ராத்திரிக்கு?…

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

பாரதிதேவராஜ்.நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது.
சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது.

“என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு மண்ணெண்ணை டின்களை எடுத்துக் கொண்டு ஓடியபடியே
“ஆமாமுங்கோய் எண்ணதா ஊத்தறானா. இநத ஊத்தாத மழையிலே இவனுக்கென்ன கொள்ளையோ?” பதில் சொன்னாள் செல்லா
நல்லவேளை குட்டைமேட்டில் நின்ற ரேசன் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது.
“தேய், சட்டுன்னு டின்னுகளை லைன்லே வை. தோ நா பில்லு போட்டு வந்தர்றேன்.”
செல்லா மகளை லைனில் நிறுத்திவிட்டு பின்புறமாய் போய், அரிசியளக்கும் ரங்கப்பனிடம்,

“ரங்கண்ணோய்” என்று கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு கார;டுகளையும் பணத்தையும் நீட்டினாள்.

2
ரங்கப்பன் அவளை ஒரு பரிதாபத்தோடு பார;த்தான். கிள்ளி விடக் கூட சதையில்லாத மெல்லிய வரண்டதோலும் எலும்புமாய்,கண்களை மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு நின்றவளின் தலைக்கு எண்ணையே அவசியமில்லை. என்பதுபோல் பஞ்சுவௌ;ளையாய் நரைத்திருந்தது.
பார்க்க பாவமாய் இருந்தாலும் ரங்கப்பன் தன் பிகுவை விடாமல்,
“உனக்கு வேற வேலையே இல்லே? ஏதோ தலைவர்ஊட்லே குடியிருக்கறயேன்னு பாத்தா இதே பொழப்பா அலையறயே”
“போகட்டும்ராஜா. ஊட்லே சோறக்கி ரெண்டுநாளாச்சு ஏதோ இதையக் கொண்டுபோய் கொடுத்தா கெடைக்கற அஞசு ரூபாயில அரை வயிராவது சாப்பிடலாம் எனக்கில்லேனாலும் புள்ளைக மயங்கறதுக் கொசற மாச்சும் கொஞ்ம்…”
ரங்கப்பனால் அதுக்கு மேலும் ஒன்றும் பேசமுடியவில்லை.
“செரி செரி இப்பவே ஒண்ணும் முடியாது. அரைமணி நேரம் கழிச்சு வா பாக்கலாம்போ.”
செல்லாளுக்கு உயிர் கைக்குள் வந்த மாதிரி “மகராசந் தலை நாள்லேஆம்பிளப்புள்ளயாவே பெத்துக்க சாமி” என்று வார;த்தைகளை சிந்தி விட்டுமகள்நின்றவரிசைகச்கு வந்தபோது கூட்டம்இன்னும் சேர்ந்திருந்தது சட் டென கவனம் வந்தது போல
“சின்னி இஞசினியருட்லே ஒண்ணும் கொடுக்கலையா புள்ள?”
தாயின் கேள்வி காதில் விழுந்ததும் தீயைமிதித்தவள்போல்“ஐய்யோஇரும்மா தா இன்னொருவாட்டி இஞ்சினியாவீட்டுக்கு போகோணும்.”
“எதுக்கடி?”

3
“பழைய சோறு கொஞ்சம் மிச்சமிருக்குன்னு ஒரு போசிலே போட்டுகொடுத்தாங்க அத நா அங்கயே வச்சுபோட்டு வந்துட்டேன் அந்த பாழாப் போன நாய்கான தின்னுடுமோ என்னவோ?”
பயந்து ஓடினாள் மழையில் நனைந்து களிமண் நிலம் வசக் வசக் என்று காலைப் பிடித்தது.
பாத்துப்போடி எங்கியாவது உளுந்துகான தொலைக்காதே காலை யிலேவேலைக்கு போகமுடியாது. சம்பாதிக்கறலடசணம் மாத்துதுணிக்கு கூட வழியில்லை. என்று உரக்கக்கூவியவள் அக்கம்பக்கம் தன்னையாராவது பார்க்கிறார்களா என்றுஓரு முறை பார்த்துக்கொண்டாள். அதற்குள் எண்ணை வாங்க பணம் கொடுதத காலனிக்காரி சீதாவும் தோட்டத்து பொன்னியும்
“எனன் செல்லா எண்ணெ கிடைக்குமா?”
“வாங்கீர்லாம்மா.”
“பில் போட்டாச்சா?” என்று தங்கள் பணத்துக்கு பாதுகாப்பு தேடினார்கள்.
“ ம் பணம் கொடுத்துட்டேன இப்ப ரங்கப்பன் கொண்டாந்து தந்துருவான்.” அவள் சொல்லிக் கெண்டிருந்தபோதே நடையின் பின்பக்கம் நின்ற ரங்கப்பன்
“இந்தா செல்லம்மா” அதட்டலுடன் கூவினான்..
“ தோ வந்துட்டேன்” என்றவள் அவர்களைப் பார்த்து
“பில்போட்டாச்சும்மா. பத்துநிமிஷத்திலே எண்ணைவாங்கிடலாம்”
எனறபடியே ரஙகப்பனைப் பார்க்கப்போனாள்.
பில்லையும் மிச்சபணத்தையும் வாங்கிக் கொண்டு வந்தபோது சின்னி தன் வற்றல்உடம்பில் பெரிதாய் தெரிந்த பற்களை மட்டும் காட்டியபடி கெசுவாங்க’புஸ்புஸ்’ என்று மூச்சைவிட்டு
“நல்லவேளைம்மா அந்தபாட்டி எடுத்து உள்ளே வச்சிருந்தாங்க இல்லேன்னா இந்நேரம் நாய்தான் சாப்பிட்டிருக்கும்.”

4
“செரிசெரி என்ன பழையசோறுமட்டும்தானா ஊத்திக்க என்ன தாழ்ந்த குரலில் கேட்டாள்
“ஊத்திக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கல்ல” சாப்பாடு சேத மில்லாமல் போன சந்தோசத்தில் கொஞசம் சிணுங்கியபடி சொன்னாள்.
“நீஇங்கே நில்லு நா வீட்டுக்குப்போய் தம்பிக்கு கொஞ்சம் போட்டுட்டு அடம் புடிக்காம தண்ணியெடுத்து அடுப்பப்பத்தவச்சு உலையவை. அதுக்குள்ள எண்ணயக் கொடுத்துட்டு அரிசிய வாங்கிட்டு வந்தர;றேன். இல்லேன்னா எல்லோரும் இன்னிக்கு பட்னிதான் கெடக்கணும்.”
தன் சாப்பாட்டு ஆற்றாமையை மகள் கையிலிருந்த போசியை வாங்கிக் கொண்டு போனாள்.
தூரத்தில் வீட்டுக்கு பக்கம் போகும்போதே கூட்டமாய் நாலைந்து பேர்சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர் வேரென்ன எவனாவது தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுவானுக.. வேடிக்கை பாக்கறதுக்கு சொல்லவா வேணும். மனதில் வைத்தவளாய் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடு வென்று வீட்டுக்குள் நுழைந்தாள். சாப்பாட்டுப் போசியை அடுப்புத் திண்ணைமேல் வைத்துவிட்டு“இவனெங்க போனா“ அடேய் மருது என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள்.
தாயின் குரலைக் கேட்டதும் முன்னாலிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் மருது.பத்து வயசிருக்கலாம்
“அங்கென்னடாபண்ணீட்டிருக்கே?’
“சத்தமேம்மா போடறே நம்ம ஊட்டுக்கார தாத்தா செத்து போயிட்டாரம்மா” செல்லாளுக்கு பகீரென்றது.
“நீ என்னடா சொல்றே”என்று அவள் கேட்டதற்குக்கூட பதில்தராமல்
“ என்னம்மாது போசியிலே சோறா?”. போசியை திறந்து சோற்றை அள்ள முயன்றான்.

5
அவன்பதில் சொல்லாமல் போனாலும் ஊர் பெண்களின் ஒப்பாரி ஓலம்.அந்த பகுதியையே நிறைத்தது.
சோற்றை அள்ளப் போனவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள். வேண்டான்டா எழஊட்லே சாப்பிடக்கூடாது. உனக்கு என்னமாச்சும் வாங்கிதர்றேன் .வாப்பா.”
“எனக்கென்னும் வேண்டாம் சோறுதான் வேணும் மூணுநாளா இப்படித்தா சொல்லிட்டிருக்கே நா சாப்பிட்டுதாவருவம்போ.” அழுதபடி அவள் பிடியிலிருந்து திமிறினான் உள்ளேஓடிய வேகத்தில் கால்இடறிபோசியி லிருந்த சோறு முச்சூடும் கீழே சிந்தி மண்ணுக்கிரையானது
“வாடா பேசாம” இழுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்
-00000-
இச்சிறுகதையை எழுதியவர்
பாரதிதேவராஜ். எம். ஏ,

Series Navigation

பாரதிதேவராஜ்

பாரதிதேவராஜ்