கடிதம் அக்டோபர் 28,2004

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

திண்ணையில் நான் அண்மையில் காலமான கிஷன் பட்நாயக் குறித்து எழுதியிருந்தேன். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை, பேராசிரியர் மனோரஞ்சன் மொகந்தி எழுதியது இந்த வார எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் வெளியாகியுள்ளது.

இதை இணையத்தில் http://www.epw.org.in/showArticles.php ?root=2004&leaf=10&filename=7830&filetype=html

என்ற முகவரியில் காணலாம்.

கடந்த வாரம் நீதாம்,பாரம்பரிய அறிவு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஆயுர்வேதம் பற்றிய கட்டுரை குறித்த தகவல்கள் விடுபட்டிருந்தன, அது எனது பிழை. அது பற்றிய விபரம் :

‘SCIENCE ‘ VS. ‘RELIGION ‘ IN CLASSICAL AYURVEDA , Engler S., Numen ,1 November 2003, vol. 50, no. 4, pp. 416-463(48)

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

கடிதம் அக்டோபர் 28,2004

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

அ. முஹம்மது இஸ்மாயில்


அனைவருக்கும் என் ஸலாம்..

காமாலை கன்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அதை போல இங்கே ஒருவரது பார்வை மஞ்சளாக மங்கலாக தெரிந்திருப்பது அவரின் பார்வையை படித்தால் தெரியும்..

திருக்குரான் வசனம் 5:60 குரங்குகளாக, பன்றிகளாக இருக்கிறார்கள் என்றும் வசனம் 9:97ல் நயவஞ்சகர்கள் குரானை அறியக் கூடாது என்று வருவதற்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. மதிப்பிற்குரிய கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் செய்த தவறு அது தான். என்ன ஐயா நீங்கள் ?.. குரங்கு கையில் பூமாலையை கொடுக்கலாமா ? திருக்குரான் கூற்றுப்படி நீங்கள் செய்தது தவறு தான். அந்த புஸ்தகத்தை அனுப்பியே இருக்கக் கூடாது.

அவர்களெல்லாம் அறியாமலிருப்பதே நல்லது..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஒரு பாடல் வரும். அதாவது சட்டம் போட்டு திருட்டை ஒழிக்க முடியாது என்று அர்த்தம். அப்படி, சட்டம் போடாமலே அடிமை முறையை அன்பால் உடைத்த மகத்தான மார்க்கம் தான் இஸ்லாம். இன்றைக்கு அரேபியாவில் அடிமை முறை கிடையாது.

அடிமையும் எஜமானும் ஒரே கோப்பையில் நீர் அருந்துவார்கள். ஒரே பாத்திரத்தில் உணவு உண்பார்கள்.

அடிமையாக இருந்த பிலால்(ரலி) அவர்களை இஸ்லாமிய அரசின் இரண்டாவது கலிபா(ஆட்சி தலைவர்) ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்கள் ஹய்யிதினா(தலைவரே)-(நண்பரே என்று கூட அல்ல) என்று தான் அழைப்பார்கள்.

ஸொராஸ்டா என்ற பார்சி மதத்தின் குரு டாகூர்வாலா கூறுகிறார்:

இஸ்லாத்தை தழுவ முற்படுவோர் எவராக இருப்பினும் சரி அன்னவர் நீக்ரோ இனத்தவராக இருந்தாலும் சரியே அவரை நெஞ்சாரத் தழுவி வரவேற்கின்றனர்.

இஸ்லாத்தை தழுவும் புதிய நபர்களுக்கு மற்ற முஸ்லீம்களுக்கு உள்ள சகல உரிமைகளும் தரப்படுகின்றன.

குலம், கோத்திரம், வர்ணம் என்ற தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு முழுமையான-பரிபூரண-சமத்துவ அடிப்படையில் இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு பகுதியாக அவர்கள் ஏற்கப்பட்டு விடுகிறார்கள் ?

இந்த உணர்வுகளை இயல்புகளை இஸ்லாம் அல்லாமல் ஏற்படுத்தி தந்தது எது ? இது எங்கள் பெருமானாரின் நடைமுறையில் வந்த சமத்துவமல்லவா ?

சமாதிகளில் வழிபடுவதாகவும் சின்ன எஜமான், பெரிய எஜமான் என்று அழைப்பதாகவும் கூறுகிறார். சமாதிகளில் இருப்பவர்கள் இறைவன் வகுத்த பாதையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். பெருமானாரின் தூய வழியை காட்டியவர்கள். அவர்களை நாங்கள் சின்ன எஜமான், பெரிய எஜமான் என்றும் அழைப்போம் சின்ன முதலாளி பெரிய முதலாளி என்றும் அழைப்போம் அதுல என்ன போச்சு உங்களுக்கு ? நாங்கள் என்ன பெரிய கடவுள், சின்ன கடவுள் என்றா அழைத்தோம். அரேபியாவில் கஃபாவில் தொழும் ஒரு முஸ்லீமிடம் கேட்டு பாருங்கள் ?உன் இறைவன் யாரென்று ? ? அங்கு என்ன பதில் வந்ததோ அதே பதில் நாகூரில் ஹொத்துவா(குத்பா-பிரசங்கம்) பள்ளியில் தொழும் முஸ்லீமிடமிருந்தும் வரும்.. ‘அல்லா ‘ என்று. ரொம்ப தெரிந்த மாதிரி எதுவுமே தெரியாமல் உளறக் கூடாது.

ஜிஸ்யா என்பது ஏதோ இந்துக்களிடம் இருந்து பிடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். அது குடிமகன் என்ற முறையில் நாட்டுக்கு செலுத்த வேண்டிய முறையான வரி. அவ்வளவு தான்.

உண்மையில் பெண்கள் மீது அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது இஸ்லாம் மீதுள்ள கண்மூடித்தனமான வெறுப்பு அவர்களை இப்படி எழுத வைக்கிறது-

இஸ்லாம் என்ன ஒரு பெண்ணை ஐந்து அல்லது ஆறு ஆண் மகனுக்கு ஒரே நேரத்தில் கட்டி வைக்க சொன்னதா ? ?-

அல்லது

பெண்கள் தீக்குளித்து பத்தினித் தனத்தை நிரூபிக்க வேண்டும் என்று சொன்னதா ? ?-

அல்லது

கணவன் இறந்து விட்டதற்காக கையை காலை கட்டி சிதையில் தள்ளி விட சொன்னதா ?

1500 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு விவாக உரிமை, மணக் கொடையை நிர்ணயிக்கும் உரிமை, விவாக விலக்கு பெறும் உரிமை, தந்தையிடமிருந்து, கணவனிடமிருந்து, சகோதரனிடமிருந்து கூட சொத்தை பெறும் உரிமை.. இப்படி உரிமைகள் கேட்டு போராடாத காலத்தில், பெண் பிள்ளை பிறந்தாலே குழி தோண்டி புதைத்த மக்கள் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு சலுகைகளையும் உரிமைகளையும் வாரி வழங்கியிருக்கிறது என்றால் அது இஸ்லாமிய புரட்சி அல்லாமல் வேறென்ன ?

புஸ்தகம் முழுவது முரண் என்கிறார்.. என்ன முரண்.. ? இப்ப.. அஹிம்சை பேசி விடுதலை பெற்ற நாடு அதிபரானார் அணுகுண்டு தயாரித்தவர் என்று புதுக்கவிதை மாதிரி எழுதுகிறேன் என்று வையுங்கள் அது முறன் அல்ல அது தான் உண்மை. முரண்டு பிடிப்பதால் முரணாக தெரிந்திருக்கலாம். நமக்கு தெரியவில்லை.

பெருமானார் சொன்னதாக நூல் பைஸாகியில் பதிவு செய்யப்பட்டுள்ளது-

படைப்புகள் யாவும் இறைவனின் குடும்பம். இறைவனின் குடும்பத்தை நேசிப்பவன் இறைவனை நேசித்தவன் ஆவான்.. என்று-

நாம் எல்லோரும் ஒரே குடும்பம்.. ஒருவருக்கு ஒருவர் நேசித்து புரிந்துக் கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்வில் நிம்மதியும் அமைதியும் அடைவதற்கு தான் இந்த வாழ்வு. இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நிறுத்த சில பார்வைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மறியாதைக்குரிய நாகூர்ரூமி அவர்களுக்கு

சிலரது குருட்டு பார்வைகளை ராஜ பார்வை என்று நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. இந்த உண்மையை புஸ்தகம் படித்த என் மாற்று மத நண்பர்களிடமிருந்து தெரிந்துக் கொண்டேன்.

துவா

ஸலாமுடன்

அ. முஹம்மது இஸ்மாயில்

—-

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்