இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் – ரா.கிரிதரன்


———————————————————————————————————————————————
.

சுகாவ் மெதுவாக சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். அவன் பற்களுக்கிடையே இருந்த இடைவெளி 1943இல் உஸ்ட்-இஸ்மாவில்(சுகாவ் முன்னர் இருந்த முகாம்) வாங்கியது. ஆஹா! என்ன ஒரு உதை அது; அடிவாங்கிய அவன் வயிறு எந்தவித உணவையும் உட்கொள்ளவில்லை.மேலும் மலஜலம் கழிக்க இயலாமல் ரத்தமாய் வந்தது. இப்போதோ அந்தப் பிரச்சனையின் சிறு துளி மட்டுமே பற்களில் எஞ்சியுள்ளது.

‘என் காதலியிடமிருந்து என்னை ’41இலேயே பிரித்துவிட்டார்கள், தலைவரே. அவள் எப்படிபட்டவள் என்பதே மறந்துவிட்டது’.

‘உருப்படாதவர்களே இதைப் போல சுத்தம் செய்வார்கள்..ஒரு மண்ணாங்கட்டியும் செய்யத் தெரியாதவர்கள், கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். நாம் கொடுக்கும் ரொட்டித் துண்டிற்கு அருகதையற்றவர்கள். மலத்தால் மட்டுமே உணவு தரவேண்டியவர்கள்’

‘தினமும் கழுவுவதால் என்ன ஆகிவிடப்போகிறது? சொதசொதப்பாக இருக்கிறதே. இதை யார் சகிப்பார்கள்? 854 இங்கே பார் – கொஞ்சம் ஈரம் உலர்கிற வரையில் துடைத்துவிட்டுப் போய்விடு.’

‘இல்லப்பா, அரிசியையும் கம்பையும் ‘

சுகாவிற்கு அதையும் சமாளிக்க நன்றாகத் தெரியும்.

வேலை ஒரு கம்பைப்போன்றது. அதற்கு இரு முனை உண்டு. தெரிந்தவர்களிடம் வேலை செய்தால் தரத்தைக் கொடுக்கலாம்; முட்டாளிடம் வேலை செய்தால் சமாளிக்கத் தெரிந்தாலே போதுமானது.

இல்லாவிட்டால் எல்லோரும் எப்போதோ சுருண்டிருப்பார்கள். அனைவருக்கும் தெரிந்த கதைதான் இது.

சுகாவ் காய்ந்த துணியால் நன்றாக தரையைச் சுத்தம் செய்தான்.பின்னர் அதை பிழியாமலேயே அடுப்பிற்கு பின்னால் தூக்கி எறிந்தான்.தன் வாலன்கி காலணிக்குள் நுழைந்து, மீதமுள்ள தண்ணீரை அதிகாரிகளின் பாதைவழியே இரைத்துவிட்டு,குளிக்கும் அறை வழியே குளிரான கிளப்பைத் தாண்டி சாப்பாட்டு அறைக்குள் சென்றான்.

இன்னமும் மருத்துவரிடம் சென்று விடுப்பு வாங்குமளவு உடம்பு சரியாகவில்லை. அவன் உடம்பு முழுவதும் ஒரே வலி. அந்த சாப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த காவலாளியை வேறு ஏமாற்றவேண்டும். அந்த முகாமின் தளபதி விடுத்த கட்டளை படி – சுதந்திரமாக முகாமில் சுற்றும் கைதிகளை பிடித்து லாக்-அப்பிலுள் அடைக்க வேண்டும்.

அவன் நல்ல நேரம் – அந்த காலை வேளையில், சாப்பாட்டு அறைக்கு முன் கூட்டமில்லை, வரிசையுமில்லை. நடந்து நுழைந்தான்.

குளியல் அறைப் போல காற்று கனமாயிருந்தது. அறைக்குள் இருந்த வெட்பத்தை வெளியிலிருந்து வந்த குளிர் காற்று சந்தித்தது. குழுக்கள் மேஜையில் உட்கார்ந்துகொண்டோ, கூட்டமாய் நின்றுகொண்டோ, சாப்பாட்டு மேஜை காலியாவதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டே குழுக்களிலிருந்து இரண்டு, மூன்று கைதிகள் குவளைகளில் கூழ் மற்றும் ரொட்டியை எடுத்துக்கொண்டு காலியான் மேஜையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.பார்த்துப் போய்யா.அவனுக்குக் கேட்கவில்லை.டமார்,டமார்! ஒரு கை காலியாகத்தானே உள்ளது, அவன் பிடரியிலே ஒன்று போடவேண்டியதுதானே? வழியில நிக்காதீங்கப்பா, எதையாவது தட்டிவிடப் பார்க்காதீங்க!

ஒரு மூலை மேஜையில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு தன் சாப்பாட்டிற்கு முன் பிரார்தனை செய்து கொண்டிருந்தான். அதாவது,மேற்கு உக்ரேனியன் – முகாமிற்கு புதியவன்.

எந்தக் கையால் சிலுவை குறி செய்து பிரார்த்திப்பது என ரஷ்யர்கள் மறந்திருந்தாகள். ஆதலால் இவன் மேற்கு உக்ரேனியன்.

அந்த குளிரான சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துகொண்டு, தொப்பிக்களோடு பலரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சின்ன மீன்களை கோஸ் இலைகளுக்குக் கீழிருந்து பொறுக்கித் தின்று கொண்டும், அதன் எலும்புகளை மேஜையின் மேல் துப்பிக் கொண்டும் இருந்தனர். அந்த எலும்புகள் சின்ன மலை போல் குவிந்ததும், அடுத்து உட்காரும் குழு அதை தரையில் பெருக்கித் தள்ளிவிடும்.ஆனால் நேராகத் தரையில் துப்புவது அநாகரிகச் செயலாகக் கருதினர்.

104ஆம் பிரிவைச் சேர்ந்த ஃபெடிகோவ் நடுவில் இருந்த இரு குழுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.சுகாவின் சிற்றுண்டியை அவன் தான் வாங்கி வைத்திருந்தான்.குழுக்கு வெளியேயிருந்து பார்க்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் – எண் போட்ட அவ்ர்களின் மேல்சட்டை ஒரேபோல இருக்கும் – ஆனால் குழுக்குள்ளே வெவ்வேறுமாதிரி இருப்பர். அவர்களுக்குள்ளே பல பதவிகள் உண்டு. உதாரணத்திற்கு, புய்நோஸ்கி அடுத்த கைதிகளின் உணவை பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டான். சுகாவ் எந்தவிதமான வேலையையும் செய்ய மாட்டான். அவனுக்கு கீழே பலரும் இருந்தனர்.

ஃபெடிகோவ் சுகாவைப் பார்த்து அவன் இடத்தில் ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்துகொண்டான்.

‘மிகவும் குளிராக இருக்கிறது. உன் சாப்பாட்டையும் சாப்பிட்டிருப்பேன். உன்னை லாக்-அப்பில் அடைத்துவிட்டார்கள் என நினைத்தேன்’

அவன் அதிக நேரம் அவனுடன் இல்லை. சுகாவிடம் தப்பி எந்த உணவும் அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை.

சுகாவ் தன் காலணிக்குளிருந்து ஸ்பூனை எடுத்துக்கொண்டான். அவனின் சிறிய புதையல். இது அவன் மேற்கே இருந்ததிலிருந்து அவனுடன் இருக்கிறது. அவன் கையாலேயே காய்ச்சிய அலுமினிய கம்பிகள். ‘Ust-Izhma 1944’ எனப் பொறித்துக் கொண்டான்.

எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை கழட்டி வைத்துவிட்டு, தன் குவளையில் இருக்கும் சாப்பாட்டை உற்று பார்த்தான்.ரொம்பச் சுமாரான சாப்பாடு. சூப்பை அடியிலிருந்தும் எடுக்காமல், மேலிருந்தும் எடுக்காமல் நீர்க்கக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் சூப்பிலிருந்து உருளைக் கிழங்குகளை எடுக்கக்கூட ஆள்தான் ஃபெடிகோவ்.

சூப்பின் ஒரே நல்ல விஷயம், அது சூடாக இருப்பதுதான். ஆனால் சுகாவிற்கோ நன்றாக ஆறிப் போயிருந்தது. ஆனாலும் எப்போதும்போல நிதானமாக சாப்பிட்டு முடித்தான். அவசர அவசரமாக முடிக்குமளவிற்கு ஒன்றுமில்லை; வீடும் பற்றி எரியவில்லை. தூக்கத்தை தவிர, ஒரு கைதி நிம்மதியாக இருப்பது – காலை சிற்றுண்டி சாப்பிடும் பத்து நிமிடம், மதிய சாப்பாட்டின் போது ஒரு ஐந்து, இரவு ஒரு ஐந்து நிமிடங்களே.

http://beyondwords.typepad.com

.

Series Navigation