கடிதம்

This entry is part of 42 in the series 20060623_Issue

தங்கமணி


திண்ணை ஆசிரியருக்கு:

ஜடாயு எழுதிய’ “ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்” கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு மேற்கோள் தொடர்பாக இதை எழுதுகிறேன்.

“என் பொண்ணு ஒரு ஆதி-திராவிட பையனையோ வேற சாதிப்பையனையோ இழுத்துட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு , அப்பா நான் சௌக்கியமாக இருக்கிறேன் என்று கடிதாசி போட்டால் நான் சந்தோஷப் படுவேன்..” என்று வருகிற வசனத்திற்கு எங்கும் ஆதாரமில்லை என்பதாக திரு. ஜடாயு குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை, மிகச்சரியாக இதே வாக்கியத்தை நான் டாக்டர் ச. சு. இளங்கோவன் எழுதிய “பாரதிதாசன் பார்வையில் பாரதியார்” என்ற புத்தகத்தில் படித்ததாக நினைவு. அந்த நூல் அன்னம் வெளியீடு என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை; ஆனால் இந்த வரிகள் நினைவில் உள்ளன.

திரு. ஹரி கிருஷ்ணன் வேறொரு தகவலுக்காக இந்நூலை தனது பாரதி கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார் (http://www.tamiloviam.com/unicode/07010403.asp). இதை திரு ஜடாயு கையை வெட்டிக்கொள்வதற்காகச் சொல்லவில்லை. பாரதியின் இந்த வரிகள் பற்றிய மேற்கோளாக நான் அறிந்ததைக் குறிப்பிடவும், பாரதி இதையெல்லாம் பேசியிருக்கமுடியாது என்ற நமது விருப்பங்கள் உறுதிப்படுவதைத் தவிர்க்கவும் இதை எழுதுகிறேன். இங்கு என்னிடம் அந்த நூல் இல்லையாதலால், பக்கங்களையோ, அந்தக் கருத்துக்கான மூல நூலையோ இங்கு தரமுடியவில்லை.

நன்றி.
தங்கமணி
—————-
ntmani@yahoo.com

Series Navigation