பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

செய்தி



அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

15.02.2008 முற்பகல் 10.15 மணிக்கு நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிடுகின்றார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி அவர்கள் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றார். சிறப்பு விருந்தினராகப் பாவலர் அப்துல் இரகுமான் அவர்கள் கலந்துகொண்டு முதன்மையுரை ஆற்றுகின்றார்.அதனைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள் இரண்டுநாளும் நடைபெறும்.

16.02.2008 சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் அரங்க பாரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். தமிழியல் துறைத்தலைவர் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்.ஆய்வுரையாகத் திரைப்பா ஆசிரியர் பாவலர் அறிவுமதி அவர்கள் உரையாற்றுகிறார்.

கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மா.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி வாழ்த்துரைப்பார்.பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

தொட்பிற்கு :

முனைவர் அரங்க.பாரி அவர்கள்
இணைப்பேராசிரியர்
தமிழியல்துறை,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் – 608 002
செல்பேசி : 9842281957

செய்தி :
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com

Series Navigation

செய்தி

செய்தி

பன்னாட்டுக் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

அறிவிப்பு


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

பன்னாட்டுக் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

அறிவிப்பு


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

பன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

அறிவிப்பு


வாழ்வியல் கூறுகள் வளர்நிலை நோக்கு
நாள் 23 , 24 – 2 – 2007

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு