கடிதம்

This entry is part of 41 in the series 20060421_Issue

இஸ்ஸத்


அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன.

குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு மதத்துக்குள் உள்ள சிறிய நம்பிக்கை சம்பந்தமான பிரச்சினைகள் பற்றியே விவாதம் புரிகின்றனர்.

இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகள் என நான் கருதுபவைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்:
1.மதக்கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்படுவது சொத்துக்கள் அழிக்கப்படுவது
2.மதவெறி இயக்கங்களின் சிறுபான்மை துவேசம்.
3.வறுமை
4.வேலைஇல்லாமை
5.சரியான அரசியல் தலைமை, வழிகாட்டுதல் இல்லாமை
6.ஊடகங்களில் எல்லாமுஸ்லீம்களும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்படுவது
7.அரசு மற்றும் காவல்து¨ற் அடக்குமுறைகள்
8.கல்வியில் பின்தங்கியிருப்பது
9. அரசு பணிகளில் போதிய ஒதுக்கீடு இல்லாமை.
10.ஓட்டு அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறுவது.(குறிப்பாக தமிழகத்தில் தி மு க – அதி மு க )
11. முஸ்லீம்களுக்கென்று சரியான வெகுஜன ஊடகங்கள் இல்லாதிருப்பது.
12.கலாச்சார சீரழிவுகள்
13. மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இஸ்லாமிய இளைய சமுதாயம் தீவிரவாதத்தில் தள்ளப்படுவது.

ஆக இத்தனை வாழ்வாதாரமான பிரச்சினைகள் இந்திய முஸ்லீம்களுக்கு இருக்கும்போது இஸ்லாமிய படைப்பாளிகள் வஹாபி சஹாபி பிரச்சினைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஏற்கனவே இந்தப்பிரச்னை காரணமாக குடும்பங்களில் ஆரம்பித்து சமுதாயம் வரை முஸ்லீம்கள் பிளவு பட்டு இருக்கின்றார்கள்.
மதவெறி இயக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றய சூழலில் மதசார்பற்ற ஜன நாயக சக்திகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அடித்தட்டு மக்களை
ஒன்று திரட்டுவதும் பரவும் பாசிச அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய படைப்பாளிகளின் தலையாய கடமையாக உள்ளது.

அன்புடன்
இஸ்ஸத்
துபாய்
aizzath@hotmail.com

Series Navigation