This entry is part of 54 in the series 20040722_Issue


சின்ன தேவதை

சோமரட்ண திசநாயக்காவின் சின்னதேவதை திரைப்படம் மே மாதம் 16ம் திகதி ஒன்ராறியோ சயன்ஸ் சென்ரறில் திரையிடப்பட்டது.. இத்திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது என்பது எமக்கும் பெருமையான விடயமே..

1983ம் ஆண்டு 13 சிங்கள இராணுவம் கொலைசெய்யப்பட்டபோது தோன்றிய இனப்படுகொலைகள் பற்றிய ஒரு சில வரிகளுடன் திரைப்படம் தொடங்கியது..

பணக்காரக்குடும்பத்தில் பிறந்த சம்பத் எனும் 10 வயது சிங்களச்சிறுவன்.. சிறுவயதிலிருந்தே பெற்றோரின் கவனிப்பின்மை> அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து வளர்ந்ததால் மனநிலைபாதிக்கப்பட்டவனாய்> வாய் பேசமுடியாத நிலையில் பொருட்களைப் போட்டு உடைக்கும் வக்கிர மனம் கொண்டவனாக இருக்கின்றான்.. தாய் தனது காதலனுடன் சென்று விட பணக்காற அப்பா அவனிற்கு அன்பைத் தவிர அத்தனையும் கொடுத்து வளர்க்கின்றார்..

சம்பத்தின் வீட்டில் பலவருடங்களாக வேலு எனும் தமிழன் ஒருவன் வேலை பார்த்து வருகின்றான்.. பணக்கஷ்டம் காரணமாக தனது 8 வயது மகளான சத்யாவை தன்னோடு அழைத்து வந்து சின்னச் சின்ன வேலைகளைச் சொல்லிக்கொடுக்கின்றான்.. பெரிய கண்களும்> நீண்ட முடியும்> அழகான சிரிப்புமாய் தனது குறும்பால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சத்யா சம்பதின் மனதிலும் இடம்பிடிக்க.. சம்பத்திடம் மாற்றங்கள் தோன்றி முடிவில் அவன் சத்யாவிடம் சரளமாக தமிழ் கதைக்கற்றுக்கொண்டு விடுகின்றான்.. தனது மகன் தாய்மொழியான சிங்களத்தைக் கதைக்காது வேலக்காறியுடன் சேர்ந்து தமிழைக் கதைக்கின்றானே இது எங்கு போய் முடியுமோ என்று முதலில் அவனது தந்தை சங்கடப்பட்டாலும் சத்யாவின் நட்புத்தான் அவனிற்கு நல்ல மருந்து என்ற வைத்தியரின் ஆலோசனையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.. மெல்ல மெல்ல அவர் சத்யாவின் மேலும் பாசம் கொள்ளுகின்றார். சத்யாவுடன் சேர்ந்து சாப்பிடுவது> விளையாடுவது> படிப்பது என்று சம்பத் முற்றிலும் தேறிவிடுகின்றான்..

83ம் ஆண்டுக் கலவரம் பல அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொள்ள.. அதில் வேலைக்காறன் வேலும் தனது உயிரை விடுகின்றான்.. சத்யாவை சம்பத்தின் குடும்பம் பாதுகாத்தாலும் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து வாழும் காலம் வரட்டும் அதன் பின்னர் எனது மகளை அழைத்து வருகின்றேன் என்று கூறிக் கலங்கிய கண்களுடன் தனது மகளை சத்யாவின் அம்மா அழைத்துப் போகின்றாள்.. கலங்கிய கண்களுடன் தனக்கு மிகவும் பிடித்த சின்ன தேவதைக் கதைப் புத்தகத்தை அன்பளிப்பாக சம்பத்திற்குக் கொடுத்து விட்டு அவள் தாயாருடன் புறப்படுகின்றாள்.. சத்யாவின் பிரிவைத் தாங்காது சம்பத் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகின்றான்..

திரைப்படத்தில் அடிக்கடி வந்து போகும் சின்னதேவதை என்ற தமிழ் பாடல் மனதை நிறைக்கின்றது. இந்திய தமிழ் இயக்குனர்களின் பணம் பண்ணும் வித்தையில் நசிந்து போய்க்கொண்டிருக்கும் ஈழப்போராட்டம்> ஒரு சிங்கள இயக்குனரால் காக்கப்பட்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

எமது நாட்டின் இனக்கலவரத்தின் கொடுமையை துப்பாக்கியும் இரத்தமும் கொண்டு தராமல் சிறுவர்களின் மனநிலை மூலம் காட்டியிருக்கின்றார் இயக்குனர். மிக எளிமையாக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டிருக்கும் சின்ன தேவதை சிங்களத் திரைப்படம் என்ற போதும் திரைப்படத்தின் பாதிப்பகுதி தமிழிலேயே நகர்கின்றது..

தொழில்நுட்ப வசதிகள் அதிகமுள்ள கனடாவில் வாழும் எமது தமிழ் மக்கள் பலரும் திரைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமாக இருப்பது சந்தோஷமான விடயமாக இருந்த போதிலும் அவர்களின் படைப்பில் தரமற்ற இந்திய தமிழ் திரைப்படங்களின் பாதிப்பு மட்டுமே இருப்பது மிகக்கவலைக்கிடமாகவே உள்ளது.. அவர்களின் கவனம் இப்படியான தரமான படைப்புகளின் மீதும் திரும்பினால் நல்லது.

எமது நாட்டவர் ஒருவர் இனக்கலவரத்தைப் பின்னணியாக வைத்துத் தரமான ஒரு திரைப்படத்தை எடுத்து பல நாடுகளில் பல விருதுகளைப் பெற்று அத்திரைப்படத்தை கனடாவில் திரையிட்ட போதும்.. தரமற்ற இந்தியத் திரைப்படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை எமது மக்கள் இத்திரைப்டத்திற்கு கொடுக்கவில்லை என்பது கவலைக்கிடமாக உள்ளது.. ஊடகங்களும் அதிகம் இதில் நாட்டம் கொள்ளவில்லை என்றே படுகின்றது..

—-லாம். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப இயலும்.

12. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: செப்டம்பர் 04, 2004 11:59 PM EST.

13. கடைசித் தேதிக்குப் பின்னர் வரும் படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.

14. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே இறுதியானவை.

15. போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவரின் குடும்பத்தினர் போட்டியில் பங்கேற்க இயலாது.

16. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்களும், உரிமையாளரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

17. போட்டி முடிவுகள் செப்டம்பர் 30, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

18. மேலும் விவரங்களுக்கு vizha@maraththadi.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்

மேற்கண்ட விதிகளுடன் மரபுக்கவிதைக்கான சிறப்பு விதிகள்:

—-

1. மரபில் எந்த வகை யாப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற இறுக்கமான வகைகள் என்றால், தளை தட்டாமலும், இலக்கண விதிகளை மீறாமலும் இருப்பது அவசியம். மரத்தடிக் குழுமம் இளைஞர்களையும் மரபில் அதிகம் பயிற்சி இல்லாத கவிஞர்களையும் கொண்டது என்பதனால் நடுவரின் கருத்துக்கிசைய சில விலக்குகள் பரிசீலிக்கப்படலாம்.

3. விருத்தங்கள், சிந்து போன்ற சந்தத்தால் இயங்கும் பா வகைகளில் சந்தம் தட்டாமல் இருப்பது நலம். ஒன்றிரண்டு இடங்களில் தவறியிருந்தாலும், நடுவர் கருத்தில் ஏற்கத் தக்கவையாயின் அவற்றை ஏற்கத் தடையில்லை. நடுவரின் கருத்தே இறுதியானது.

4. இயற்றுவதற்கு மிக எளிதான ஆசிரியப் பாக்களிலும் கவிதைகளை அனுப்பலாம்.

5. கருத்தாழம், நடையழகு, எடுத்துச் சொல்லும் விதம், உணர்வுகளின் வெளிப்பாடு போன்ற சிறப்புகளை வைத்தே பரிசுகள் தீர்மானிக்கப்படும். ஆகையால், கருத்தின் வெளிப்பாட்டிலும், சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகப் புலப்படும்படியாக எடுத்து வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இங்கனம்,

நம்பி (ஒருங்கிணைப்பாளர், மரத்தடி ஆண்டுவிழா இலக்கியப் போட்டி 2004),

மதி கந்தசாமி (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)

ஹரன்பிரசன்னா (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)

Series Navigation