கடிதம்

This entry is part of 29 in the series 20060303_Issue

புதியமாதவி


திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.

புகைப்படங்களுடன் அருணாவின் கதையை வெளியிட்டமைக்கு நன்றி.

விவாதங்களை முறைப்படுத்துதல் குறித்து நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துஎன் போன்ற பல வாசகர்களின் கருத்து. மலர்மன்னன் போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்ததைப் பதிவு செய்வதும் அதற்கு திண்ணை இடமளித்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. கருத்து தளத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட என் போன்றவர்களும் மலர்மன்னன் சொல்ல வரும் கருத்துகளைஅறியவே ஆவலாக இருக்கின்றோம்.

எது உண்மை, எது உண்மை திரித்து சொல்லப்படும் செய்தி, எந்த தளத்தில் நின்று செய்தி வாசிக்கப்படுகிறது இதை எல்லாம் மிகவும் சரியாகவே புரிந்து கொள்பவர்கள் தான் திண்ணை வாசகர்கள் என்பது என் எண்ணம்.

மலர்மன்னன் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். கற்பகவிநாயகம் அவர்கள் தன் கருத்துகளையும் முன்வைக்கட்டும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி என் போன்றவர்கள் நம் சரித்திரத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்,

புதியமாதவி,மும்பை.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation