கடிதம் ஜனவரி 6,2005

This entry is part of 57 in the series 20050106_Issue

அசுரன்


இனிய நண்பர்களே!,

அணுஉலைகள் போன்ற பேரபாய கட்டமைப்புகள் நம் நாட்டில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த ஆய்வுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவது என்று எண்ணியிருந்தோம். கும்பகோணம் கொடூரம் அதனை வலியுறுத்தியது.

இப்போதைய சுனாமி வீச்சு அதனை மேலும் உறுதிபடுத்துகிறது. அதற்கு உதவும் வகையில் http://www.managingdisaster.org/ என்ற பெயரில் நண்பர்கள் ஒரு இணையதளத்தினை வடிவமைத்துள்ளனர். அவசரஅவசரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையத்தில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

‘நிலநடுக்கக் கடல் கொந்தளிப்பிலிருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்த வழ்நிலையில் எவ்வாறெல்லாம் நாம் நடந்துகொண்டால் நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. நிலநடுக்கக் கடல்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்கின்ற, பணியாற்றுகின்றவர்களுக்காக இந்தப் புத்தகத்தை நாங்கள் எழுதியிருக்கிறோம் ‘ என்கிறது அதன் முன்னுரை.

இத்தளத்தினை மேலும் பயனுள்ளவகையில் செழுமைப்படுத்த உங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தேவை.

தோழமையுடன்,

அசுரன்

Series Navigation