அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part of 38 in the series 20090820_Issue

சி.சேகர்.


அன்புள்ள ஆசிரியருக்கு

இந்த வார திண்ணை சில நல்ல கட்டுரைகளுடன் இறுந்தது.

1.காங்கிரஸ் கவனிக்க – சின்ன கட்டுரையானாலும், நல்ல சில பாயிண்டுகளை விளக்கியது. சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது டில்லிக்கு ஏன் முக்கியமானது என்பது நல்ல விவாதம்.

2.பொறித்த அப்பள பொறியல் நட்பு – நல்ல கவிதையின் துவக்கம் – உதட்டளவு நட்பில், விரிசல் வருவது அதிசியம் – போன்ற வரிகளைத் தவிர்த்தால் நல்ல கவிதையாய் இருந்திருக்கும்.

3. ஜிக்ஸா விளையாட்டு – சுடோகு,ஜிக்ஸா வழியாக ஒரு கதை சொல்ல முடியும் என ஆச்சர்யமாக இருந்தது..ரா.கிரிதரன் எழுதும் கதைகள் வித்தியாசமான வார்த்தைகளும் நல்ல கருக்களாக இருக்கின்றன.படிக்கவும் சுவாரசியமாக இருக்கிறது.

4. அதிரை தங்க செல்வராஜின் கட்டுரைகள்/கதைகள் எல்லாமே சரியாக format செய்யாததுபோல் வரிகள் இருக்கின்றன.சரி செய்தால் படிக்க சுலபமாக இருக்கும்.காடு குறித்த கட்டுரை – எளிய அறிமுகம் போல் இருந்தாலும் நல்ல பார்வை.

5. பேய் பயம் பற்றி கே.பாலமுருகனின் கட்டுரை நன்றாக இருந்தது.அமானுட குரலாக இருக்கக் கூடாதென எண்ணுகிறேன்.

என் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள்.

அ. சில விமர்சனங்களைப் போட கதை, கட்டுரைகளுக்கு வசதியிருந்தால் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்,
ஆ. சி.ஜெயபாரதன், ரா.கிரிதரனின் தமிழாக்கங்கள் நன்றாக இருந்தாலும் மூல நூல்கள் இணையத்தில் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே? தமிழக்கம் செய்ய விருப்பமுள்ளவர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

நன்றி.
சி.சேகர்.
csekhar151@googlemail.com

Series Navigation