” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

சோ முத்து சரவணன்



பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு எழுதி வைப்பார்கள்.
சுப்ரபாரதிமணியன் தான் சந்தித்த வெளிநாட்டுமனிதர்களின் மனோபாவங்களையும், அவர்களோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். நாடறிந்த எழுத்தாளர் . அவர் இஅ எப்படி எழுதி இருந்தாலும் நண்பர்கள் வட்டம் பெருமைப்படுத்தவே செய்யும். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குறிய தார்மீகச் சிந்தனைகள் சிறிதும் பிறழ்வாமல் இவர் பதிவு செய்திருக்கும் குறிப்புகள் மிக மிக கனமானவை.
நான் இந்நூலை வாசிக்கும் போது எனக்கு இந்நூல் மறுபதிப்பு
வழியாக , 15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் வாசிக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வருந்தினேன்.
மார்க்க்சியம் சார்ந்த சிந்தனையாளர் என்பதால் இதில் மனித உறவுகளின் மகத்துவம் பற்றி வெகுவாக உரசிப்பார்த்துள்ளார் இந்நூலினை 25 அத்தியாயங்களாக பிரிதுது எழுதியுள்ளார். இதை வாசிப்போர் தொடர்ச்சியாக இன்றி எந்தவொரு பகுதியை மட்டும் வசித்தாலும் அற்புதமாக பல விசயங்களைப் புரிந்து கொள்ளலாம். அய்ரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம் இதில்.
புலம் பெயர்ந்த ஆசியர், இந்தியர், இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகளும் அவர்களது இன்னல்களையும் இங்கிலாந்துப் பெண்களின் வாழ்க்கை முறை , அதை இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை, ஜெர்மனி இணைப்பின் விளைவுகள், புதிய நாஜிக்கள் என்ற அடையாளத்துடன் சில புல்லுருவிகள் செய்யும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீதான் தாக்குதல், பிரான்சைக்கலக்கும் அல்ஜீரிய தீவிரவாதிகள் பற்றிய கலக்கம், அதே நேரம் அங்கே கடைபிடிக்கப்படும் ஜனநாயக மரபு, அதன் பிண்னனியில் உள்ள உண்மைகளை நிதர்சனமாக நம் கண் முன் கொண்டு வருகிறார்..
மூன்றாம் அலக நாடுகள் மீதான் முதல் இரண்டாம் உலக நாடுகளின் ஈவிரக்கமற்ற கரிசனம், தன் இயற்கை வளங்களை பாதுகாக்க மூன்றாம் நாடுகள் மீதான இந்த கரிசனப்பார்வையின் ஊளனத்தை 21ம் நூற்றாண்டின் 10 ஆண்டுகளிலேயே உலகம் அறிந்து கொண்டாலும் நூலாசிரியரின் பார்வையில் அது முன் கூட்டியே அலசப்படுகிறது. இது அவரின் எழுத்து சிந்தனைக்கு வளம் சேர்ப்பதாகும். அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்குள் எழும் பிரிவினை கோசங்களைப் பார்க்கைகையில் ஆசிரியர் பின் வரும் அத்தியாயத்தில் ஈழத்தின் மறுவாழ்வு பற்றிய ஆசிரியரின் கணிப்பு தவறாகிப்போனது.
மலையகத்தமிழனை, மட்டக்க்கிளப்பு தமிழன் மட்டம்காக நினைக்கும் நிலையில் இந்தப் பிரிவினை எண்ணம்தானே இன்று ஈழம் பற்றிய கனவு வீழக் காரணமானது. தமிழன் உலகம் முழுவது வாழ்கிறான் என்பது பெருமிதம், அதே வேளையில் பிரிந்தே வாழ்கிறான் என்ற செய்தி வேதனை தருகிறது.
நிற வெறி, இன வெறி என்பது சென்னை தூதரகத்திலேயே துவங்கி விட்டதை ஆசிரியர் குறிப்பிடும் போது இந்த உலகம் இன்னும் நாகரீகத்தின் எல்லையைத் தொடவில்லை என்பது உறுதிப்படுகிறது.
தஸ்லிமா நஸ் ரீன் பற்றிய பார்வை விலாசமானது மெக்டொனால்ட் உணவு பற்றிய ஆசிரியரின் பயம், நம் நாட்டின் தற்போது விற்பனையாகும் ஜங்புட் கலாச்சாரம் , தீம்பார்க், மாயாஜால் என்று மேலைக் கலாச்சாரத்தின் வேகம் ஜீரமாக பரவி வருவதை கண்கூடாக்க் காட்டுகிறது. அங்கு பார்த்த திரைப்படங்கள் பற்றிய பார்வை உலகை ஒரு சுற்று வர வைக்கிறது.
மனிதனுக்கான எல்லை எது என்பதில் மனிதம் மட்டுமே தோற்பதில்லை. வெகுவான மனிதர்களும் தோற்கிறார்கள் எல்லைகள் விரிவடைந்த போதிலும் மனித மனங்களின் விரசங்கள் விரிவடையக் தொடங்கியது. சமாதானத் த்த்துவம் மட்டுமே சகஜமானதாகப்பார்க்கப்படுகிறது. இதுவே உலக அரங்கில் அதிகார மையத்தின் அரசியல் சண்டையானது. இக்கட்டுரைதொகுப்பைப் படித்தபோது எனக்குள் எழுந்ததே இந்த விமர்சனத்தத்துவம் . இச்சிந்தையை தரும் இந்நூல் அதனளவில் வெற்றியே.
( சுப்ரபாரதிமணியனின் ” மண் புதிது “ பயணக்கட்டுரை.
அறிவு பதிப்பகம், சென்னை வெளியீடு
ரூ 60/ )

= சோ.முத்து சரவணன்

Series Navigation

author

சோ முத்து சரவணன்

சோ முத்து சரவணன்

Similar Posts