கடிதம்

This entry is part of 48 in the series 20060519_Issue

ச. பெரியசாமி.


சில தமிழ்ப் பண்பாடுகள்.

ஒரு பக்கம் ஊருக்கு நாலு வைப்பாட்டிகள் வைத்துக்கொள்வது.
இன்னொரு பக்கம் கண்ணகிக்கு சிலையும் வைப்பது.

நடக்க, இருசக்கர, முச்சக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகள் செல்லப் பயன்படும் சாலையின் இரு மருங்கிலும் குந்தவைத்து உட்கார்ந்து
கக்கூசு போவது.
(கழிவறையில் போனால் அது ஆங்கிலப்பண்பாடு)

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இனிதாவதெங்கும் காணோமே என இந்த இணையக் காலத்தில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இறுமாந்து மப்பில் இருப்பது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் யாதும் என் கேளிர் யாவையும் என் சொத்து என இருப்பது.

ஊரார் பிள்ளைகளைத் தமிழ் மட்டும் படிக்கச்சொல்லி மடிப்பிச்சை எடுக்க வைப்பது. இந்தியைப் பழிப்பது. ஆங்கிலப் பெயர்ப் பலகைகளை உடைப்பது. ஆனால் தன் பிள்ளைகளை உயர் தர ஆங்கிலப் பள்ளியில் தமிழ் தவிர எல்லாம் படிக்க வைப்பது.

எங்கும் கத்திப் பேசிக் கூப்பாடு போடுவது.

கும்பல் சேர்க்கத் தெரிந்தவன் மட்டுமே அறிவாளி. அந்த குணம் இல்லை என்றால் எந்த அறிவாளியும் கோமாளி.

காய்கறிக்கடை முதல் சட்டமன்றம் வரை அடாவடித்தனம் பேசுவது/ செய்வது.

ச. பெரியசாமி

Series Navigation