கடிதம்

This entry is part of 36 in the series 20060818_Issue

வஜ்ரா ஷங்கர்


திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்கள் எழுதிய ஜூலை 27 அன்று வெளியான மத்தியகிழகுப் போரும் இந்தியாவும் என்ற கட்டுரை கண்டேன்…

அவர் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பற்றி முழுவிபரங்கள் அறியாமல் அல்லது தெரியாமல் எழுதுகின்றார் என்பதே என் கருத்து.

இஸ்ரேல் ஆட்சியாளர்களிடம் நேரில் பேட்டி கண்டு அவர்தம் எண்ணங்களை அறிந்தவர் போல், “இஸ்ரேலுக்குத் தேவை இடம்” ஒரு மாபெறும் “உண்மையை” “கண்டுபிடித்துள்ளார்”.

தற்பொழுது நிகழ்ந்துவரும் இஸ்ரேல்-ஹெஸ்பல்லா-லெபனான் போரில் இஸ்ரேலுக்கு லெபனான் நிலப்பரப்பின் மீது எந்த அக்கரையும் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஓல்மர்ட், ராணுவ மந்திரி அமீர் பெரட்ஸ் பலமுறை பல பத்திரிக்கைகளில்
பேட்டி அளித்துள்ளனர். மேலும் ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பை நிர்மூலம் ஆக்கவேண்டும் என்று ஐ. நா பாதுகப்பு கவுன்சில் சபையில் நிரைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளது (UN Security council resolution no 1559).

அந்த தீர்மானத்தின் படி ஹெஸ்பல்லாக்களை ஒடுக்கியிருக்க வேண்டிய கட்டாயம் லெபனான் அரசின் முக்கிய கடமை. தன் கடமையைச் சரியாகச் செய்யாமல் இஸ்ரேல் மீது பழி போடுவது தவறு. ஹெஸ்பல்லாக்கள் லெபனான் மந்திரி சபையில் அங்கம்
வகிக்கும் அளவிற்கு செல்வாக்கு படைத்த தீவிரவாத அமைபினர். ஒரு நாட்டிற்குள் தனி ராஜ்ஜியம் நடத்தும் நசரல்லா ஈரான், சிரியா போன்ற நாடுகளிடமிருந்து வரும் கட்டளைகளை நிரைவேற்றும் உண்மையான ஊழியர். இஸ்ரேலின் எண்ணம், ஹெஸ்பல்லாக்களை ஒடுக்குவதே.

ஹெஸ்பல்லா தீவிரவாதிகளுக்குத் தான் தேவை இஸ்ரேல் பக்கத்தில் இடம். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு!! இஸ்ரேலுக்குத் தேவை அந்த தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு.

உங்கள் பக்கத்து வீட்டிலிருந்து கொண்டு ஒருவர் உங்களை சதா சர்வகாலமும் தொந்தரவு செய்தால், அந்த பக்கத்துவீட்டின் உரிமையாளரோ எந்தப் பேச்சும் பேசாமல் அதற்கு ஒத்துழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அந்த வீட்டிற்குள் நுழைந்து அந்த ஆசாமியை உண்டு இல்லை என்று செய்வீர்களா இல்லையா? அதன் அர்த்தம் நீங்கள் உங்கள் பக்கத்துவீட்டை ஆக்கிரமிப்பதா?

திரு சின்னக்கருப்பன், இந்தியா பற்றி சொல்லும் பல கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றேன் என்றாலும். அவர் தனது போலி செக்குலர் வாதமான ஒன்றுபட்ட இந்தியாவில் “முஸ்லீம் பிரதமர்”, இந்தியாவில் நடக்கும் அனைத்து மதக் கலவரங்களுக்கும் பாகிஸ்தான் தான் காரணம் போன்ற வாதத்தைத் தவிர்த்திருந்தால் நல்லது. பாகிஸ்தான் இல்லாமல் இருந்தாலும் தீவிரவாதம்
செய்யக் காரணம் தேடி அலையும் இந்தியாவில் பிறந்த இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பதை மும்பை குண்டுவெடிப்புகள், இந்திய அறிவியல் கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கோவை குண்டுவெடிப்புகள் காட்டின. இந்தியத் தீவிரவாத முஸ்லீம்கள் நல்லவர்கள் என்று வெள்ளையடிப்பது போன்ற முயற்சியாகவே அவர் கட்டுரை உள்ளது. மேலும், தில்லியில் ஜாமா மசூதியில் வெள்ளிக்கிழமை நடந்த நமாஸ் பிறகு இஸ்ரேல் கொடியை மிதித்துப் போராட்டம் நடத்தியது, அமேரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்த சமயத்தில் உத்திரப் பிரதேசத்தில் ஹிந்துப் பையன் ஒருவனை வெள்ளிக்கிழமை ஜுமா முடித்து வந்த இஸ்லாமியர் கூட்டம்
கொன்றது எல்லாம் பாகிஸ்தான் தூண்டுதலா? உள்ளிருக்கும் தீவிரவாதிகளை பாதுகாக்க வெளியாட்கள் மீது பழி போடுவது எதனாலோ? Political correctness?

உங்கள் செகுலர் Sermon ஐ தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியருக்காகப் பாதுகாத்துவையுங்கள் என்று திரு. சின்னக்கருப்பனை
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

sankar.mr@gmail.com

Series Navigation