” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

வைதீஸ்வரன்


அப்துல் கைய்யூம் பெண்களின் ”பாடல் பெற்ற ஸ்தலமான ”
இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்… ” இஞ்சி ” இடுப்பு பாடல் பிரபலமான போது
அது எல்லோரையும் தலையை சொறிய வைத்தது
உண்மை தான் … அது பற்றி என்னை சமாதானப் படுத்திக் கொண்ட
ஒரு விளக்கம் என்னவென்றால் ……. நாட்டுப் பாடல் காரன் சில சமயம் நாகரீக மோஸ்தருடன்
எழுத வேண்டுமென்று விரும்புவதுண்டு.

தெருக் கூத்தில் புராணப் பாடல்களில் கூட சில சமயம்
”டைம் என்னா ” ராஸ்கோல் ” என்ற வார்த்தைகளை
இடை செருகுவது உண்டு… அதே போல ”இஞ்சி ” இடுப்பு என்று அவன் சொல்லுவது
அவள் இடுப்பு சுற்றளவை அளந்து பார்த்தால் ஒரு
இஞ்சி அதாவது ஒரு அங்குலம் தான் இருக்கும்.. அத்தனை
சிறுத்த இடை என்று ”புதுமையாக ” சொல்லிப்
பார்க்கிறான் … இப்படி இடையை சுற்றி இஷ்டம் போல் ”சுற்றுவது ”
ஒரு நல்ல ஸ்வாரஸ்யம்
–வைதீஸ்வரன் —


vydheesw@yahoo.com

Series Navigation

வைதீஸ்வரன்

வைதீஸ்வரன்