கடிதம்

This entry is part of 33 in the series 20070913_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
மறைக்கப்படும் கவிஞர்களுள் ஒருவரான சல்லா ராதாகிருஷ்ண சர்மா பற்றிய என் கட்டுரையை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.
‘இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் – பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்’ (செப்டம்பர் 5, அவர் பிறந்த நாள்) குறித்தும்; ‘மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா’ பற்றியும் தம்பி முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் சித்திரத்தையும் வாசித்தேன். அவருக்கும், வெளியிட்ட திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பிரான்ஸ் ஸ்திராஸ்பூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் வந்து உங்கள் எல்லாரையும் சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அவருக்கு எதிர்பாராமல் வேலைகள் பலவும் ஏற்படவே, இயலாமல் போயிற்று. அவரும் நாளை புறப்பட்டு விடுவார்.

திண்ணை.காம் குறித்த நீண்ட உரையாடல்கள் எங்களிடையே……. திண்ணையில் வெளியான “புதுச்சேரி வட்டார-வரலாற்று நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக..’ என்ற என் கட்டுரை – அரிய இளம் நண்பர்களை எனக்குத் தேடித் தந்திருக்கிறது. இதுதான் திண்ணை.காம் வலையேட்டின் சிறப்பு. உலகில் எங்கெங்கோ வாழ்பவர்களைத் தோழமையில் பிணைக்கும் ஆற்றலும், முரண்பட்ட கருத்தாடல்களை நிகழ்த்தும் அறிவாளிகளுக்கு ஒரே திண்ணையில் விருப்பு வெறுப்பில்லாமல் இடம் தரும் பெருந்தகைமையும் திண்ணை.காம் ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பாராட்டுகள்!
அன்புடன்
தேவமைந்தன்


pasu2tamil@yahoo.com

Series Navigation