கடிதம்

This entry is part of 48 in the series 20060519_Issue

தே. பிரகாஷ்


சமீப காலமாக மதவாதக் கருத்துக்கள் திண்ணையில் ஓங்குவதாகத் தோன்றுகிறது. ஜாதி, மதம் போன்றவை மனித சமூகத்தினை சுமூகமாக இயக்கிச்செல்ல ஏற்படுத்தப்பட்ட/ஏற்பட்ட வரையறைகளாயினும், சமுதாய வரையறையே விரிவடையும் இக்காலத்தில் சமூகத்தை கட்டிக்காக்க வேண்டிய வரையறைகளும் மாறியாக வேண்டியதனை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். நமது நாடு பல்வேறு ஜாதி, மதங்களைக் கொண்டுள்ள காரணத்தால், மாற்றமென்பது நம்மை பொருத்தவரை மகாமாற்றமாகவே இருக்க வேண்டும். இன்னும் மதத்துக்கள் மனிதரைப் பூட்ட நினைக்கும் பிற்போக்குச்சிந்தனைகளை வளரவிட்டோமேயானால் நமது முன்னேற்றம்தான் பாதிக்கப்படும். எனவே, நான்தான் உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்று நீ ஒதுக்குகிறாய் என்றெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, பல்வேறு வரலாற்று காரணங்களால் நாம் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோமென்பதை உணர்ந்து ஒருங்கினைந்து செயல்ப வேண்டும். மனிதர் அனைவரும் மனித மதம் என்னும் ஒரே மதத்தை ஏன் பின்பற்றக் கூடாது? அடுத்த மனிதனை வீனே துன்புறுத்தும் எவரும் மதவாதி என்று, ஏன் மனிதன் என்று கூட சொல்லிக்கொள்ளக்கூடாது. வாழ்க பாரதம்! வாழ்க மானுடம்!

தே. பிரகாஷ்
prakashbvsc@yahoo.co.in

Series Navigation