இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007

This entry is part of 41 in the series 20071115_Issue

அறிவிப்புஇலக்கிய வட்டம், ஹாங்காங்

கருத்தரங்கம்(கூட்ட எண்: 23)

நாள்: வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
நேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

தலைமை: திரு. செ.முஹம்மது யூனூஸ்

சிறப்புரை :
டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரன்

பொருள்: கம்பனும் தமிழிசையும்

[இசை, தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சங்கப் பாடல்கள் இசையோடு இயற்றப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் என்று தொடர்ந்த தமிழிசை மரபு, செழுமை பெற்று கம்பன் படைப்புகளில் துலங்குகிறது. கம்பராமயணத்தில் கற்பனைவளமும், இலக்கியத்திறமும், உணர்ச்சிப்பெருக்கும், சொல்நயமும் மிகுந்திருப்பதைப் போலவே தமிழிசையும் ததும்புகிறது என்பதை டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரனின் உரை புலப்படுத்தும்.

தற்போது சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் திருமதி சாரதா, கடந்த 35 ஆண்டுகளாக வகுப்பறைகளிலும், சமய-இலக்கிய அரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். நூலாசிரியர். தமிழக அரசு மற்றும் பல இலக்கிய-சமூக அமைப்புகள் வழங்கிய பட்டங்களைப் பெற்றவர். தமிழையும் இசையையும் முறையாகக் கற்றவர்.]

தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.


தொடர்புக்கு: மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation