கடிதம்

This entry is part of 40 in the series 20080522_Issue

துல் பிகர்பல மாதங்களாக திண்ணையில் தொடரும் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அதற்கு மறுத்துரைகளை படிக்காமல் நிறுத்தி இருந்தேன். (ஆனால் என்னோட போறாத காலம்), இந்த திங்களில் அண்ணன் மலர்மன்னன் �பெயரை..� பற்றி எழுதிய பெயர் போன கடிதத்தை படிக்கும் பாக்கியத்தை பெற்றேன்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், முஹம்மது நபி அவர்களை நாங்கள் வணங்க வேண்டும் என்றா? அப்படி நாங்கள் செய்யாததை செய்ததாக சொன்னால் உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஜிஹாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் நாங்கள் சேரக் கூடாது என்பது தானா?
வேற வேலையே இல்லையா ஐயா, உங்களுக்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.

வன்முறை ஒழிவதற்கு யோசனை சொல்வார் என்று பார்த்தால் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் நின்ற வாகனங்களை எரித்ததை பற்றி எழுதுகிறார். எரியிற வாகனத்துல பெட்ரோலை அள்ளி ஊத்தறார். வன்முறையில் பேருந்தோடு உயிரையே கொளுத்தும் மடமையை கொளுத்த வழி சொல்ல முடியுமா, உங்களால்?. சின்னதா கடந்த சங்கை ஊதி பெருசாக்கி பொழுதோட்ட முயல வேண்டாம்.

கடவுள் என்றோ இறைவன் என்றோ அல்லது அல்லாஹ் என்றோ எவரும் இல்லை எவரையும் அல்லது எதையும் நாங்கள் வணங்க மாட்டோம், கடவுள் அல்லது இறைவன் அல்லது அல்லாஹ் ஒருவனை தவிர – இது தான் இஸ்லாத்தின் மூல மந்திரம்.

அரேபிய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை �அல்லாஹ்� என்று தான் அவர்களது அரேபிய மொழியில் அழைப்பார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு பிரச்சினையில் வன்முறையில் ஈடுபட்டு விட்டு �அல்லாஹ் அக்பர்� என்று சொன்னால் அது முஸ்லீம்களை தான் குறிக்குமா? வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.

மதம் எனும் குறுகிய போர்வைக்குள் இருந்து வெளியே வாருங்கள். தந்தை பெரியார் சொன்னார், �நான் மதங்களை வெறுக்கிறேன், ஏனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்� என்று. இந்த மதங்கள் மனிதர்களுக்கு இடையே வெறுப்பை வளர்த்ததை விட பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

மனித நேயம் வளர்ப்போம்


dul_fiqar@yahoo.com.sg

Series Navigation