கடிதம்

This entry is part of 36 in the series 20060811_Issue

ஜெயமோகன்


ஆசிரியருக்கு,

சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்.விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.

ஜெயமோகன்

jeyamohanb@rediffmail.com

Series Navigation