கடிதம்

This entry is part of 36 in the series 20060818_Issue

வஜ்ரா ஷங்கர்


திண்ணையில் வெளிவந்த எச். பீர்முகம்மது அவர்களின் “புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை” என்ற கட்டுரை படித்தேன்.

லெபனான் ஹெஸ்பல்லா, இஸ்ரேல் பிரச்சனையத் தொடாமல், இஸ்ரேல் உருவான சரித்திரத்தைப் பற்றி மட்டுமே நான் இங்கே விளக்க முற்படுகின்றேன்.

Diaspora பற்றி:
பீர்முகம்மது அவர்கள் சரித்திர காலத்தில் ஏதோ இஸ்ரேலியர்கள் தாங்கள் விருப்பப்பட்டுத் தான் தற்பொழுதய இஸ்ரேல் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிக்குச் சென்றதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறார். அது தவறு. யூதர்கள் தோற்றுப் போய் விரட்டப் பட்டனர், துரத்தப் பட்டனர் என்பது தான் உண்மை. இதன் விளைவாகவே Diaspora உருவாகியது. க்ரேக்க, ரோமானியர், சிலுவைப் போராளிகள், மற்றும் இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட அவர்தம் கலாச்சாரச் சின்னங்கள் இன்னும் காணும் இடத்தில் எல்லாம் கிடைக்கும் இஸ்ரேலில்.

சியோனிசம் பற்றி:
சியோனிசத் தலைவர்கள் புத்தகங்கள் படித்துத் தான் அவர்கள் எண்ணத்தை அறிந்து எழுதினாரா அல்லது லிவியா ரோகெக் எழுதிய Sacred terrorism புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதுனாரா என்று தெரியவில்லை..லிவியா எழுதிய புத்தகத்தை நானும் படிதத்துண்டு. அவர் பென் குரியோன் போன்ற தலைவரின் டைரிக் குறிப்பை எப்படியெல்லாம் திரித்துக் கட்டுக் கதை அடிக்க
முடியுமோ அப்படியெல்லாம் திரித்து ஒரு புதிய “வரலாற்றை” எழுதியுள்ளார். பீர்முகம்மது அவர்கள் Zionism த்தின் முக்கிய கொள்கைகளாகச் சித்தரிக்க விரும்புவது Propaganda literature ல் தான் வரவேண்டும் அல்லது Half truths என்று தான் சொல்ல வேண்டும். Zionism என்பது ஒரு political ideology. அதன் முக்கிய புள்ளி, யூத மக்களை ஒன்று திரட்டி அவர்கள் பழய
நாடான இஸ்ரேலை அது தோன்றிய இடத்தில் உருவாக்குவதே. இதன் முக்கியத்துவம் அதிகரித்தது ஐரோப்பாவில் பெரிதும் உலவிய Anti – semitism த்தினால் தான்.

மேலும் இஸ்ரேலின் தோற்றத்தால் பாலஸ்தீனர்களை விரட்ட எண்ணியது யூத-Zionist கள் அல்ல. அதையும் அவர் லாவகமாக மறைத்துவிட்டார். பாலஸ்தீனர் அகதிகள் பிரச்சனை உருவாக முக்கிய காரணம் அரபு தேசத்தின் படைகளே…அவர்கள் இஸ்ரேல்
உருவான உடன் தொடுத்த போரின் போது அரபுகள்இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று ஆசை காட்டி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாலஸ்தீனர்கள் தங்கள் வீட்டை விட்டுச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக போரில் இஸ்ரேல் வெற்றி
பெற்றுவிட்டது, இன்று பாலஸ்தீனர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.

பாலஸ்தீனர்களை யூதர்கள் விரட்டிவிட்டனர் என்பது பற்றி:(ஏற்கனவே இதை ஒரு பதிவாகப் போட்டிருந்தேன் என் வலைப்பதிவில்).

ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேரிய பாலஸ்தீன நிலப்பகுதி, மக்கள் தொகை அதிகம் இல்லாத பாலைவன நிலமாகவே இருந்தது. அவர்கள் நிலத்தை வெளிநாடுகளில் வசிக்கும் நிலச்சுவாந்தார்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக் குடியேறியுள்ளனர். இத்தகய நிலச்சுவாந்தாரர்கள், சிரியா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கோடீஸ்வரர்களாக இருந்து real estate வியாபாரம்
செய்ய பல இடங்களில் நில புலன்கள் வாங்கி விற்றனர்.

மேலும், யூதர்களின் நம்பிக்கையான Zion க்கு திரும்புதல் (returning to Zion) என்ற மத நம்பிக்கை காரணமாக வந்து குடியேரியவர்கள் ஐரோப்பிய யூதர்கள்.

Mark Twain, 1867ல் பாலஸ்தீனதிற்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டிருந்த வேளையில் அவர் கூறியது,

“Stirring scenes … occur in the valley (Jizreel) no more. There is not solitary village throughout its whole extent-not for thirty miles in either direction. There are two or three small clusters of Bedouin tents, but not a single permanent habitation. One may ride ten miles hereabouts and not see ten human beings….come to the Galilee for that…these unpeopled desert, these rusty mounts of barrenness, that never, never, never do shake the glare from their harsh outlines, and fade and faint into vague perspective; that melancholy ruin of Capernaum: this stupid village of Tiberias, slumbering its six funeral palms…We reached Tabor safely…We never saw a human being on the
whole route.

Nazareth is forelorn…Jericho that accursed lies in the moldering ruin today, even as Joshua’s miracle left it more than three thousand years ago; Bethlehem and bethany, in their poverty and their humiliation, have nothing about them now to remind one that they once knew that high honor of Savior’s presence, that hollow spot where the
shepherds watch their flocks by night and where the angels sang, ‘Peace on earth, good will to men’, is untenanted by any living creature…..Bethsida and Chorzin have vanished from the earth, and the “desert places” round them, where thousand men once listened to the Savior’s voice and ate the miraculous bread, sleep in the hush of solitude that is inhabited by birds of prey and skulking foxes”

” A land without people for the people with out land” என்கிற வாதத்தை நான் இங்கு வைக்கவில்லை என்பதை தெளிவுபடக்கூறிக் கொள்கிறேன். பிரச்சனை என்னவென்றால், 1880 க்கு முன்னால், அங்கு அவ்வளவு மக்கள் தொகை இல்லை, இது விவாதத்திர்குறியது என்றாலும், அந்த காலகட்டத்தில் நிலவிய சூளலில், வேலை இன்மை, வரட்சி போன்ற காரணங்களால், பல அரபு கிராமத்துமக்கள், வெளியேறிக் கொண்டிருந்தனர்.

1911 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டானிகா கலைக்கழஞ்சியத்தில் பாலஸ்தீன் பற்றி, “Population of palestine comprises ‘widely different ethnological groups’, speaking ‘no less than fifty languages”
என்று கூறுகிறது.

1880 முதல் 1948 வரையிலான கால கட்டத்தில் நில விற்பனையினை ஆராய்கயில் யூதர்களால் (அல்லது நம் வலைப்பதிவாளர்கள் கூறுவது போல் Zionist களால்) வாங்கப்பட்ட னிலத்தில் 3/4 பங்கு பெரிய நிலச்சுவாந்தாரர்களிடமிருந்தும்,
பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி அதிக விலையில் விற்க நினைக்கும் ப்ரோகர்களிடமிருந்தும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தகய நிலச்சுவாந்தாரர்கள், டமாஸ்கஸ், பெய்ரூத், போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்த பெரிய ஜமீந்தார்கள்.

Prof. Rached Khalidi, பாலஸ்தீன ஆதரவாளரான இவர், “There were considerable land sale by absentee landlords both
palestinian and non-palestinian” என்று ஒப்புக் கொள்கிறார்.

David Ben-Gurion (இஸ்ரேலின் முதல் பிரதமர்) யூதர்களிடம், அரபு கிராமத்தாரிடமிர்ந்து நிலத்தை வாங்கவேண்டாம் என்றும் கெட்டுக் கொண்டுள்ளார். யூதர்கள், அரபு மக்களை விரட்டிஅடித்துவிட்டுத்தான் இஸ்ரேலை உருவாக்கினர் என்பது, ஒரு பிரச்சாரம் தான். அதில் உண்மை கிஞ்சித்தும் இல்லை.

1880 க்குப்பிறகு வர ஆரம்பித்த யூதர்களால், வியாபாரம் பெருகியது, விவசாயம் பெருகியது, பணம் வர ஆரம்பித்தது, இதனால் யூதர்கள் மட்டும் பயனடயாமல், பாலஸ்தீனர்களும் பயன் அடைந்தனர். Rishon L’Tzion என்ற முதல்
யூதக்குடியிருப்பில் நடந்த ஆய்வு ஒன்றில், ஒன்றுமில்லாத இடமாக இருந்த மண்ணில், சுமார் 400 பாலஸ்தீனக் குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ வழி செய்தது 40 யூதக் குடும்பங்கள் என்று காட்டுகிறது. இதே சங்கதி தான் மர்ற
யூதக் குடியிருப்புகளிலும்.

1937ல் ஆங்கில அரசு ஆவனம் சொல்லும் கதை இது,

“The growth (of arabs) had been largely due to the health services combating malaria, reducing infant death rates, improving water supply and sanitation.”

இதெல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் செய்த நல்ல காரியம்.

மூசா அலமி என்கிற பாலஸ்தீன தலைவர், இந்த ஐரோப்பிய யூதர்கள் பூர்வீக பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் என்பது பற்றி,

“The people are in great need of a ‘myth’ to fill their consciousness and imagination”

ஜோர்டன் மன்னர் King Abdullah,

” The arabs are as prodigal in selling their lands as they are in… weeping [about it]”

சற்றே சரித்திரத்தையும் புரட்டிவிட்டு எழுதியிருந்தால் பரவா இல்லை. இஸ்ரேலின் மேல் சேற்றை வாரி இரைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவர் எழுதுகின்றார் போல் தெரிகின்றது.

மூலம்:
1. The case for Israel, Allan Dershowitz.
2. Wikepedia Online encyclopedia.

sankar.mr@gmail.com

Series Navigation