கடிதம் -ஜூன் 24, 2004
பிரபு ராஜதுரை
அன்பார்ந்த திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
சிவகுமார் அவர்களின் ‘கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? ‘ என்ற கட்டுரையினை படித்தேன். அவரது ஆதங்கம் உண்மையானது என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் பல விஷயங்களை சட்டம் போட்டு தடுத்துக் கொண்டிருக்க முடியாது. உதாரணமாக ‘குற்றப்பத்திரிக்கை சாட்டப்பட்டவர்கள் மந்திரியாகலாமா ? ‘ என்ற இந்தப் பிரச்னை. எனது கணிப்பில் உலகின் எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இவ்வாறு ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்காது. பொதுவாக தேர்தலில் வென்று விட்டாலும், ஆட்சியாளர்களின் பல நடவடிக்கைகளை நிர்ணயிப்பது மக்களின் பொதுக்கருத்தே! எனவேதான் மக்கள் கல்வியறிவு பெற்று அரசியல் விழிப்புணர்வு பெற்ற அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், இவ்வாறாக நடைமுறையையும் ஒழுக்க நெறியையும் மீறி சில காரியங்களை செய்வதில் ஆட்சியாளர்களுக்கு பல சமயங்களில் சாத்தியப்படுவதில்லை. நமது நாட்டில் போதிய கல்வியறிவு இல்லாதலால், பெரும்பாலான மக்களிடையே இந்த விஷயத்தில் ஏதும் பொதுக் கருத்து இல்லை. எனவே ஆட்சியாளர்களுக்கும்
கவலையில்லை. ஆனால் இந்த ஒரு காரணமே நமக்கு நம்பிக்கையளிக்கிறது. அதாவது நாளாவட்டத்தில் மக்களிடையே கல்வியறிவு பெருகினால், அதனால் ஏற்படும் விழிப்புணர்வில் இம்மாதிரியான ஒழுக்க நெறிக்கு மாறான காரியங்கள் ஆட்சியாளர்களுக்கு சாத்தியமில்லாமல் போய் விடும். எனவே காலம் செல்லச் செல்ல இம்மாதிரியான விஷயங்கள் இருக்காது போகும் என்ற
நம்பிக்கையோடு திருப்திப்பட வேண்டியதுதான். எனது இந்த நம்பிக்கை பலிக்கும் என்பதில் உள்ள சாத்தியக்கூறுகள் நமது அரசியல்வாதிகள் ‘தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்ளும் ‘ ஒரு சட்டத்தினை இயற்றுவதில் உள்ளதை விட அதிகம்:-)
குற்றவியல் நடைமுறை பற்றி தெளிவுபடுத்துவது நம் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு காரியம்
என நம்புகிறேன். அதாவது, ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்ற விஷயம் காவலருக்கு தெரிந்தவுடன் உடனடியாக அந்த விபரம் எழுத்தில் எழுதப்பட வேண்டும். அதற்கு பெயர்தான் முதல் தகவல் அறிக்கை (First Information Report FIR). எனவே, மு.த.அ. உடனடியாக எழுதப்பட்டு விடும். மு.த.அறிக்கையினை தொடர்ந்து காவலரின் புலன் விசாரணை (Investigation) தொடங்கும். பல்வேறு சாட்சிகளை விசாரிக்கும் காவலர், அவர்களது வாய்மொழித் தகவலை எழுத்தில் வடித்துக்
கொள்வார். குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேகரிப்பார். இதற்கிடையே குற்றம் செய்ததாக கருதப்படும் நபர் கைது செய்யப்படலாம். பிணையில் விடப்படலாம்.
புலன் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தினை செய்ததினை நிரூபிக்கும் சாட்சிகள் அல்லது முகாந்திரம் இல்லையெனில் காவலர் நீதிமன்றத்தில் அதனை தெரிவித்து சம்பந்தப்பட்டவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம். மாறாக, அவர் குற்றம் செய்ததற்கான
போதுமான ஆதாரங்கள் இருப்பின் சாட்சிகளிம் விசாரணை செய்த பொழுதில் எழுதிய அவர்களது வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள், பொருட்களின் விபரங்களை நீதிமன்றத்தில் காவலர் சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர் இன்ன இன்ன செயல்கள் செய்ததினால் இன்ன இன்ன குற்றம்
புரிந்துள்ளார் என கூறுவார். இதனையே குற்றப்பத்திரிக்கை (Charge Sheet) என்று கூறுவார்கள். இவ்வாறு விசாரணையை முடிக்க ஆறு மாத காலம் அவகாசம் உண்டு! ஆனால், தகுந்த காரணங்களுக்காக அது நீட்டிக்கப்படும்.
இவ்வாறாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், நீதிமன்றம் அதனை ஆராய்ந்து சாட்சிகளின் வாக்குமூலத்தின் (Statement) மூலம் குற்றம் நடைபெற்றது என்பது தெரியவந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றங்களை பதிவு செய்யும் (Framing of Charges). அதாவது அவர்
இன்னின்ன செயல்களினால் இன்னின்ன குற்றங்களை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுதல். இவ்விதமாக் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை கேள்விகளாக எழுதிவிடுவது விசாரணையை எளிதாக்குகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை…தீர்ப்பு…மேல் முறையீடு….விடுதலை:-))
எனவே நீங்கள் கூறியபடி மு.த.அறிக்கைக்கு ஒரு மாதம் வேண்டியதில்லை. உடனடியாக எழுதப்படும் மு.த.அறிக்கையில் பிரச்னையில்லை. ஆனால் புலன் விசாரணை முடிந்து குற்றம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒருவர் மந்திரியாக நியமிக்கப்படுவதுதான் ஒழுக்க நெறிக்கு மாறானது. ஏனெனில் அரசு குற்றம் சாட்டுகிறது. இல்லை என்று மறுப்பவர் எப்படி அதன் அங்கமாக இருக்க முடியும் ?
நமது பாரளுமன்ற ஜனநாயகத்தில் ‘அமைச்சரவைக்கான கூட்டுப் பொறுப்பு ‘என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது அமைச்சர்களுக்கிடையே அரசின் முடிவு குறித்து கருத்து மாறுபாடு இருத்தல் கூடாது ‘ இங்கு உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். வேறு அமைச்சர் அது குற்றம் இல்லை என்று மறுக்கிறார். இது நமது அரசு முறைக்கே எதிரானது.
அடுத்து, இவ்வாறாக ஒரு அரசு ஊழியர் குற்றம் சாட்டப்படுகையில் அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதன் காரணம், அவர் ஒரு அரசு ஊழியராக வழக்கு நடைபெறுகையில் மற்றொரு அரசு இயந்திரமான காவலரின் பணியினை கெடுக்க முடியும் என்ற பயம். ஒரு பியூனை இவ்வாறு
இடைக்கால பணி நீக்கம் செய்யும் அரசு, உண்மையிலேயே அவ்வித சக்தியுள்ள அமைச்சரை விட்டு வைக்கிறது.
இறுதியில், எனது யூகத்தில் இந்தியாவின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் எதிராக பொய்யாக ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும் நீங்கள் வேண்டிய சட்டத்தடை வந்தால் அவ்வித வழக்குகள் தாக்கல் செய்யப்படும். நான் மேலே கூறிய சாட்சிகளின் வாக்குமூலம் அவர்களால்
கையெழுத்திட்டு அளிக்கப்படுவதில்லை. பல வழக்குகளில் காவலர்களே எழுதிக் கொள்வதுதான். பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையில்தான் பிரமாண வாக்குமூலம் அளிப்பார்கள். அப்பொழுதுதான் காவலரின் குற்றப்பத்திரிக்கையில் கண்ட வாக்குமூலம் உண்மையா ? பொய்யா ? என்பது தெரியவரும். எனவே அப்பாவி ஒருவரின் மீது பொய்யாக வழக்கு ஜோடித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து, நீதிமன்றத்தினை குற்றத்தினை பதிவு செய்ய வைப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
எனவே சிவகுமார் அவர்கள் தெரிவித்திருக்கும் யோசனையான, நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா என்று தெரிவிப்பது சாத்தியமல்ல. எனெனில் புலன் விசாரணைக்கு அவ்வளவு சிறிய காலம் போதாது. ஊழல் வழக்குகளுக்கு பல மாதம் பிடிக்கும்.அவ்வாறே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், நான் கூறியபடி அதனை ஜோடிப்பது சிரமமல்ல. அடுத்தது அவ்வித உத்தரவினை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும். பின்னர் யாருடைய வழக்கில் இவ்வாறு தெரிவிப்பது ? தேர்தல் அறிவிக்கப்பட்டாலே ஒருவர் தேர்தலில் நிற்கும் பிரச்னை எழும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் இவ்வித பிரச்னைகளுக்குள் தன்னை ஈடுபடுத்துவது அதிக கடினமான ஒரு விஷயம்.
அல்லது சுருக்கமாக, ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே தேர்தலில் நிற்க முடியாது என்று சட்டமியற்றினால் குழப்பமிருக்காது. ஆனால், நமது நாட்டில் வழக்கு விசாரணைக்கு பிடிக்கும் காலத்தை கணக்கிடுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்நாளில் தேர்தலில்
நிற்க முடியாது. தேவையா ?
இதனை எழுதி முடிக்கையில் எனக்குத் தோன்றும் ஒரு யோசனை. இவ்வாறான பிரழ்ச்னை எழுகையில் பிரதமர்/ முதல்வர் இரு ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையர் அடங்கிய ஒரு குழுமத்தினை அமைத்து, அமைச்சராக நியமிக்கப்படவுள்ள ஒருவரின் மீதுள்ள வழக்கு பற்றிய விபரங்களை ஆராய்ந்து அவரை அமைச்சராக நியமித்தால் அந்த நியமனம், அந்த அமைச்சரின் மீதுள்ள வழக்கினை பாதிக்குமா என்ற விஷயத்தினை நடைமுறையினை ஏற்படுத்தலாம். அந்த பரிந்துரை பிரதமர்/ முதல்வரைகட்டுப்படுத்தாது எனினும் ஒரு பொதுக்கருத்து சாதனமாக பயன்படும்.
இந்த ஒரு பிரழ்ச்னையை சிந்திக்க, எழுத கிடைத்த சந்தர்ப்பத்திற்காக
நன்றியுடனும் அன்புடனும்
பிரபு ராஜதுரை
sharonprabhu@yahoo.com
- கவிதைகள்
- கோபம்
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- பொன்னாச்சிம்மா
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பட்டமரம்
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- ஆறுதலில்லா சுகம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- இப்பொழுதெல்லாம் ….
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இறைவனின் காதுகள்
- கவிதை
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- சூத்திரம்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- கடிதம் ஜூன் 24, 2004
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- Terminal (2004)
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- உடன்பிறப்பே
- கடிதம் -ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- சொர்க்கம்
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- காகித வீடு…
- இல்லம்…
- குழந்தை…
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- கடிதம் ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25