இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)

This entry is part of 37 in the series 20071025_Issue

அறிவிப்புஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)

நாள்: சனிக்கிழமை, 27 அக்டோபர் 2007
நேரம்: மாலை 6.30 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

பொருள்: புலம் பெயர் வாழ்வு

உரைகள்:

திரு. அ.செந்தில்குமார்- “நாற்றுகள், தொட்டிச் செடிகள் மற்றும் குரோட்டன்கள்”

திரு. கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- “அக்கரை பச்சைதான்; எக்கரை அக்கரை?”

சிறப்புரை

திரு. செ.முஹம்மது யூனூஸ்- “எழுதப்படாத பர்மா குறிப்புகள்”

[‘யூனூஸ் பாய்’ என்று ஹாங்காங் இந்தியர்களால் அன்போடு அழைக்கப்படும் திரு. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றிச் சொல்வதற்கு, யூனூஸ் அவர்களிடம் ஏராளமான செய்திகள் உள்ளன. பர்மீயர்களும் இந்தியர்களும் இணக்கமாய் வாழ்ந்ததைப் பற்றி, 1930-குப் பிறகு பரஸ்பர நம்பிக்கைகள் மெல்ல மெல்லத் தகர்ந்ததைப் பற்றி, 1941-இன் ஜப்பானிய ஆக்கிரமிப்பைப் பற்றி, 1962-இல் ஏற்பட்ட ராணுவ ஆட்சியைப் பற்றி, அதற்குப் பின்னர் இந்தியர்கள் அங்கு வாழமுடியாமல் போனதைப் பற்றி…..இன்னும் நிறைய. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸ் அவர்களின் உரை, ஒரு காலகட்டத்தின் பதிவாக அமையும். அது புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் ஒரு சேரப் படம் பிடிக்கும்]

கலந்துரையாடல்:

உறுப்பினர்கள் எப்போதும் போல் பேசப்பட்டவை குறித்தும் பேசத் தவறியவை குறித்தும் பேசலாம், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

தொடர்புக்கு:
மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation