வேத வனம்- விருட்சம் 93

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

எஸ்ஸார்சி


பெண்ணே சென்று வா
விரைவாய் த்திரும்பு
நீர்க்கோர்ப்பு நின்னுள் காத்துக்கிடக்கிறது
வேள்விக்கு உ¡¢யதைப்பற்று
பிற தூரம் போகட்டும்
பெண்கள் சுந்தா¢களாய் வந்திருக்கிறார்கள்
ஆடவர்களில் திடமுள்ளோனைச்சேர்க
பதி பத்தினி யாகுங்கள் நீவிர்
நெறி பொருள் மக்கள் வீரம் உமக்கேயாகுக
ருத்திரனே எல்லாமானவனே
இரு கால் நான்குகால் பிராணிகள்
சுகம் பெறுக இங்கு
பசு குதிரை மனிதர் ஆடு இருவகை
இவ்வைந்தும் நினது
வானும் பூமியும் நினது
மூச்சு விடுபவை யாவும் நினதே
நா¢ நாய் குழல்வி¡¢த்துக்கதறும் பெண்டிர்
தூரம் போகட்டும்
அடிபட்ட மிருகத்தின் பின்னே ஓடும் வேடன் போல்
உன்னை எதிர்ப்போனை
வீழ்த்துவோன் நீ
அன்னம் கருடன் எனப்பல பறவைகள்
படையலாகின்றன உனக்கு
எம்மில் சிறியோனை பொ¢யோனை
பாலகனை சுமைதாங்குவோனை
அன்னையை தந்தையை க்காத்திடுக
புவி நிவேதனக்கலசம்
வானம் கலச மூடி
உழவுச்சால்கள் விலா எலும்புகள்
மணல் குடலொடு ஒத்தது
ருதம் கைகழுவு நீர்
நதிகள் கலசப்பொழிவு
¡¢க்கினால் கலசம் வைத்து
யஜுரால் நிலைப்படுத்தி
சாமன் கொண்டுசென்றிடப்
பிரம்மம் அதனை உள்வாங்கியது
பஞ்ச முகம் உடையது புவிக்கலசம்
அதன் மகிமையால் நானூற்று எண்பது முனிவர்
சித்தம் ஆகிப்போயினர்
நிவேதனத்தை நீ புசித்தாயா
நிவேதனம் நின்னைப்புசித்ததா
யானும் புசிக்கவில்லை அதனை
அதுவும் புசிக்கவில்லை என்னை
நிவேதனம் நிவேதனத்தைப்புசித்தது அறிவோம்
உயிரே வந்தனம் உனக்கு
அன்பு மகனை த்தந்தைபோல்
மனித உடலை உயிர் அலங்கா¢க்கிறது
மழை வழி உயிர் பொழிந்து செடிகொடிகள் சனிக்கின்றன
குரு ஒரு மாணவனுக்குத்தாய்
பூநூலணிந்த மானாக்கன் தன் குருவின் உதரத்துக்கு உறவு
மூன்று இரவுகள் வயிற்றுப் பந்தம் மாணாக்கனுக்கு
அவன் பிறப்பைக்காண த்தேவர் எல்லாரும் கூடுவர்
குருவே உருவாக்க மாணவன் பாலிக்கிறான்
ஒழுக்கமுடை மாணாக்கனாலேயே புவி மிசை வளம் சேர்கிறது
திசைகள் உயிர்பெறுகின்ரன
பிரம்மச்சா¢யமும் தவமும் மரணத்தை வெல்லவல்லன
பிரம்மச்சா¡¢ பிரம்மனை தனக்குள் கொண்டுவருகிறான்
பிராண அபான வியான வளியொடு
வாக்கு மனம் இதயம் பிரம்மம் மேதமை பிறக்கின்றன
கண்ணும் காதும் வெற்றி கொணரட்டும்
உணவும் வலிவும் உதிரஒட்டத்தில் சேரட்டும்
அக்கினி வருணன் தாத்ரு கதிரோன் நிலவு வளி வானம்
அனைத்தையும் அழைக்கிறோம்
தேவர்கள் எல்லோரும் வருக இவண்
சத்தியம் கைக்கொண்டு சத்தியம் வலர்க்கிறோம்
சத்தியமே சத்தியத்தை செழிப்பிக்கும்
வேள்வியின் எச்ச புனிதத்தில்
பேரும் உருவும் உண்டு உலகு நிலைபெறும் அதனால்.
ருக்கு யஜுர் சாமன் இந்திரன் அக்கினி
தவம் தட்சிணை அமுது இனிமை நலம் வளம் உணவு வலிவு
காமம் அறம் செயல் மேகம் மின்னல் இடி
சுவாசிப்பவை கண்ணால் காண்பவை அனைத்தும் அடக்கமாய்
வேள்வியின் எச்சத்தில் சீவிக்கின்றன
எல்லாமாக்கும் பொ¢யோன்
தலை கைகள் முகம் நா கழுத்து முதுகு இவை தோலால் மூடி
தேகம் கொணர் ந்தான்
பெண் அடக்கத்தின் மனைவி தலைவி
உடலுக்கு வண்ணம் தந்தாள்
நித்திரை களைப்பு மூப்பு வழுக்கை வெறுப்பு திருட்டு தீமை சத்தியம் கீர்த்தி
வளர்ச்சி வீழ்ச்சி பெருந்தன்மை பசி தாகம்
வித்தை அவித்தை சி¡¢ப்பு களிப்பு
ருக்கு யஜுர் சாமம்
பசி தாகம் பிசுனிக்குணம்
ஆசி ஆணை கேள்வி விளக்கம் இவையொடு
எல்லா நீரும் எல்லா தேவதைகளும் விராடனும் பிரமும் எனத்
தேகத்தில் நுழைந்தார்கள்
முதல் மரணம் சம்பவிக்கும் சமயம் உயிர் பி¡¢ந்து
ஒரு பகுதி சூ¡¢யனுக்கும் மற்றொன்று காற்றுக்கும்
எஞ்சியது புவியிலும் வாழ்கிறது
அற்புதி என்னும் அரக்கனே
உதவும் குணத்தோனே எதி¡¢யை அலறச்செய்
மாயைகளைப்புலனாக்கு எமக்கு. ( அதர்வ வேதம் காண்டம் 11)
————————————————————

மழை வழி உயிர் பொழிந்து செடிகொடிகள் சனிக்கின

Series Navigation