்ப்பறிக்க சுரடு இருக்குதுங்களா
இருக்குது. ஆனா வெறுங்கழிதான் இப்ப கிடக்கு. சுரடு மரத்திலேயே தொத்திக்கிட்டு நிக்குது..
காய் வேணும் சாமி.
.அவனின் அம்மா வீட்டின் உள்ளிருந்து எட்டிப்பார்த்தார்.
என்ன
முருங்கைக்காய் நாலு வேணும்..அதான்.
ராமு அவனைத்தான் அழைத்தாள் அம்மா.
.அவன் வந்து என்ன வேண்டுமென்றான்.
செட்டியார் வந்திருக்கார். ஏப்பவும் இப்படி வந்து கேட்டதில்லே.
சொல்லும்மா.
முருங்கைக்காய் நாலு பறிச்சி கொடுத்துடு ராமு.
சரி .அம்மா அப்படியே. .என்றான் அவன்
.திருச்செல்வன் ஹாஸ்பெட் முருங்கை மரத்திற்கு கீழ் நிற்க மரத்தின்மீது அவன் ஏறினான். .காய்களை ப் பறித்துக்கொண்டே போனான். கீழே விழும் காய்களை செட்டியார் அடுக்கி அடுக்கிவைத்துக்கொண்டே இருந்தார். .அவன் சுரடு தொற்றி இருக்கும் உச்சிக் கிளையை நெருங்கினான். .அவனின் அம்மா தெருப்பக்கமாய் .வந்தாள்.
.என்னடா ராமு மரத்துல இவ்வளவு உயரம் ஏறியிருக்கே. .பலமாய் கத்தினாள். .அவ்வளவுதான் . மரக்கிளை முடிந்து தொப்பென்று அவன் கீழே விழுந்தான். .கையில் அகப்பட்ட காய்களோடு மறைந்துவிட்டிருந்தார் .செட்டியார். .அன்றுதான். .அவனுக்கு இடக்கை எலும்பு முறிந்துபோனது.
.அந்த தருமங்குடியிலேயே வளவபுரியின் சுளுக்கு வழிக்கும் தொள்ளார்பிள்ளை கோழி முட்டைகள் இருபதுக்கு குறையாமல் பத்துபோட்டு பத்துப்போட்டு கையை அரைகுறையாய் மீட்டு எடுக்கவே அவனை பள்ளிக்கூடத்திற்கு அப்பா அனுப்பிவைத்தார்.
.கை எலும்பு முறிவு கட்டுக்கு கீரைத் தழை மட்டுமே அவ்வப்போது கூலியாய் பெற்றுக்கொண்ட தொள்ளார் பிள்ளையோடு அநத வைத்தியம் முடிந்துபோனது, தென்னமரக்குடி பச்சை எண்ணெய் வாங்கி கைமேல் தடவுவதும் முடியாமல் போனது அவன் அப்பாவுக்கு அம்மா ஆடிப்போனாள். பின் எப்படியோ மீண்டு கொண்டாள் அவன் கைஒடிந்தது சற்று திருகிக்கொண்டும் தான் இருந்தது. அப்போதைக்கப்போது லேசாய் வலி எடுக்கும். வலி இ;லலாமலும் போகும். .கனம் கூடியவைகளை அவன் தூக்குவதே இல்லை. .அவனின் அம்மாவுக்கு தானே தன்பிள்ளையை .அனுப்பி இப்படி ஆகிவிட்டதே என்கிற மனரணம் இருந்துகொண்டே இருந்தது.
காலங்கள் உருண்டு உருண்டு அவன் ஐம்பதையும் அவனின் தாய் எண்பதையும் தொட்டார்கள். இன்னும் அவனது கை திருகிக்கொண்டுதான் காட்சியளிக்கிறது. .அவனை பார்ப்பவர்கள் சிலர் கையில் கோணல் இருப்பதை அநுமானித்து விடுகிறார்கள்தான்
அவனின் தாய். தூன் முடிந்து போவதற்கு முன்பாக இப்படிக்கேட்டாள். ஏண்டா ராமு அப்போ நான்தானே திருச்செல்வன் செட்டியாருக்கு காய்பபறிக்க .உன்னை மரம் ஏறச்சொன்னேன். நீ ஏன் கோபமாய் ஒருவார்த்தைககூட இதுவரைக்கும் சொல்லாமல் இருக்கிறாய். .உன் கை ஒடிந்துபோனதிலிருந்து என் ஆழ் மனதில் இப்படி ஒரு கேள்வி ஜனித்து துளைத்துக்கொண்டுதானப்பா இருக்கிறது
அவனின் அப்பா அவன் கை ஒடிந்ததன்றே அந்த ஹாஸ்பெட் முருங்கை மரத்தை வேரோடு வெட்ட அது வெந்நீர் அடுப்புக்கு இரையாகியது. தருமங்குடி வீட்டில் அன்றிலிருந்து முருங்கை மரமே இல்லாமல் போனது. ஓருப்பிடி கீரைக்கும் தெருவில் அலைவேண்டி நேரிடுகிறதுதான்.
நீ ஏனம்மா ஆண்டுக்கணக்காய் இதனை நினைவில் சுமந்துகொண்டு என்றான் அவன். .என்னால் தானே உனக்கு இப்படி ஒரு ஊனம் நீ கேட்டுவிடேன். ஏன்றாள் அவனின்தாய்.
.அம்மா நான் உன் பிள்ளை என்று மட்டுமே அவன் பதில் சொன்னான். இந்த கோணல் கைதானே தாயை நினைவுப்படுத்துகிறது என்று அதனை அன்போடு வருடிப்பார்த்தான். .அம்மாதான் எப்போதோ மண்ணாகிப்போனாளே.
**
essarci@yஹாoo.com
- காதலுக்கு மூட்டுவலி
- கபடி கபடி
- அமிழ்து
- புகழ்
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- உங்கள் மூதாதையர் யார் ?
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- இசட் பிளஸ்
- அம்மா
- ரோஜாப் பெண்
- குளங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- சிறைவாசம்
- திருவண்டம் – 3
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- ஒரு கடிதம்