கடிதம்

This entry is part of 29 in the series 20060303_Issue

குண்டலகேசி


திண்ணையின் கருத்துரிமை விளக்கம் ?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

கருத்து – opinion

fact – நிகழ்வு

கருத்துகளை எழுதுவதற்கும், நிகழ்வுகளை எழுதுவதற்கும் ஏகப்பட்ட

வித்தியாசம் உள்ளது.

ஒருவருக்கு தன் கருத்துகளை எழுதுவதற்கு வானளாவிய உரிமை உள்ளது.

என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

ஆனால் நிகழ்வு, வரலாறு என்று எழுதும்போது ஆதாரத்துடந்தான் எழுத வேண்டும்.

மலர் மன்னர் சிவாஜியையோ, சுந்தர ராமசாமியையோ சந்தித்திருந்தால், அதற்கு அவர்தானே ஆதாரம் வைக்க வேண்டும்! அவர் எழுதியவைக்கு அவரால் ஆதாரம் வைக்க முடியவில்லையென்றால் படிப்பவர்கள் இது பொய்யுரை என்று எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆதாரம் இருந்தால் வைக்கட்டுமே!

இவர் பெரியாரை சந்தித்ததற்கும் இவர் சாதியை விசாரித்ததற்கும் சாட்சி

உண்டா. ? இல்லை. இவர் எழுதியது அனைத்துமே பெரியார், அண்ணா, சிவாஜி என்று இறந்து போனவர்களை பற்றிதான் இருக்கிறது. இவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் கூறுவதற்கு இறந்து போனவர்களுக்கு பதில் கூறும் வாய்ப்பாவது உள்ளதா ? அதுவும் இல்லை. அவர்கள் இருந்த காலத்தில் அல்லவா இந்த வரலாற்றை( ?) எழுதியிருக்க வேண்டும் ?

ஒருவர் எழுதுவதெல்லாம் உண்மை என்று அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள நாம் என்ன 13 ஆம் நூற்றாண்டிலா இருக்கிறோம் ? புஷ்ஷுக்கு நேஷனல் கார்டில் சலுகை அளிக்கப்பட்டதாக ஒரு கதை விட்டார்கள். சும்மா இல்லை. ஒரு லெட்டர் ஆதாரத்தோடு. இந்த லெட்டர் பொய்யென்று மூன்று மணி நேரத்தில் நிரூபித்தார்கள். இந்த காலகட்டத்தில் அவரவருக்கு தோன்றியதை எல்லாம் வரலாறு என்று எழுத முடியுமா ?

மலர்மன்னன் நிகழ்ந்ததாகச் சொல்லும் விஷயங்களுக்கு அவர்தான் நம்பத்தகுந்த ஆதாரம் வைக்க வேண்டும்.

இந்த கடிதத்தை திண்ணை வெளியிடாவிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

—-

kundalakesi_s@yahoo.com

Series Navigation