கோமதி கிருஷ்ணன்
அந்த பெண் குழந்தை,2 ,2 1/2 ,வயதிருக்கும் அழகென்றால்கொள்ளை அழகு.குங்குமப்பூவும்,ரோஜப்பூவும் கலந்த நிறம்.கண்ணும்,மூக்கும் , நிறமும்கதுப்பு கன்னங்களும்,காச்மீரிகளுக்கே உரித்தான, விவரிக்கத்தெரியாத,ஒருதேஜஸும் .பகவானே;;இந்த குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ? அது விதும்பி ,விதும்பி ,ஏங்கி ஏங்கி அழுவதைப்பார்த்து ,கமலின் நெஞ்சுஞ்சு உருகினாலும் ,கண்ணீர் விட முடியாத நிலைமை.
காரணம் ,அந்த குழந்தைகளின் காப்பகத்தில் வித்தியாசம் பாராட்டமுடியாது .தெரிந்தவா , தெரியாதவா பாகுபாடு கூடாது .தீவிரவாதிகளின் ஈவிரக்கமற்ற , கொலை வெறியால் , தாய் ,தந்தை உற்றம் உறவுகளை இழந்து , பாக்யத்தாலோ , துர்பாக்யத்தாலோ ,தப்பிப்பிழைத்த பிஞ்சுகளை- மாதங்களே ஆன குழந்தைகளிலிருந்து 7-8 வயதுவரைக்குமுள்ள ,குழந்தைகளுக்கு- அடைக்கலம் கொடுக்க ,இந்திய அரசாலும்,செஞ்சிலுவை , சங்கத்தாலும் ,ஏற்ப்படுத்தப்பட்ட காப்பகம் . அது தாற்க்காலிகமானதுதான் . கொஞ்ச நாளில்,குழந்த்தைகளை ,10-15 ,என்று பிரித்து ,பல இடங்களுக்குமாக அனுப்பிவிடுவார்களாம்.
ஒரு நடு வயது பெண்மணி , அந்த குழந்தையிடம் ஒரு ரொட்டித்துண்டையும் , ஒரு டம்பளர் பாலையும் கொடுத்து சாப்பிடச்சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தாள். கொஞ்சம் ,முரட்டுத்தனமான முகத்துடன் இருந்தவளை , பார்த்தே , மிரண்ட குழந்தை ,பாட்டிலில் பால் வேண்டுமென்று -பக்கத்தில் பாட்டிலில் பால் குடித்துக்கொண்டிருந்த ,ஒரு சின்னப்பாப்பாவை சுட்டிக்காட்டி- அழுதுகொண்டிருந்தது .அந்த பெண்மணிக்கு எவ்வளவோ வேலை .எத்தனையோ ,குழந்தைகளை-பலதரப்பட்ட ,பலவயதுப்பட்ட-கவனிக்கவேண்டிய பொறுப்பு .பாவம்;;அவளைச்சொல்லி ப்பிரயோஜனமில்லை .அழும்குழந்தைகள், அடம்பிடிக்கும் குழந்தைகள் ,உடம்பு சுகமில்லாத குழந்தைகள் ,அசிங்கம்பண்ணிவிட்டு,சுத்தம்பண்ணகாத்திருக்கும் குழந்தைகள் இப்படி பல.மொத்தமே15-ஆயாக்கள் தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். கமலும் , அதில் ஒருவள்தான். பாதி பெண்மணிகளும்,சம்பள்ளமில்லாமல் , சேவைமனப்பான்மையில் த்தான் வேலை பார்க்கிறார்கள் . கொஞ்சம் பொறுமையும் குறைவுதான்.
தன், பேரைக்கூட,சரியாக , சொல்லத்தெரியாத,அந்த சின்னக்குழந்தையிடம் வந்த கமல் , ‘அழாதே, பாப்பா; நீ,பெரியவள் ஆயாச்சே;;பாட்டிலில் பால் குடிக்கலாமா ?ரொட்டியை நான் விண்டு தரவா ?சமத்தா ,டம்ப்லரை எடுத்து பால் குடி பார்க்கலாம். நீ,ரொம்ப சமத்துப்பாப்பா இல்லையா ‘ என்று கொஞ்சி , அணைத்து , பாலை குடிக்க வைத்தாள் .அந்தகுழந்தை ,கமலின் கழுத்தை கட்டிக்கொண்டு ,விம்மினாலும் கொஞ்சம் சமாதானமானாள்.
அந்த குழந்தை ‘சரஞ்சீத் ‘த்தின் அம்மாவை ,கமலுக்கு நன்றாகவே தெரியும் .டில்லியில் , கமலுடன் ஸ்கூலில் படித்தவள் . பஞ்சாபில்,விவசாயியாயிருந்த,படித்த ‘ப்ரமீத் ‘த்தை காதலித்து, கல்யாணம் பண்ணிக்கொண்டாள் .டில்லி போலுள்ள , நகரத்தில் வளர்ந்தவளை ,கிராமத்தில் கொடுக்க ஸோனியாவின், பெற்றவர்கள்,இஷட்டப்படாதபோதும் , பெண்ணின் இஷ்ட்டப்படி,கல்யாணம் பண்ணி வைத்தாலும் ஸோனியா ,ப்ரமீத்துடனும் ,மாமியார்,மாமனார் , நாத்தனார்,மச்சினர்,தாத்தா ,பாட்டிஎன்று பெரியகூட்டுக்குடும்பத்தில் , கோதுமை , நெல் வயல்கள் , எருமைமாடுகள்,கன்றுகள் ,செம்மறிஆடுகள் என்று,எல்லோருடனும் ,எல்லாத்துடனும் ஒன்றி ,ஆனந்தமாகத்தான் வாழ்ந்துவந்தாள் .
கமலும் அனாதை தான். ஒரு தமிழ்தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் .தத்துத்தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர் . பங்களாதேஷ்,இந்தியா யுத்தத்தில் உயிரிழந்தார். சர்க்காரிலிருந்து எல்லாவித உதவிகளும் கிடைத்தும் ,படிப்பறிவில்லாத தாயை,உறவுக்காரர்கள் ஏமாற்றியதால் ,வறுமையால் வாடி,அம்மா , நோய்வாய்ப்பட்டு இறந்தாள்.உருப்படியாய் கிடைத்தது , கமலுக்கு ஸ்கூல்படிப்பு மட்டும்தான் . கடைசிக்காலத்தில் அம்மா , நோயால் அனுபவித்த துக்கத்தை நேரில் பார்த்த கமல் , ‘ நர்சிங்க் ‘ ப்ப்ப்படித்து , ராணுவத்திலேயே , பணியில் சேர்ந்தாள் .அம்மா,அடிக்கடி சொல்லுவாள். ‘கமல்;என் கண்ணே;; நீ , நன்றாய் இருப்பாய்.உன்னைப்போல் இரக்கமும் , சேவை மன்ப்பான்மையும் உள்ளவர்களை , பாருக்கறது ரொம்ப அபூர்வம். ஒரு அம்மா இப்படி சொல்கிறாளே , பெற்ற தாயாயிருந்தால் இப்படி சொல்லுவாளா ?என்று எண்ணாதே . நீ,கல்யாணமே பண்ணிக்காதே . நம் இந்தியாவில் குழந்தைகளுக்கும் , அனாதைகளுக்கும் பஞ்சமே இல்லை .மேலும் குழந்தைகளை பெற்று ,ஜனப்பெருக்கத்துக்கு, நீ,- சின்ன அளவில்க்கூட-காரணமாக வேண்டாம். கஷ்ட்டப்படும் ,ஜனங்களுக்கு , உன்னால் முடிந்த அளவு உதவி செய்.அதில் உனக்கு கிடைக்கும் மன நிம்மதி வேறெதிலும் கிடைக்காது . ‘என்று கமல் அதை வேதவாக்காய் எடுத்துக்கொண்டு ,பணி புரிந்து வருகிறாள் .
புக்ககம் போனபிறகும் , ஸோனியாவை ,கமல் அடிக்கடி பார்த்திருக்கிறாள். ஸோனியா வீட்டிர்க்கும் ,சென்றிருக்கிறாள் . குழந்தை சரஞ்சீத்தை ,அவளுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ,இந்த காப்பகத்தில் , அதை வெளிக்காட்டிக்க முடியாது .
எல்லோரையும் , சுட்டு ,வெட்டி ,கொன்ற தீவிரவாதிகள் கண்ணில் ‘ப்ஹாம்ஹெளஸ் ‘ ஸில் தூங்கி க்கொண்டிருந்த ‘ சரஞ்சீத் ‘ படாத போனதும் , அந்தகுடும்பத்திலேயே ,அந்த பிஞ்சு மட்டும் தப்பி ப்பிழைத்ததும் ஏன் ? யாரோ கொண்டு விட்டுப்போன அந்தக்குழந்தை , மற்ற அனாதைக்குழந்தைகளுடன், _ குஜராத்பூகம்பம், பீஹார்வெள்ளம் , காஷ்மீர்தீவிரவாதம் , பஞ்சாப்கலவரம்_எல்லா, இடங்களிலிருந்தும் , கொண்டு வரப்பட்ட , குழந்தைகள் , குழந்தைகள் , குழந்தைகள் தான் .
அதுகளைத்தேடி ,உறவினர்கள் , தெரிந்தவர்கள் என்று வந்தவர்கள், ரொம்பவும் , குறைவு தான்.கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகளுக்கும் ,உறவினர்கள்முகவரியோ , மற்ற விவரங்களோ சரியாக ச்சொல்ல த்தெரியவில்லை . பட்டுக்கொண்டு ,பொறுப்பேற்று , மாட்டிக்கொள்ள ,இஷ்ட்டப்படா தவர்களும் இருக்கலாம். அபூர்வமாக ,சில குழந்தைகள், வெளி நாட்டாரால் , முறையாக , தத்தெடுக்க ப்பட்டு ,போனார்கள். அந்தகுழந்தைகளின் இப்போதைய நிலைமை யாருக்குமே தெரியாது . ஆயிரம் சட்ட திட்டங்கள் இருந்தாலும் ‘தத்து ‘ என்று கொடுத்த பிறகு , யாரும் , அதைப்பற்றி கவலைப்படவில்லை என்பது தான் உண்மை .
‘ அடோப்ஷனு ‘ க்கென்று , குழந்தைகளை ,பார்க்க வருபவர்கள் ,எல்லோருமே , அழகாகவும் , நல்ல நிறமாகவும் , ஆரோக்கியமாகவும்,உள்ள குழந்தைகளைத்தான் , பார்த்து ,ப்பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள் .கறுப்பு , ஒல்லி ,ஊனம் யாருக்குமேவேண்டாம். புதையுண்ட இடங்களிலிருந்தும் இடிபாடுகள்க்கிடையிலிருந்தும் ,காப்பாற்றப்பட்ட அனாதைகள் ,கலவரத்திலும் , அதிர்ச்சியிலும் , மூளை குழம்பின குழந்தைகள்,கைகால் ஊனமான, தலையிலும் ,உடம்பிலும் பலவித ,வெட்டுக்காயங்கள் பட்டு சற்றுவிகாரமான, தீக்காயம்பட்ட, இப்படி பலவித ,மன, உடல் ஊனம்பட்ட குழந்தைகள். ‘ஐய்யோ;;கடவுளே;;இந்த குழந்தைகளை ஏன் உயிரோடு , விட்டு வைத்திருக்கிறாய் ?தாய் தந்தையருடன் , இவர்கள் உயிரையும் எடுத்திருக்கக்கூடாதா ?இரக்கமற்ற ,இந்த உலகத்தில் , இந்த பிஞ்சு களை காப்பாற்றின கடவுளை ‘கருணைப்பிரபு ‘ என்று சொல்ல முடியவில்லையே ‘ கமல் தான் ,இப்படி மனதிர்க்குள் , புலம்புகிறாள் .
தாய், தந்தையர்களை இழந்து ,அனாதையாய் நின்ற ,தன்னை, பக்கத்து வீட்டிலிருந்த நல்லவர்களான, அவள் வளர்ப்பு பெற்றோர், எடுத்து வளர்த்து , ஆளாக்கியிரா விட்டால் , ஒரு கால் சற்று ஊனமாயிருந்த , அவள் கதி , என்னவாகியிருக்கும் ?
குழந்தை ‘ சரஞ்சீத்தை ‘ , தான் , எடுத்து வளர்க்கலாம் , என்று அபிப்பிராயம், அவள் மனதில் தோன்றியது உண்மைதான் . ஆனால் அழகும் , ஆரோக்கியமும், தாமரைப்பூவின் நிறமும் கொண்ட , அவளை , யாராவது விரும்பி ‘தத் ‘ எடுத்துக்கொண்டு போய் , வளர்ப்பார்கள் . ஊனமுற்ற , அழகில்லாத ,குழந்தைகளை த்தான், யாரும் விரும்ப மாட்டார்கள். ராணுவத்தில் , நர்ஸாகவும், நல்ல பணவரும்படியுமுள்ள எல்லோராலும், நல்லவள் , என்று ,போற்றப்படுபவளுமான ,கமலுக்கு, சிரமமில்லாமல்,குழந்தையை ,இங்கிருந்து , எடுத்து வளர்க்க, அனுமதி கிடைக்கும் . ‘பகவானே;;எனக்கு மன உறுதியும் நல்ல மனஸும்கொடு. உன் , லீலைகளை புரிந்து கொள்ளும் அறிவு என்க்கில்லை . ஒரு குழந்தைக்காவது, நல்வாழ்வும், படிப்பும், அன்பும், கொடுக்க ,எனக்கு அருள்புரி .அதர்க்குள்ள ஆரோக்கியமும், ஆயுளும், பொறுமையும் எனக்குக்கொடு . வளர்த்து ,குறைந்த பக்ஷம், இந்த சமூகத்தில் ,கொஞ்சம்,மனிதர்களுக்காவது ,ஏதாவது விதத்தில் ,சேவைபுரியும் படியாக ,உள்ள நிலையில் , ஒரு மனித ஜீவனை , வளர்த்து ஆளாக்க , சக்த்தியையும் அதிர்ஷ்ட்டத்தையும் , எனக்கு க்கொடு . முயன்றால் ,எந்த வித ஊனத்தையும், சரிபண்ணி , மனிதாபிமானியாக ஒரு குழந்தையை ,அளாக்க முடியுமே;;அதர்க்குள்ள , சக்த்தியைக்கொடுத்து, என்னை ஆசீர்வதியுங்கள் ஈசா ‘
கமல் ,திடமான ,மனத்துடன், மேற்க்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களுக்காக , குழந்தை காப்பகத்தின், ஆபீஸை நோக்கி , நடந்தாள் .
———-
viswanathan@rogers.com
- அன்புள்ள அப்பாவுக்கு
- நினைவலைகள்
- சாதனங்கள்
- சாமியும் பூதமும்
- 2 ஹைக்கூக்கள்
- போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi
- அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்
- அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று
- அறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்
- கோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்
- இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)
- தமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6
- நீராகிப் போன கடிதங்கள்
- நிகழ் காலம்
- பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்
- யாதுமாகி …
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- மனிதாபிமானம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு
- பறவைப்பாதம் – அத்தியாயம் 1
- களவு
- தொடர்ந்து அறுக்கப்படும் வேர்கள்
- சில நிகழ்வுகள், சில பார்வைகள்
- கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்
- கடிதங்கள்
- வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி
- ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]
- ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3
- அரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை
- உன் போலத்தானோ ?
- நான் பதித்த மலர் கன்றுகள்
- உன் முயற்சி தொடரட்டும்